மரம் சொன்ன அறம்!

ஆன்மிக கட்டுரைகள்

மொத்த ஆப்பிளையும் பறித்தான். பிறகு நெடுநாள் வரவேயில்லை. மரம் மறுபடி சோகமுற்றது.

பையன் பெரியவனாகிவிட்டான். அப்போது மரத்தடிக்கு வந்தான். “வா விளையாடு’ என்றது மரம்.

“எனக்கு குடும்பம் வந்துவிட்டது. ஒரு வீடு வேண்டும். உன்னால் உதவ முடியுமா மரமே” என்று கேட்டான்.

“கிளைகளை வெட்டி வீடு கட்டிக் கொள்” என்றது மரம். எல்லா கிளைகளையும் வெட்டினான். மகிழ்ச்சியாக வெளியேறினான். மரத்திற்கு சந்தோஷம். ஆனால் அவன் திரும்பவேயில்லை! அதனால் மரம் மறுபடி சோகமுற்றது.

ஒரு கோடைநாள்… திரும்பவும் வந்தான் கிழவனாக. “நான் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவேண்டும். ஒரு படகு தரமுடியுமா?” என்று மறுபடி கேட்டான் மரத்திடம்.

“என்னுடைய அடித்தண்டை வெட்டி படகு அமைத்துக்கொள்” என்றது மரம். அதையும் செய்தான். நிரம்ப வருடங்களுக்கு அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை. திரும்ப வந்தான் மரத்திடம்.

“நான் ஆடி ஓய்ந்துவிட்டேன். எனக்குத் தேவை ஓய்வு. இடமெங்கே ஓய்வுபெற?”

“ஓய்வு பெற பழைய மரத்தின் வேர்கள் அருமையான இடம் . என்னுடன் உட்கார். ”

மனிதனும் உட்கார்ந்தான். மரமும் ஆனந்தத்தால் கண்ணீர் விட்டது.

இந்தக் கதையால் பாடமேதும் உண்டா? பையன் மரத்திடம் அதிக உரிமை கொண்டு துன்புறுத்தினான். ஆனால் மரமோ அவனுக்கு உதவிகள் செய்து கொண்டே இருந்தது.

தம்மைக் காக்க, பெற்றோர் கடன் பட்டிருக்கிறார்கள் என்று எண்ணுகிறோம். காலம் கடந்த பின்னர் அழுவதால் ஏதும் பயனுண்டா?

இது எந்தக் காலத்துக்கும் பொருந்தும் கதை! தற்போது அமெரிக்கா சென்று டாலர் குவிக்கும் மகன்கள் பெற்றோரை அனாதை இல்லத்தில் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார்கள் – நாளை நமக்கும் அதே கதிதான் என்பதை மறந்துவிட்டு!

– தாமல்கண்ணன்

Leave a Reply