நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்!

ஆலய தரிசனம்

க்ருதக யுகத்தில் தேவர்களைக் கொடுமை செய்தான் ஹிரண்யகசிபு. சிங்க முகமும், மனித உடலும் கொண்டு நரசிம்மர் வடிவத்தில் அவனை அழித்தார் திருமால். அந்த நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், நெற்றியில் அக்னி தேவனும் காட்சி தருகின்றனர். “”சந்திர சூரியர்களைக் கண்ணாகக் கொண்டவர் எனது கண்களை ரட்சிக்கட்டும்” என்று பிரகலாதன் தனது ந்ருசிம்ஹ கவச துதியில் பிரார்த்தனை செய்கிறார்.

திருமாலின் அவதாரங்களில் பெரிதும் போற்றப்படும் நரசிம்ம அவதாரத்தில் நவகிரகங்களும் நரசிம்மரை போற்றித் துதிக்கின்றன. இதன் விசேஷ தத்துவம் நரசிம்மர் ஒன்பது நரசிம்மராகக் காட்சி தருகிறார் என்பதுதான். இந்த நவ நரசிம்மரும் நவ கிரகங்களை இணைத்து வழிநடத்தி பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகின்றனர்.

தமிழகத்தில் சிம்மகிரி மலையடிவாரத்தில் நவ நரசிம்மரும், நவ கிரகங்களும் இணைந்து ஒரே பீடத்தில் அமைந்துள்ளது அதிசய அமைப்பாக உள்ளது. ஆந்திரப் பிரதேசத்துக்கு அடுத்தபடியாக இங்கேதான் இவ்வாறு அமைந்துள்ளது. இந்த நவகிரக நவ நரசிம்மர்கள் கண்ணாடி அறையில் பிரமிடு வடிவமைப்பில் இருப்பதும் சிறப்பு.

பக்தர்கள் ஒரே சமயத்தில் நவகிரகங்களையும் நவ நரசிம்மரையும் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் செப்.11 ஞாயிறு காலை 7 மணி முதல் 10.3 0க்குள் நவகிரக நவ நரசிம்மர் பிரதிஷ்டையும், யாகமும் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஸ்ரீலஷ்மி நரசிம்மரின் அருள் பெறுவோம். நயா திருப்பதிக்கு பேருந்து,ஆட்டோ வசதிகள் உள்ளன.

மேலும் தகவல்களுக்கு: 044-27540073 / 9443240074

கோ . பெருமாள்

Leave a Reply