682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
Thank you for reading this Dhinasari News Article.
Don’t forget to Subscribe!
ஸ்ரீ ரங்கத்தில், பல ஆண்டுகளாக சாரமுட்டில் இருந்த கிழக்கு கோபுர முதல்நிலை கொடுங்கை முன்பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதனால், கிழக்கு அடையவளஞ்சான்-கிழக்கு சித்திரைவீதிக்கான வாசல் அடைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அடுத்து இந்து முன்னணி அமைப்பினர் அறநிலையத்துறை அதிகாரியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரத்தின் கொடுங்கைப் பகுதி நேற்று நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது. நள்ளிரவு நேரம் என்பதால், எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்குக் கோபுர சுவரில் ஏற்கெனவே விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை, இடிந்த கோபுர கொடுங்கைப் பகுதியை முழுவதுமாக புதிதாக கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல், தாமோதர கிருஷ்ணன் கோபுரத்தின் ஒரு பகுதி நள்ளிரவில் இடிந்ததால், கோபுரம் பராமரிப்பு பணிக்கான மதிப்பீடு ரூபாய் 67 லட்சமாக இருந்தது தற்போது 98 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் சாரம் கட்டும் பணி தொடங்கி, இன்னும் ஒரு சில நாட்களில் டெண்டர் விட்டு, பணிகள் தொடங்கும் என்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கோபுரம் சிதிலமடைந்து உடைந்து விழுந்ததால், அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கை கண்டித்து அலுவலகம் முற்றுகைப் போராட்டம் இந்து முன்னணி அமைப்பினரால் நடத்தப்பட்டது.