மற்ற நாள்களில் மகா லகு எனப்படும் தூரத்திலிருந்து வழிபடும் முறை அமலில் உள்ளது. இதில் லகு தரிசன முறைக்கு பக்தர்களிடமிருந்து அதிக வரவேற்பு இருப்பதால் இதை வாரத்தில் 5 நாள்களும் நடைமுறை படுத்த வேண்டுமென தொடர்ந்து பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து செயல் அலுவலரிடம் கேட்டதற்கு அவர் கூறியது: “லகு தரிசனத்திற்கு அதிக வரவேற்பு கிடைப்பதால் திங்கள் முதல் வெள்ளி வரை நடைமுறைப்படுத்த ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த நடைமுறையில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே வழிபட முடியும். ஆனால் திருமலைக்கு வருவோரின் எண்ணிக்கை தினமும் 80 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது.
அதனால் கூடுதலாக வருவோருக்கு தங்கும் இடம் தருவதில் சிக்கல் உள்ளது.
எனவே கூடுதலாக வருவோரை திருப்பதியிலேயே தங்க வைத்தால் மட்டுமே இந்த முறை சாத்தியமாகும். எனவே இது குறித்து நாங்கள் தீவிரமாக ஆலோசித்து வருகிறோம் என்று ஐ.ஒய்.ஆர். கிருஷ்ணாராவ் கூறினார்.