உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்


682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது திருவேங்கட பெருமாள் கோவில்., சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் இந்து அறநிலைத்துறை சார்பில் புரனமைப்பு பணிகள் மேற்
கொள்ளப்பட்டு சுமார் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

நேற்று கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கி, மூன்று கால பூஜைகள் செய்யப்பட்டு உருவேற்றப்பட்ட கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி பட்டாச்சியர்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

தொடர்ந்து, கருவறையில் உள்ள திருவேங்கட பெருமாள் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்த பின் தீபாராதனை நடைபெற்றது.
உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் மற்றும் உசிலம்பட்டி திமுக நகர செயலாளர் தங்கப்பாண்டியன், வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Reply