.jpg" style="display: block; margin: 1em auto">
ஜீவன் முக்தி
ஜீவன் முக்தி அத்வைத ஸித்தாந்த நூலில் சிறப்பாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. இதை ஸ்ருதியும் அநேக வழிகளில் ஆதரிக்கிறது, உதாரணமாக
“अत्र ब्रह्म समश्र्नुते”
என்ற வாக்கின் மூலம் இந்த சரீரம் இருக்கும் பொழுதே முக்தி பெறுவது தான் ஜீவன் முக்தி என்பது தெரிகிறது.
சிரவணம் மனனம் மற்றும் நிதித்யாஸனம்
(கேட்பது, மனம் நிலைத்தல், தியானம்) ஆகியவைகளை ஆழ்ந்த அப்பியாசம் செய்து மனத்தையும் வாசனைகளையும் அழித்தபின் ஜீவன் முக்தி கிட்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
ஜீவன் முக்தி அடைந்த அவனுடைய நிலை எப்படி இருக்கும் என்று ஸ்ரீ ஸதாசிவ பிரஹமேந்த்ரரின் கீழ்கண்ட ஸ்லோகம் விவரிக்கிறது..
சூரியனே குளிர்ச்சி அடைந்தாலும் அல்லது சந்திரனே சூடாக ஆகிவிட்டாலும் நெருப்பு கீழ்நோக்கி ஜ்வாலை விட்டாலும் கூட ஜீவனுக்கு வியப்பு ஏற்படாது.. இவ்வாறு கூறியிருக்கிறார்.
ஜனகரும்
“மிதிலை நகரமே எரிந்து போனாலும் எனக்கு எவ்விளைவும் ஏற்படாது” என்று குறிப்பிடுகிறார். எப்பொழுதும் எங்கும் ப்ரஹமத்தை ஸச்சிதானந்த (ஸத்யம் சித், ஆனந்தம்) உருவத்தில் காணும் ஜீவனுக்கு எந்த விளைவும் ஏற்படாது என்பதை இது காண்பிக்கிறது.
கிருஷ்ணபகவான் ஜீவன் முக்தனிடம் காணப்படும் குணங்களை சித்தரித்திருக்கிறார். ஜீவன் முகத்துக்கு எதனிடமும் த்வேஷம் கிடையாது. புகழையும் கண்டனத்தையும் சமமாக கருதுகின்ற அவன், மௌனமாகவும் திருப்தி உள்ளவனாகவும், தங்க இடம் இல்லாதவனாகவும், திட சித்தம் கொண்டவனாகவும் பக்தி கொண்டவனாகவும் இருக்கிறான். இப்படிப்பட்டவனை எனக்கு பிடிக்கும் என்பது பகவானின் அருள்வாக்கு.
சுகர் வாமதேவர் தத்தாத்ரேயர் ஆகியோர் புகழ்பெற்ற ஜீவன் முக்தர்கள். சமீப காலத்தில் வாழ்ந்த ஸ்ரீ ஸதாசிவ ப்ரஹமேந்திரரும் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாஸ்வாமிகளும் ஸ்ரீமத் அபிநவ வித்யார்த்தீர்த்த மஹாஸ்வாமிகளும் ஜீவன் முக்தருக்கு பெரிய உதாரணங்கள்.. அவர்களுடைய பெயர்களை ஜபித்தாலே நன்மைகள் பல கிடைக்கும். மானிட ஜன்மம் எடுத்ததின் உன்னத லட்சியம் முக்தி பெறுவதே. ஞானம் உதயமான அந்தக் க்ஷணத்திலேயே இந்த நிலை கிட்டிவிடும்.
ஜீவன் முக்தி: ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.