வாமனருக்கு உபநயனம் செய்தவர் யார் தெரியுமா?

கேள்வி-பதில்கள்

சுப்ரஸ்ஸன்னா மகாதேவன்

00" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2020/05/vamanar.jpg" alt="" width="724" height="476" />

கேள்விகள் பதில்கள்:

பகவான் ஶ்ரீகிருஷ்ணருக்கு நாமகரணம்/பெயர் சூட்டியவர்—*

கர்காசார்யார்.

ஹிரண்யகசிபு மனைவியின் பெயர்

கயாது.

துருவனுக்கு த்வாதசாக்ஷர மந்திரம் உபதேசம் செய்தவர்

தேவரிஷி நாரதர்

ஐந்து வயது குழந்தை துருவன் தபஸ் செய்த காலம்

ஐந்து மாதங்கள்

ஒரு இடத்திலும் நிலையாமல் இருப்பாய் என்று தேவரிஷி நாரதருக்கு சாபம் கொடுத்த இருவர்

தக்ஷன்,
ஜரா என்னும் பெண்.

நாரதருக்கு கொடுக்கப்பட்ட அந்த சாபம் பலிக்காத ஒரே சமயம்/இடம்

ஹிரண்யகசிபு தபஸ் செய்யப் போன போது, அவனது மனைவி கயாதுவின் கர்ப்பத்தில் இருந்த பிரஹலாதனைக் கொல்ல, இந்திரன் அவளை அபகரித்துச் சென்றான்.
அப்பொழுது தேவரிஷி நாரதர் அவளைக் காப்பாற்றி, அவள் கர்ப்பவதியாய் இருந்ததால், அவள் வேண்டிக் கொண்டபடி அவளை ஒரு ஆச்ரமத்தில் வைத்து, அவளது கணவன் தபஸ்ஸிலிருந்து திரும்பி வரும் வரை காப்பாற்றி வந்தார்.

ரிஷி/பிராமண சாபம் பலிக்காத ஒரே ஒருவர்

அந்த ரிஷி -துர்வாஸர்.
அந்த நபர்-அம்பரீஷன்.

பகவான் வாமனருக்கு உபநயனம்/பிரம்மோபதேசம் செய்வித்தவர்

காயத்ரீ மந்திரத்திற்கு தேவதையான சூரிய பகவான்.

பஞ்சாக்னி மத்தியில் தபஸ் செய்த மூவர்

(பஞ்சாக்னி என்றால், நான்கு புறமும் நெருப்பு,
உச்சியில் சூரியன்.
இந்த நிலையில் தபஸ் செய்வது.)

ஹிரண்யகசிபு,
பகீரதன்,
பார்வதிதேவி.

பிரம்மதேவர் சிருஷ்டியில் இல்லாத ஒரே அவதாரம்

நரசிம்மாவதாரம்.

தங்கள் கடைசி காலத்தில் “நாராயண” நாமம் சொன்னதால், நற்கதி அடைந்த மூவர்

அஜாமிளன்,
கஜேந்திரன்,
ஜடபரதர்.

Leave a Reply