குரு புஷ்ய யோக நாள்! லட்சுமி குபேர பூஜை செய்தால் ஐஸ்வர்யம் பெருகும்!

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்

78" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2020/05/lakshmi-kubera-pooja.jpg" alt="" width="696" height="572" />

லட்சுமி குபேர பூஜை செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெருகும்

வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்த நாள். பூசம் நட்சத்திரம் சனியின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரம். செல்வத்திற்கு அதிபதியான குரு பகவான் வியாழக் கிழமை பூசம் நட்சத்திரத்தில் அவதரித்துள்ளார். இதுபோல வியாழக்கிழமையும் பூசம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாள் குரு புஷ்ய யோக நாளாகும். வரும் வியாழக்கிழமை இத்தகைய சிறப்பு வாய்ந்த நல்ல நாள் வருகிறது. இந்த சுபமான நாளில் லட்சுமி குபேர பூஜை செய்தால் சகல செல்வ வளமும் பெருகும் என்பது நம்பிக்கை.

ஆள் செய்யாததை நாள் செய்யும் என்பார்கள். பொது வாகவே நல்ல காரியம் செய்யும் போது நாள் நட்சத்திரம் பார்த்து செய்வார்கள். சில நாட்களில் சில நட்சத்திரங்கள் இணைவது சில நன்மைகளை கொடுக்கும்.

அப்படிப்பட்ட நல்ல நாள்தான் குருவார மாகிய வியாழக்கிழமையும் பூசம் நட்சத்திரமும் இணைந்த நன்னாளாகும். இந்த நாள் குரு புஷ்ய அமிர்தயோக காலமாகும். நம்முடைய எண்ணங்களை பிரார்த்தனைகளை அன்னை மகாலட்சுமியிடம் கூற ஏற்ற நாளும் நேரமும் வரும் வியாழக்கிழமை இணைந்து வந்துள்ளது.

குரு புஷ்ய யோகம் நல்ல நாள்

மே 28ஆம் தேதி வியாழக்கிழமை பூசம் நட்சத்திரம் இணைந்த குரு புஷ்ய யோகம் வருகிறது. அதிகாலை 5.45 மணி முதல் காலை 7.27 மணிவரை பூஜை செய்யவும் நல்ல காரியங்கள் செய்யவும் ஏற்ற நேரமாகும்.

இதே போல இந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் 31ஆம் தேதி மாலை 7.49 மணி முதல் ஜனவரி 1, 2021 காலை 6.34 மணிவரை குரு புஷ்ய யோக காலமாகும்.

இந்த நாளில் வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி லட்சுமி குபேரன் படத்திற்கு முன்பாக காய்ச்சிய பாலில் ஏலாக்காய், கிராம்பு, சர்க்கரை கலந்து நைவேத்தியம் செய்ய வேண்டும். லட்சுமிகுபேரனுக்கு இனிப்பு பிடிக்கும். இனிப்பு நைவேத்தியம் செய்வதால் குபேரன் மகிழ்ச்சியோடு செல்வத்தை வாரி வழங்குவார்.

குரு புஷ்ய யோக நாளில் புது கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டலாம். புது மந்திரம் கற்றுக் கொள்ளலாம். குருவிடம், ஆசிரியரிடம் புதிய பாடம் கற்றுக்கொள்ள லாம். புதிய தொழில் தொடங்கலாம். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த நகைகள் வாங்கலாம் இதனால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். செல்வ வளமும் ஐஸ்வர்யமும் பெருகும். புது வாகனம் வாங்கலாம். புது வீடு, கடை வாங்க அட்வான்ஸ் கொடுக்கலாம்.

Leave a Reply