தெய்வத் தமிழ்

தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

கோபூஜை – பசுவை பூஜிப்பது ஏன்?

1 min read
<p><img class=" alignleft size-full wp-image-457" src="http://localhost/deivathamil/wp-content/uploads/2011/01/kamadenu.jpg" border="0" width="200" height="200" align="left" style="float: left; border: 1px solid black; margin: 4px;" />நாம் சில வீடுகளுக்குப் போகும்போது பசுவின் இந்தப் படத்தை பூஜிக்கத் தகுந்ததாக மாட்டி வைத்திருப்பதைப் பார்க்கலாம். அது என்ன பசுவின் உடலில் இத்தனை தெய்வங்களின் படங்களை வரைந்திருக்கிறார்கள் என்றெல்லாம் தோன்றும்.</p> <p>காரணம்,பசு தெய்வாம்சம் பொருந்தியது. ‘கவாம் அங்கேஷு திஷ்டந்தி புவநாநி சதுர்தச’ என்பது புராணத்தில் கூறப்பட்ட வாக்கு. பசுவின் அங்கங்களில் ஈரேழு பதினாலு உலகங்களும் அடங்கியிருக்கின்றன என்பது இதன் பொருள்.</p>

 

இதை எப்படிச் செய்ய வேண்டும்?

சிலர் மந்திரப் பூர்வமாகச் செய்வார்கள். எல்லோருக்கும் பொதுவான வழிபாட்டு முறையும் உள்ளது.

அன்றைய நாளில் கோபூஜையுடன் இந்திர பூஜையும் செய்யும் வழக்கமும் உள்ளது. இல்லத்தில் விசாலமான இடத்தில் பூஜையைத் தொடங்க வேண்டும். அதிகாலை பசுவையும் கன்றையும் நன்றாகக் குளிப்பாட்டி, மஞ்சள் குங்குமம் சந்தனம் இட்டு அலங்கரித்து பூஜை செய்யும் இடத்தில் கட்டி வைக்கவேண்டும். மற்றோர் இடத்தில் பூஜைக்கு வேண்டிய பொருள்களை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நுனி இலையில் அல்லது தாம்பாளத்தில் மஞ்சள்பொடியைப் பிடித்து வைத்து, விக்னேஸ்வரரைப் பூஜிக்க வேண்டும். இன்னொரு நுனி இலையில் சர்க்கரைப் பொங்கல், தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு இவற்றை வைத்து இந்திரனுக்கு நிவேதனம் செய்த பிறகு பசுவுக்கு நிவேதனம் செய்ய வேண்டும். பசுவுக்குப் பொங்கலைக் கொடுக்கும்போது, சூடு இல்லாமல், பொங்கலை நன்றாக ஆறவைத்து மிதமாகக் கொடுக்க வேண்டும். அகத்திக்கீரையும் கொடுக்கலாம். பிறகு தாம்பூலம் கொடுத்து, கர்ப்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். நிறைவில் கோமாதாவிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ரட்சமாம் ரட்சமே கேஹம் ரட்சமே புத்ர பௌத்ரகான்

ரட்ச கோஷ்டம் ரட்சபசூன் குருதேனூ: பயஸ்விநீ:

அனயா பூஜயா இந்த்ர: ப்ரீயதாம் காமதேனு ப்ரீயதாம்||

பிரார்த்தனை செய்து முடித்த பிறகு வேண்டுதலைச் சொல்லி பசுவை பிரதட்சிணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். அதற்கான பிரதட்சிண நமஸ்கார மந்திரம் இது…

கவாமங்கேஷு திஷ்டந்தி புவனானி சதுர்தச|

யஸ்மாத் தஸ்மாச் சிவம் மே ஸ்யாத் இஹலோகே பரத்ர ச||

பசுவின் அங்கங்களில் பதினான்கு உலகங்களும் இருப்பதால், இவ்வுலகிலும் பரலோகத்திலும் எனக்கு மங்களம் அளிக்கட்டும் என்பது இதன் பொருள்…