ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? அந்த ஆசிரியர் வந்தால் மாணவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கிறது என்ற நிலை வர வேண்டும்.
அப்படி இருப்பவரே ஆசிரியர். ஆகவே தான் அவரை தாயைப்போலவும் தந்தையைப்போலவும் நினைத்து வணங்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
குருவைப் பார்த்தவுடனேயே அவரது பாதங்களை வணங்க வேண்டியது சீடனுக்குத் தேவை. குருவை வணங்கினால் சீடனுக்குக் கல்வியும், கீர்த்தியும், பலமும் வரும்.
நமஸ்காரம் செய்தால் மட்டும் போதுமா ? (போதாது.) எப்பொழுதும் சேவை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் அவருக்கு இருக்கப்பட்ட நற்குணங்கள் அனைத்தும் சீடனுக்கும் வந்துவிடும்.