
புதுக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபையினர் சார்பில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி மார்கெட் சந்திப்பிலுள்ள இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஆடி அமாவாசை வழிபாடு நடைபெற்றது.
கோவிலில் மூலவர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. கே.மணி குருக்கள் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது .
பக்தர்கள் வந்திருந்து சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, அனுமன் திருச்சபையினர், ஆன்மிக நெறியாளர் ஆனந்தன் தலைமையில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
- டீலக்ஸ் சேகர், புதுக்கோட்டை