அறப்பளீஸ்வர சதகம்: உண்ணும் இலை!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

உண்டியிலையும் முறையும்

வாழையிலை புன்னைபுர சுடன்நற் குருக்கத்தி
மாப்பலாத் தெங்கு பன்னீர்
மாசிலமு துண்ணலாம்; உண்ணாத வோ அரசு
வனசம் செழும்பா டலம்
தாழையிலை அத்திஆல் ஏரண்டபத்திரம்
சகதேவம் முள்மு ருக்குச்
சாருமிவை அன்றி, வெண் பாலெருக் கிச்சில்இலை
தனினும்உண் டிடவொ ணாதால்;
தாழ்விலாச் சிற்றுண்டி நீரடிக் கடிபருகல்
சாதங்கள் பலஅ ருந்தல்
சற்றுண்டல் மெத்தவூண் இத்தனையும் மெய்ப்பிணி
தனக்கிடம் எனப்ப ருகிடார்;
ஆழிபுடை சூழுலகில் வேளாளர் குலதிலகன்
ஆகும்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே.

நாற்புறமும் கடல்சூழ்ந்த உலகில் வேளாளர் மரபிற் சிறப்புற்றவன் ஆகிய,
எமது அருமை தேவனே!, வாழையிலை, புன்னை, புரசுடன்,
நல்குருக்கத்தி, மா, பலா, தெங்கு, பன்னீர் (ஆகிய இலைகளில்) குற்றமற்ற உணவை உண்ணலாம்,
உண்ணத்தகாதனவோ எனில், அரசு, வனசம், செழும்பாடலம், தாழையிலை,
அத்தி, ஆல், ஏரண்ட பத்திரம், சகதேவம் முள்முருக்கு, சாரும்
பொருந்திய இவற்றிலே அன்றி, வெண்மையான பாலையுடைய
எருக்கிலை, இச்சில் இலைகளிலும் உண்பது தகாது ஆகும், இடைவிடாத
சிற்றுண்டியும் அடிக்கடி நீர் பருகலும் பலவகைச் சோறுண்டலும்,
சிறிதாக உண்பதும் மிகுதியாக உண்பதும் இவ்வளவும்
உடல்நோய்க்கு இடமாகும் என (இம்முறையில்) உண்ணார்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply