108 திருத்தலங்கள் தமிழில் அர்ச்சனை (திருத்தலம் – தாயார் – பெருமாள்)

விஷ்ணு ஆலயம்

74" />

திருவரங்கநகர் அரங்கநாச்சியார் சமேத அழகியமணவாளனே போற்றி

திருஉறையூர்மேவும் உறையூர்வல்லி சமேத உத்தமனே போற்றி

திருத்தஞ்சையாளி செங்கமலவல்லி சமேத பரம்பொருளே போற்றி

திருஅன்பில்வாழ் அழகியவல்லி சமேத சுந்தரராஜனே போற்றி

திருக்கரம்பனூர் பூர்வதேவிநாயகி சமேத புருடோத்தமனே போற்றி

திருவெள்ளறை பங்கஜவல்லிநாயகி சமேத புண்டரீகாட்சனே போற்றி

திருபுள்ளம்பூதங்குடி பொற்றாமரையாள் சமேத வல்லிராமனே போற்றி

திருப்பேர்நகர் கமலவல்லிநாச்சியார் சமேத அப்பக்கூடத்தானே போற்றி

திருஆதனுர் சீரங்கநாயகி சமேத ஆண்டளக்குமய்யனே போற்றி

திருவழுந்தூர் செங்கமலவல்லி சமேத ஆமருவியப்பனே போற்றி

திருசிறுபுலியூர் திருமாமகள்நாச்சியார் சமேத அருமாகடலமுதனே போற்றி

திருச்சேறைநகர்வாழ் சாரநாயகி சமேத சாரநாதப்பெருமானே போற்றி

திருச்சங்கநாண்மதியம் தலைச்சங்கநாயகி சமேத வெண்சுடரே போற்றி

திருக்குடந்தைமேவும் கோமலவல்லி சமேத ஆராவமுதனே போற்றி

திருக்கண்டியூர் கமலவல்லித்தாயார் சமேத கமலவல்லிராமனே போற்றி

திருவிண்ணகர் பூமிதேவிநாச்சியார் சமேத ஒப்பிலாஅப்பனே போற்றி

திருக்கண்ணபுரம் கண்ணபுரநாயகி சமேத சௌரிராஜபெருமானே போற்றி

திருவாலிதிருநகர் அம்ருதகடவல்லி சமேத வயலாலிமணவாளனே போற்றி

திருநாகைமேவும் சௌந்தர்யவல்லி சமேத சௌந்தர்யராசனே போற்றி

திருநாச்சியார்கோயில் நம்பிக்கைநாச்சியார் சமேத நறையூர்நம்பியே போற்றி

திருநாதன்கோயில் செண்பகவல்லி சமேத நந்திபுரவிண்ணகரனே போற்றி

திருவிந்தளுர்திகழ் பரிமளரங்கநாயகி சமேத பரிமளரங்கநாதனே போற்றி

திருச்சித்திரகூடம்வாழ் புண்டரீகவல்லி சமேத கோவிந்தராசனே போற்றி

திருக்காழிசீராமவிண்ணகர லோகநாயகி சமேத தாடாளனே போற்றி

திருக்கூடலுர் பத்மாசனவல்லி சமேத வையம்காத்தபெருமானே போற்றி

திருக்கண்ணங்குடிதிகழ் அரவிந்தவல்லி சமேத தாமோதரனே போற்றி

திருக்கண்ணமங்கை கமலவல்லி சமேத பக்தவத்சலப் பெருமானே போற்றி

திருக்கவித்தலம்மருவிடும் பொற்றாமரையாள் சமேத கஜேந்திரவரதனே போற்றி

திருவெள்ளியங்குடிவாழ் மரகதவல்லி சமேத கோலவல்லிராமனே போற்றி

திருமணிமாடக்கோயில் புண்டரீகவல்லி சமேத நரநாராயணனே போற்றி

திருவைகுந்தவிண்ணகர் வைகுந்தவல்லி சமேத வைகுந்தநாதனே போற்றி

திருஅரிமேயவிண்ணகர் அம்ருதகடவல்லி சமேத குடமாடுகூத்தனே போற்றி

திருத்தேவனார்தொகை கடல்மகள்நாச்சியார் சமேத தெய்வநாயகனே போற்றி

திருவண்புருடோத்தமம் புருடோத்தமநாயகி சமேத புருடோத்தமனே போற்றி

திருசெம்பொன்செய்கோயில் அல்லிமலர்நாயகி சமேத பேரருளாளனே போற்றி

திருத்தெற்றியம்பலம்வாழ் செங்கமலவல்லி சமேத செங்கண்மாலனே போற்றி

