e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0ae8ee0aea8e0af8de0aea4-e0ae95.jpg" style="display: block; margin: 1em auto">


பிறந்தநாளுடன் வரும் வாரத்தின் பலன்
சென்மநட் சத்திரத் தாதிவா ரம்வரின்
தீரா அலைச்ச லுண்டாம்;
திங்களுக் காகில்வெகு சுகபோ சனத்தினொடு
திருமாதின் அருளும் உண்டாம்,
வன்மைதரும் அங்கார வாரம்வந் தாற்சிறிதும்
வாராது சுகம தென்பார்;
மாசில்பல கலைபயில்வர் மேன்மையாம் புந்தியெனும்
வாரத் துடன்கூ டினால்;
நன்மைதரு குருவார மதுசேர்ந்து வரில்ஆடை
நன்மையுட னேவந் திடும்;
நாரிய ருடன்போகம் மிகவும்உண் டொருவெள்ளி
நல்லவா ரத்தில் வந்தால்;
அன்மருவு பீடையுண் டாமென்பர் சனியனுக்(கு);
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
தூயவனே!, அருமை தேவனே!, பிறந்த
நாளுடன் ஞாயிற்றுக்கிழமை வந்தால் நீங்காத அலைச்சல் உண்டாகும்,
திங்கள் வந்தால் மிகவும் நல்லுண்டியோடு திருமகளின் அருளும்
கிடைக்கும், வலிய செவ்வாய்க்கிழமை வந்தாற் சற்றும் நலம் கிடையாது என்று
கூறுவர், உயர்வான புதன் கிழமையுடன் (பிறந்த நாள்) சேர்ந்தாற்
குற்றமற்ற பல நூல்களையும் ஆராய்வார், நலந் தரும் வியாழக்கிழமை சேர்ந்து வந்தால் ஆடைகள் நலம்பெறக் கிடைக்கும், ஒரு ஒப்பற்ற நல்ல வெள்ளிக்கிழமையில் வந்தாற் பெண்களின் இன்பம் மிகவும்
கிடைக்கும். சனிக்கிழமை வந்தால் மயக்கந் தரும் நோய் உண்டாகும் என்பர்.
அறப்பளீஸ்வர சதகம்: எந்த கிழமையில் பிறந்தநாள் வந்தால் என்ன பலன்..! News First Appeared in Dhinasari Tamil