காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்


682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார். பின்னர் அவருக்கு சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று தீக்ஷா நாமம் வழங்கினார் சங்கரவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். தொடர்ந்து, காஞ்சி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய பீடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் இணைந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.

காஞ்சி காமகோடி பீடத்தின் 71 வது இளைய மடாதிபதியாக, ஸ்ரீ துட்டு சத்ய வெங்கடசூர்ய சுப்ரமணிய கணேச சர்மா இன்று பொறுப்பேற்றார். அவருக்கு சன்யாஸ தீட்சை வழங்கப்பட்டபின்னர்  ஸ்ரீஸ்ரீஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற திருநாமம் சூட்டப்பட்டது. இந்த விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உள்பட முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். 

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள பஞ்ச கங்கை தீர்த்தத்தில், அட்சய திருதியை நாளான இன்று காலை 6 மணி முதல் இளைய மடாதிபதியான, ஸ்ரீ சத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மாவுக்கு, ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினார்.

முன்னதாக, காமாட்சியம்மன் கோவிலில் உள்ள பஞ்ச கங்கை தீர்த்த தெப்பக்குளத்தில் நடந்த விழாவில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கணேச சர்மாவுக்கு தீட்சை வழங்கி காவி வஸ்திரத்தை வழங்கினார். தொடர்ந்து கமண்டலத்தையும், தண்டத்தையும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் இருந்து பெற்றுக் கொண்ட அவர், குருவான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை வணங்கினார். கணேச சர்மாவுக்கு சாளக்கிராமத்தை தலையில் வைத்து சங்கு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து ஆசி வழங்கினார் விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.
விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி , ஆதீனங்கள், மடாதிபதிகள், சன்னியாசிகள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.



Leave a Reply