திருமணிக்கூடம் திருமகள்நாச்சியார் சமேத மணிக்கூடநாயகனே போற்றி

திருக்காவளம்பாடி செங்கமலநாச்சியார் சமேத கோபாலகிருட்டினனே போற்றி

திருவெள்ளக்குளம் அலர்மேல்மங்கை சமேத நாங்கூர்செல்வனே போற்றி

திருபார்த்தன்பள்ளி தாமரைநாயகி சமேத தாமரையாள்கேள்வனே போற்றி

திருமாலிருஞ்சோலை சுந்தரவல்லிநாச்சியார் சமேத சுந்தரராசனே போற்றி

திருக்கோட்டியூர் திருமாமகள்நாச்சியார் சமேத சௌம்யநாராயணனே போற்றி

திருமெய்யம்அமர்ந்த சுந்தரவல்லித்தாயார் சமேத சத்யகிரிநாதனே போற்றி

திருப்புல்லாணி கல்யாணவல்லி சமேத கல்யாணசெகன்னாதனே போற்றி

திருத்தண்காலுர் செங்கமலத்தாயார் சமேத தண்காலப்பனே போற்றி

திருமோகூர்திகழ் மேகவல்லிநாயகி சமேத காளமேகப்பெருமானே போற்றி

திருக்கூடலழகர் வகுளவல்லிநாச்சியார் சமேத மதுரைஅழகனே போற்றி

திருவில்லிபுத்தூர் கோதைநாச்சியார் சமேத ரங்கமன்னனே போற்றி

திருக்குருகூர்வாழ் குருகூர்வல்லித்தாயார் சமேத ஆதிநாதனே போற்றி

திருத்தொலைவில்லிமங்கலம் கருந்தடங்கண்ணி சமேத தேவபிரானே போற்றி

திருசிரீவரமங்கை சிரீவரமங்கைத்தாயார் சமேத தெய்வநாயகனே போற்றி

(தென்) திருப்பேர்மருவும் திருப்பேரைநாச்சியார் சமேத நிகரில்முகில்வண்ணனே போற்றி

திருவைகுண்டம் வைகுந்தவல்லி சமேத வைகுந்தநாயகனே போற்றி

திருபுளிங்குடிமேவும் புளிங்குடிவல்லி சமேத காய்சினவேந்தனே போற்றி

திருவரகுணமங்கைவாழ் வரகுணவல்லி சமேத விசயனனே போற்றி

திருதென்குளந்தைதிகழ் குழந்தைவல்லி சமேத மாயக்கூத்தனே போற்றி

திருக்குறுங்குடிவாழ் குறுங்குடிவல்லி சமேத நம்பிராசனே போற்றி

திருக்கோளுர் அவதரித்த குமுதவல்லி சமேத வைத்தமாநிதியே போற்றி

திருவனந்தபுரம் ஹரிலஷ்மிதாயார் சமேத அனந்தபத்மநாபனே போற்றி

திருவண்பரிசாரம் கமலவல்லிநாச்சியார் சமேத திருவாழ்மார்பனே போற்றி

திருகாட்கரைமேவும் பெருஞ்செல்வி சமேத அருள்பரியும்அழகனே போற்றி

திருமூழிக்களத்துறையும் மதுரவேணிநாச்சியார் சமேத அருமையப்பனே போற்றி

திருப்புலியூர்திகழ் பொற்கொடிநாச்சியார் சமேத மாயப்பிரானே போற்றி

திருச்செங்குன்னூர் செங்கமலவல்லிநாயகி சமேத இமயவரப்பனே போற்றி

திருநாவாய்மேவும் மலர்மங்கைநாச்சியார் சமேத திருநாராயணனே போற்றி

திருவல்லவாழ் செல்வத்திருக்கொழுந்தே சமேத கோலப்பிரானே போற்றி

திருவண்வண்டூர் கமலவல்லிநாயகி சமேத பாம்பணையப்பனே போற்றி

திருவாட்டாறு மரகதவல்லிநாயகி சமேத ஆதிகேசவபெருமானே போற்றி

திருவித்துவக்கோடு வித்துவக்கோட்டுவல்லி சமேத உய்யவந்தபெருமானே போற்றி

திருக்கடித்தானம் கற்பகவல்லிநாச்சியார் சமேத அற்புதநாராயணனே போற்றி

திருவாறன்விளையுறை பத்மாசனவல்லி சமேத திருக்குறளப்பனே போற்றி

திருவயிந்திரபுரம்மருவும் வைகுந்தநாயகி சமேத தெய்வநாயகனே போற்றி

