யோகம் பயிலும் வாழ்க்கை

ஆன்மிக கட்டுரைகள்

பின்னர் சித்தயோகம், சகஜயோகம், ஹடயோகம் போன்ற யோக முறைகள் தோன்றின. யோக மார்க்கத்தை விஞ் ஞான அடிப்படையில் ஒரு தனிப் பெரும் நூலாக ஆக்கிய சிறப்பும் பெருமையும் மாமுனிவர் பதஞ்சலி யையே சாரும். இவர் இந்த நூலை சிறுசிறு வாக்கியங்கள் (சூத்திரங்கள்) மூலம் நன்கு விளக்கியுள்ளார். இதை ராஜயோகம் என்றும் அஷ்டாங்க யோகம் எனவும் அழைப்பர். இந்நூலில் எட்டு அங்கங்களான யமா, நியமா, ஆஸனா, பிராணாயாமா, பிரத்யாஹாரா, தாரணா, தியானா, சமாதி இவைகளை மோக்ஷத்துக்கு அழைத்துச் செல்லும் படிகளாக பதஞ்சலி கூறியுள்ளார். இவை பயிற்சி மார்ஓணகங்களேயாகும்.

யோகம் என்பது, மனது, உடல், கவனம், சங்கல்பம், உணர்ச்சி வசமாவது, வீண் பேராசை இவற்றில் செல்லும் மனத்தின் மீது ஆட்சி செலுத்து வதில் தான் அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது. ஆக மனதை அடக்குவதில் வெற்றி காண்பவனே யோகியாவான்.

பதஞ்சலி முனிவர் தன்னு டைய நூலில் தொடக்க சூத்திரமாக “யோக: சித்தவிருத்தி நிரோத:” எனக் கூறியுள்ளார். அதாவது மன அலைகளைத் தடுத்து ஒரு வழியில் திருப்புவது தான் யோகமார்க்கம் என உபதேசிக்கிறார். மனதைத் தூய்மைப்படுத்த எழுந்ததே யோகசாதனை. இதில் எவ்வகை மர்மத்துக்கும் சந்தேகத்துக்கும் இடமில்லை.

(1) யமா என்றால் அஹிம்சை, பிறர்பால் நட்பு, குற்றம் புரியாமை, மனம், வாக்கு, செயல் இவற்றில் நேர்மை, ஒழுக்கம் முதலிய நற்குணங்களை வளர்த்து வாழ்வதே யாகும். (2) நியமம் என்றால் உடல் சுத்தி, ஆகாரக் கட்டுப்பாடு, இறை உணர்ச்சி, வழிபாடு, பெண் இச்சையிலிருந்து விலகல், தூய்மை உள்ளம் முதலியவைகளாகும்.

(3) ஆசனம். இதில் உடல் பயிற்சி, சூரிய நமஸ்காரம், பத்மாசனம், சித்தாசனம் முதலான ஆசனப் பயிற்சிகளைக் கையாளுதலாகும். இவை பிராணாயாமத்துக்குப் பெரிதும் உதவும். மற்றும் ஹடயோகம், மூல பந்தம், உட்யாண பந்தம், ஜாலேந்திர பந்தம், நௌலி முதலியவற்றைப் போதிக்கும் ஒரு தனிக்கலையாகும்.

(4) பிராணாயாமம்: இதில் மிகுந்த எச்சரிக்கையும், நுண் ணறிவும் தேவை. ஒரு சிறந்த ஆசிரியரின் மூலம் இதைப் பயில வேண்டும். இடது நாசியால் மூச்சை இழுத்து, வலது நாசியால் விடுவது, பின் வலது நாசியால் மூச்சை இழுத்து இடது நாசியால் விடுவது பெரும் தீமை பயக்கும். மூச்சை இஷ்டப்படி அடக்குவதும் விபரீதமாகும். நாடி சுத்தத்துக்கு ஏற்பட்டதே இந்த பிராணாயாம மாகும். (5) பிரத்யாஹாரம். உலக விவகாரங்களான கேளிக்கை முதலியவற்றிலிருந்து மனதைத் திருப்புவதாகும். (6) தாரணா என்றால் மனதை ஒரு புனித உருவம் அல்லது, இருதய மத்தி, சிரசு மத்தி ஆகியவற்றில் நிலைத்து நிற்கச் செய்யும் சாதனையாகும்.

