புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோயிலில் மஹா பிரதோஷ வழிபாடு!

செய்திகள்
pudukkottai santhanathaswami - Dhinasari Tamil

புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் 39 -ஆம் ஆண்டு மஹா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

புதுக்கோட்டை அருள்மிகு வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் 39-ஆம் ஆண்டு மஹா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. காலையில் மங்கள இசையுடன் கணபதி ஹோமம் ருத்ரஜபம் கடபூஜை கலச ஆவாஹனம், பாராயணம், கன்யா பூஜை, லட்சுமிபூஜை, மஹா பூர்ணாஹுதி பூஜைகள் நடைபெற்றது.

வேதநாயகி உடனுறை சாந்தநாத சுவாமிக்கு பாலபிஷேகம் பன்னீர், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் நீர், திருநீறு உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் சந்தனக்காப்பு மலர் அலங்காரத்துடன் தீபாரதனை நடைபெற்றது.

DSC6651 - Dhinasari Tamil

மாலையில், நந்திகேஸ்வரர்க்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர்,பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீறு உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் கலசாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

நந்திகேஸ்வரர் வெள்ளிக் கவசமலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் வருகைதந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

மஹா பிரதோஷ வழிபாடு விழா ஏற்பாடுகளை மல்லிகாவெங்கட்ராமன், திருக்கோவில் நிர்வாகிகள் அரிமளம் ரவி சிவாச்சாரியார் ரவி குருக்கள் மகேஷ் குருக்கள் கோயில் ஊழியர்கள் உட்பட பலர் கவனித்தனர். கோயிலில். வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி விநாயகர், சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை , பைரவர், நந்திகேஸ்வரர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

-செய்தி: டீலக்ஸ் சேகர், புதுக்கோட்டை

Leave a Reply