திருக்கோவிலூர் பூங்கோவல்நாச்சியார் சமேத திருவிக்கிரமனே போற்றி

திருக்கச்சிநகர் பெருந்தேவிமகாதேவி சமேத அருள்புரியும் வரதனே போற்றி

திருஅட்டபுயகரம் அலர்மங்கைதாயார் சமேத ஆதிகேசவனே போற்றி

திருத்தண்காதிகழ் மரகதவல்லிதாயார் சமேத தீபப்ரகாசனே போற்றி

திருவேளுக்கை வேளுக்கைவல்லி சமேத முகுந்தநாயகனே போற்றி

திருப்பாடகம் ருக்மணிசத்யபாமாநாயகி சமேத பாண்டவதூதனே போற்றி

திருநீரகம்மருவும் நிலமங்கைவல்லி சமேத ஜெகதீசனே போற்றி

திருநிலாத்திங்கள்துண்டத்தாயார் சமேத நிர்மலனே போற்றி

திருஊரகம் அமுதவல்லிநாச்சியார் சமேத உலகளந்தபாதனே போற்றி

திருவெஃகா கோமளவல்லி சமேத சொன்னவண்ணம்செய்தபெருமானே போற்றி

திருகாரகம் பத்மாமணிநாச்சியார் சமேத கருணாகரனே போற்றி

திருகார்வானம் கமலவல்லிநாயகி சமேத கார்வானத்துள்ளாய்கள்வனே போற்றி

திருகள்வனூர் அஞ்சிலவல்லி சமேத ஆதிவராகப்பெருமானே போற்றி

திருப்பவளவண்ணர் பவளவல்லி சமேத மகரதவண்ணனே போற்றி

திருபரமேச்சுரவிண்ணகர் வைகுந்தவல்லி சமேத பெருமானே போற்றி

திருப்புட்குழிமருவும் மரகதவல்லிநாயகி சமேத விஜயராகவனே போற்றி

திருநின்றவூர்திகழும் சுதாவல்லி சமேத பக்தவத்சலனே போற்றி

திருவௌவுள்மேவும் கனகவல்லி சமேத வீரராகவபெருமானே போற்றி

திருநீர்மலைமேவும் அணிமலர்மங்கை சமேத நீர்வண்ணனே போற்றி

திருவிடவெந்தை கோமளவல்லி சமேத வராகப்பெருமானே போற்றி

திருக்கடல்மல்லை நிலமங்கைநாச்சியார் சமேத தலசயனத்துறைவனே போற்றி

திருவல்லிகேணி வேதவல்லிநாச்சியார் சமேத பார்த்தசாரதியே போற்றி

திருக்கடிகைமீதமர்ந்த அம்ருதவல்லி சமேத உலகாளும்நரசிங்கனே போற்றி

திருவேங்கடமாமலை அலர்மேல்மங்கை சமேத வேங்கடநாதனே போற்றி

திருச்சிங்கவேழ்குன்றம் செஞ்சுலெஷ்மி சமேத நரசிம்மனே போற்றி

திருஅயோத்திமகிழ் சீதாபிராட்டியார் சமேத ராமபிரானே போற்றி

திருநைமிசாரண்யம் ஸ்ரீஹரிலஷ்மி சமேத தேவராஜனே போற்றி

திருசாளக்கிராமம் பூதேவிநாச்சியார் சமேத தேவிநாதனே போற்றி

திருவதரியாச்சிராமம் அரவிந்தவல்லி சமேத வதரிநாராயணனே போற்றி

திருக்கண்டங்கடிநகர் புண்டரீகவல்லி சமேத புருடோத்தமனே போற்றி

திருப்பரிதிமேவிடும் பரிமளவல்லிநாயகி சமேத பரிமளநாதனே போற்றி

திருவடமதுரைமருவும் வைகுந்தவல்லி சமேத கோவர்த்தனேசனே போற்றி

திருத்துவராபதி கல்யாணநாச்சியார் சமேத கல்யாணநாராயணனே போற்றி

திருவாய்ப்பாடி ருக்மணிசத்யபாமா சமேத நவமோஹனகிருஷ்ணனே போற்றி

திருப்பாற்கடல் கடல்மகள்நாச்சியார் சமேத பாற்கடல்நாதனே போற்றி

திருநாடுமருவிடும் பெரியபிராட்டி சமேத பரமபதநாதனே போற்றி

ஆக்கம்: கவிநயச்செல்வர் பல்லவி சிஷ்யன் அருட்கவி மன்னை பாசந்தி (பார்த்தசாரதி சந்தானம்)

www.mannaiparthasarathy.org

9884424192 / 9841724192 / 22421148

Leave a Reply