(7) தியானா என்றால் மனதை அலையவிடாமல் காத்து நீடித்து ஒரு நிலைப்படுத்துவதாகும். (8) சமாதி – இது தியானத்தின் முற்றின நிலையாகும். நீடித்த காலம் மனதை அசைவற்ற ஆத்ம அறிவில் லயிக்கச் செய்வதாகும். சமாதி நிலை அடைந்தவர்களுக்கு பல சித்திகள் கை கூடும். பதஞ்சலி முனிவர், எந்த ஒரு உயிரி னத்துக்கும் தீங்கு செய்வதில்லை என்ற முடிவில் ஒருவன் நிலைத்து நின்றால், எல்லா உயிர்களும் அவன் முன்னால் தங்கள் விரோதத்தை மறந்து நிற்கும் எனக் கூறியுள்ளார்.

பதஞ்சலி முனிவரின் யோகம் துறவி களுக்குத்தான் ஏற்பட்டது. மற்றவர்களுக்கு அல்ல என்று எண்ணுவது முற்றி லும் தவறாகும். நம் எல்லோருக்கும் இது பொருந்தும். மனதைத் தூய்மைப் படுத்துவதற்கும், அதை சாந்தப்படுத்து வதற்கும்தான் யோக சாதனை ஏற்பட் டுள்ளது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

அஹிம்சையும் சைவஉணவும்

மாமிச உணவு அஹிம்சைக்கு விரோதமாகும். காய்கறி உணவு அஹிம்சைக்கு ஏற்றதாகும். யோக வாழ்க்கையைக் கைக்கொள்ளுபவனுக்கு சைவ உணவு தான் நன்மை பயக்கும். மீன், முட்டை, மாமிச உணவினால் ஒருவனுக்குக் கிடைக்கும் உடல் சத்து, காய்கறி உண வினாலும் அதே அளவுக்குக் கிடைக் கும். இது விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து எடுத்த முடிவாகும்.

1985 -இல் நோபல் பரிசு பெற்ற இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகளான டாக்டர். மைகேல் எஸ்.பிரௌன் மற்றும் டாக்டர் ஜோஸப் எல்.கோலட் ஸ்டீன், ரத்தத்தில் குளோசெஸ்டிரால் அதிகமாவதைத் தடுக்க, இது அதிக மாகக் காணப்படும் முட்டைகள், மாமிச உணவுகளைக் கைவிட வேண்டுமெனக் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் காய்கறிகளிலும் பழங்களிலும் இந்த குளோசெஸ்டிரால் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

முட்டைகளில் வைடமின் பி காம்ப்ளக்ஸ், வைடமின் சி கால்ஷியம், புரதப் பொருள்கள் காணப்படவில்லை என்றும் அவர்கள் கண்டுபிடித்துக் குறிப்பிட்டுள்ளனர்.

புள்ளிவிவரங்கள் மூலம், 100 கிராம் முட்டையில் 13.3 அளவு புரதச் சத்தும், மீன்களில் 22.6 அளவும், மாமிசத்தில் 18.5 அளவும் உள்ளன என்றும், பச்சைப்பயறில் 24.0 அளவும், சோயா பருப்புகளில் 43.2 அளவும், நிலக்கடலையில் 31.9 அளவும் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனால் சைவ உணவு எவ்வளவு பயனுள்ளது என்பதை நாம் காணலாம்.

சாத்வீக உணவினால் மனம் சாத்வீகம் அடைகிறது என்பது யோகத் தத்துவமாகும். குடி, போதைப் பொருளைச் சாப்பிடுவது, புகை பிடித்தல் முதலியவை மூளையையும், இதயத்தையும் மிகவும் பாதிப்பவை என்பதை மருத்துவர்கள் நன்கு விவரித்துள்ளனர். சுவாச உறுப்பு களும் அதிகம் பாதிக்கப்படு கின்றன.

ஆக, யோகம், தியானம் பயிலும் அனைவரும் காய்கறி சேர்ந்த சைவ உணவுகளையும், பப்பாளி, வாழைப் பழம் முதலிய பழங்களையும், இளநீர் போன்ற திரவங்களையும் தவறா மல் சாப்பிட்டு வருவது மிகவும் அவசியமாகும். உடல் ஆரோக்கியமே மன ஆரோக்கியத்துக்கும், யோக சாதனைகளுக்கும் மிக அவசியமாகும்.

– கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி

Leave a Reply