விருப்பும் வெறுப்பும்: ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்

60" height="292" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0aeb5e0aebfe0aeb0e0af81e0aeaae0af8de0aeaae0af81e0aeaee0af8d-e0aeb5e0af86e0aeb1e0af81e0aeaae0af8de0aeaae0af81e0aeaee0af8d-e0ae86.jpg" alt="" class="wp-image-236549" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0aeb5e0aebfe0aeb0e0af81e0aeaae0af8de0aeaae0af81e0aeaee0af8d-e0aeb5e0af86e0aeb1e0af81e0aeaae0af8de0aeaae0af81e0aeaee0af8d-e0ae86.jpg 360w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0aeb5e0aebfe0aeb0e0af81e0aeaae0af8de0aeaae0af81e0aeaee0af8d-e0aeb5e0af86e0aeb1e0af81e0aeaae0af8de0aeaae0af81e0aeaee0af8d-e0ae86-1.jpg 300w" sizes="(max-width: 360px) 100vw, 360px" />

உலகத்தில் எப்பொழுதும் பிரியமாக இருக்கப்பட்ட பொருள் உண்டா என்று கேட்டால், அதற்கு சங்கர பகவத் பாதாள் ஒரு சுலோகத்தில் “எதுவரை ஒருவன் ஒரு பொருளிலிருந்து இன்பமுறுகின்றானோ அதுவரை அப்பொருள் விருப்பமாக உள்ளது.

எதுவரை அது துன்பம் தருமோ அதுவரை அப்பொருள் வெறுக்கத்தக்கதாயுள்ளது. ஒரே பொருள் எப்பொழுதும் விரும்பத்தக்கதாகவோ, வெறுக்கத்தக்கதாகவோ இருப்பதில்லை. சில சமயங்களில் வெறுக்கத் தகுந்த பொருள் விரும்பத்தக்கதாக மாறலாம்.

மேலும் எது விரும்ப ஏற்ற பொருளோ அது வெறுப்பிற்குரியதாகவும் ஆகலாம். ஆதலால் ஆத்மா என்னும் பொருள் எப்போதும் மிகவும் விரும்பத்தக்கதாக உள்ளது.” என்று விளக்கியுள்ளார்.

ஒரு தந்தைக்குத் தன் பையன் மீது அன்பு உண்டு. ஆனால் பையன் அப்பாவினுடைய சொற்படி நடக்கும் வரையில்தான் அவன்மேல் அப்பாவிற்குப் பிரியம். அவன் அவ்வாறு நடக்காவிட்டால் அவனைப் “போக்கிரி” என்றெல்லாம் அப்பா திட்டுவார்.

அப்பா தனக்காகப் பையனிடத்தில் அன்பு காட்டுகிறாரே ஒழிய, அந்த அன்பு பையனுக்காக இல்லை. எதுவரை பையன் தன்னுடைய சொற்படி கேட்டுக் கொண்டு, பணம் சம்பாதித்து அதைத் தனக்கும் கொடுத்து வருகிறானோ அது வரைதான் அப்பாவிற்கு அவன்மேல் பிரியம் இருக்கும் என்பதை நாம் உலகத்தில் பார்ப்போம்.

ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்

விருப்பும் வெறுப்பும்: ஆச்சார்யாள் அருளுரை! News First Appeared in Dhinasari

Leave a Reply