பக்தர்களிடம் கூடுதல் கட்டணம்: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

செய்திகள்

இந்து கோயிலில் டிச. 3 1-ம் தேதி இரவில் நடைசாத்தப்பட்டு ஆகம விதிக்கு எதிராக புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் நடை திறந்து சிறப்பு பூஜை நடத்த இந்து அறநிலையத் துறை முடிவெடுத்ததை கண்டித்தும்.

ராமேசுவரம் கோயிலுக்குச் சொந்தமான தென்னந்தோப்பு, வணிக கடைகள், உண்டியல் மூலம் கிடைக்கும் வருவாயில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் உள்ளதையும், 

கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய கோரியும், ராமேசுவரத்தில் இந்து முன்னணி நகர் தலைவர் மாரியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இந்து முன்னணி மண்டபம் ஒன்றியத் தலைவர் தனபாலன், நகர் துணை தலைவர் கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

https://www.dinamani.com/edition/Story.aspx?artid=354609

ஸ்ரீவில்லிபுத்தூரில்

கோயில்களில் அனைத்து பூஜை கட்டண முறைகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி, விருதுநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.ஆர்.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் வை.மா.திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் ஐ.சிவசாமி வரவேற்றார்.

இந்து முன்னணி மாநிலத் தலைவர் டாக்டர் அரசுராஜா, பாரதீய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர். நகர் தலைவர் கே.யுவராஜ், நகர் பொதுச் செயலர் ஜி.முருகன், நகர் செயலர் பி.தன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பழனியில்

பழனியில் இந்து முன்னணி சார்பில் கோவில்களின் நிர்வாகத்தைக் கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழனி பஸ் நிலைய ரவுண்டானா அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்டத் தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.

அமைப்பின் மாவட்டச் செயலாளர்கள் ஜெகன், கனகராஜ் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.  இந்து முன்னணி மாநில பேச்சாளர் மாணிக்கவாசகம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் கட்டண முறையில் சுவாமி தரிசனம் செய்யப்படுவதைக் கண்டித்தும், பெறும் கட்டணத்துக்கு ஏற்ப கோயில்களில் முன்னேவரை சென்று சுவாமி தரிசனம் செய்வதைத் தவிர்த்து திருப்பதி, சபரிமலை போல எல்லோரையும் சரிசமமாகப் பாவிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், தெற்கு பொது செயலாளர் மனோஜ், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த மாவட்ட உதவி செயலாளர் மகுடீஸ்வரன், ஒன்றியத் தலைவர் கருப்புசாமி, ஒன்றியச் செயலாளர் கணேஷ், ஜெயராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

கோவில்பட்டியில்…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் இந்து முன்னணியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்கோயில்களில் தரிசனம், அபிஷேகம், அர்ச்சனை, தேங்காய் உடைப்பு, காவடி, பால்குடம் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகரத் தலைவர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், ஒன்றியத் தலைவர்கள் சந்திரசேகர் (கோவில்பட்டி), சுயம்புலிங்கம் (விளாத்திகுளம்), லட்சுமிகாந்தன் (கயத்தாறு) முன்னிலை வகித்தனர்.

மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார், வழக்கறிஞரணி பிரிவு மாநில செயலர் குத்தாலம் ஆகியோர் பேசினர்.

மாவட்டத் துணைத்தலைவர் புருஷோத்தமன், செந்தில்குமார் உள்பட நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply