சிருங்கேரி பெரியவரின் உபதேசத்தால் மனம் தெளிந்த பக்தர், புத்துணர்ச்சியுடன் தொழில் நடத்தத் திரும்பினார். ஆன்மீக வளர்ச்சியோடு, பொருளாதார வளர்ச்சியும் கண்டு மகிழ்ந்தார்.
ஸ்ரீசுவாமிகளை அனுகிய மற்றொரு பக்தர், “”நான் பணிபுரிந்துகொண்டிருக்கும் நிறுவனத்தின் உரிமையாளருடன் எனக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே நான் பணியிலிருந்து விலகி அவருக்குப் போட்டியாக வேறு நிறுவனத்தைத் தொடங்கப் போகிறேன். அதற்கு உங்கள் ஆசிகள் தேவை” என்றார். அதைக் கேட்ட ஸ்ரீ சுவாமிகள், “”நாம் சகல ஜீவராசிகளையும் நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நீ உன் நிறுவனத்தின் உரிமையாளரிடம் சென்று, இதுவரை அவர் உனக்களித்த ஆதரவிற்கு நன்றி செலுத்திவிட்டு, உன்னுடைய நிறுவனத்தைத் தொடங்கு” என்றருளினார்.
அந்த அன்பரும் அப்படியே செய்தார். அவருடைய முதலாளி அந்த பக்தரை வெகுவாகப் பாராட்டியதுடன், புதிய தொழில் தொடங்க பூரண ஆதரவையும் அளிப்பதாகக் கூறி, நல்லபடி வழியனுப்பி வைத்தார்.
ஆன்மீகத்தில் மட்டுமின்றி, லௌகீகத்திலும் வழிகாட்டி பக்தர்களை வழி நடத்தும் வள்ளலாகிய ஸ்ரீபாரதி தீர்த்த சங்கராசாரியாரின் சஷ்டியப்த பூர்த்தி விழாவும், வசந்த நவராத்திரி விழாவும் இம்மாதம் நான்காம் தேதி தொடங்கி நாளை (16.4.2011) பூர்த்தியடைகின்றது. இத்தருணத்தில் அப்புனிதரின் பொன்னார் திருவடிகளைப் போற்றி மகிழ்வோம்!
https://www.dinamani.com/edition/Story.aspx?artid=405124