e0af8d-e0ae86e0aeb0e0af8be0ae95.jpg" style="display: block; margin: 1em auto">
ஸ்ரீ அபிராமி ஸ்தோத்ரம்
நமஸ்தே லலிதே!
தேவி ஸ்ரீ மந்ஸிம்ஹாஸநேச்வரி !
பக்தாநாம் இஷ்டதே ! மாத:
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.
ஸ்ரீ லலிதையே! உனக்கு நமஸ்காரம். தேவி, எழில்மிகு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவளே! அடியார்கள் கோருவதைத் தருபவளே! ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்!
சந்த்ரோதயம் க்ருதவதி!
தாடங்கேந , மஹேச்வரி
ஆயுர் தேஹி ஜகத்மாத:
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.
மகேஸ்வரி, ஒரு தாடங்கத்தின் மூலம் முழுநிலவை உண்டாக்கக் கூடியவள் நீ. பக்தர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும் ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்!
ஸுதாகடேச ஸ்ரீ காந்தே! சரணாகதவத்ஸலே .
ஆரோக்யம் தேஹிமே நித்யம்
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.
அமிர்தகடேஸ்வரனை காந்தனாக அடைந்து சரண் அடைந்தவர்களைக் காப்பாற்றும் வாத்சல்ய சுபாவம் உள்ளவளே! அம்மா, அபிராமியே உனக்கு நமஸ்காரம். எனக்கு நாளும் நல்ல ஆரோக்கியத்தை அருளுவாய்!
கல்யாணி! மங்களம் – தேஹி, ஜகன்மங்கள காரிணி!
ஐச்வர்யம் தேஹி-மே, நித்யம்.
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.
கல்யாணி, மங்களத்தைக் கொடுப்பவளே! சர்வ லோகங்களையும் மங்களகரமாக்குபவளே! நிலையான ஐஸ்வர்யம் கிடைக்கும்படி செய்வாயாக! அபிராமித்தாயே உனக்கு நமஸ்காரம்!
சந்த்ர மண்டலமத்யஸ்தே! மஹாத்ரிபுரஸுந்தரி!
ஸ்ரீ சக்ரராஜ நிலயே ஹி
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.
சந்திர மண்டலத்தின் நடுவே அமர்ந்த மகாதிரிபுர சுந்தரி நீயே அல்லவா! ஸ்ரீ சக்ர ராஜதானியின் அரசியான அபிராமியே உனக்கு நமஸ்காரம்!
ராஜீவலோசனே, பூர்ணே!
பூர்ண சந்த்ரவிதாயினி!
ஸௌபாக்யம் தேஹிமே நித்யம்.
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.
தாமரை போன்ற கண்ணழகியே! முழுமையானவளே, முழு நிலவைக் காட்டுபவளே, எனக்கு எப்பொழுதும் சௌபாக்கியத்தை அருளுவாயாக! ஸ்ரீ அபிராமியே, உனக்கு நமஸ்காரம்!
கணேசஸ்கந்த ஜநநி!
வேதரூபே! தனேச்வரி!
வித்யாம் ச தேஹி மே கீர்த்திம்
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.
ஆனைமுகனுக்கும் ஆறுமுகனுக்கும் அன்னையே, வேத சொரூபியே! செல்வத்துக்கு ஈஸ்வரியே. எனக்கு வித்தையில் கீர்த்தியைத் தருபவளே! ஸ்ரீ அபிராமியே! உனக்கு நமஸ்காரம்!
ஸுவாஸி நீப்ரியே மாத: ஸௌமங்கல்ய விவர்த்தினி!
மாங்கல்யம், தேஹிமே நித்யம்
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.
சுவாசினிகளால் போற்றப்படுபளே, பெண்கள் கணவருடன் வாழும் காலத்தை அதிகரித்து சௌமாங்கல்ய பதவியை அதிகரிக்கச் செய்பவளே. எனக்கு நித்ய சௌமாங்கல்யத்தை அருள்வாய் தாயே! ஸ்ரீ அபிராமியே! உனக்கு நமஸ்காரம்!
மார்க்கண்டேய மஹாபக்த ஸுப்ரஹ்மண்ய ஸுபூஜிதே.
ஸ்ரீ ராஜராஜேச்வரீ த்வம்ஹி!
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.
மார்கண்டேயராலும் மகாபக்தரான சுப்ரமண்யர் என்ற அபிராமி பட்டராலும் நன்கு பூஜை செய்து வழிபடப் பட்டவளே! ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நீயே அல்லவா. ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்!
ஸாந்நித்யம் குரு கல்யாணி
மம பூஜா க்ருஹே சுபே
பிம்பே தீபே ததா புஷ்பே
ஹரித்ரா குங்குமே மம
கல்யாணியே! மங்களம் அருள்பவளே! என்னுடைய பூஜாகிரகத்தில் உள்ள திவ்யமான உனது பிம்பம், தீபம், புஷ்பம் மற்றும் மஞ்சள் குங்குமத்தை உன்னருளால் சாந்நித்தியமடையச் செய்வாயாக! உனது அருள் நிறைந்ததாக ஆக்குவாயாக!
ஸ்ரீ அபிராம்யா இதம்
ஸ்தோத்ரம்
ய: படேத் சக்திஸந்நிதௌ
ஆயுர் பலம் யசோ வர்ச்சோ
மங்களம் ச பவேத் ஸுகம்
ஸ்ரீ அபிராமியன்னையின் இந்த துதியினை அகம் ஒன்றி தினம் சொல்ல எனக்கு ஆயுள், பலம், கீர்த்தி, ஆரோக்கியம் இவற்றோடு சகல சௌபாக்யமும் நிச்சயம் எனக்கும் கிடைக்க அருள் புரிவாய் அபிராமி தாயே
சௌமாங்கல்யம், ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், கல்வி, எல்லாம் தரக்கூடிய மந்த்ரம்..! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.