682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
Thank you for reading this Dhinasari News Article.
Don’t forget to Subscribe!
இந்தியாவில் சார் தாம் யாத்திரை என்று அழைக்கப்படும் பாத யாத்திரை இந்த மாதம் தொடங்க உள்ளது. நாட்டின் 4 புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்கு பக்தர்கள் செல்ல தயாராக உள்ளனர்.
ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும். குளிர்காலங்களில் கோவில்கள் குகைக்கோவில்கள் மூடப்பட்டு விடும்.
மேலும் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான யாத்திரை வரும் ஏப்ரல் மாதம் 22ம் தேதி அன்று கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்களுக்கு தொடங்குகிறது.
தொடர்ந்து ஏப்ரல் 25ம் தேதி கேதர்நாத் கோவில் யாத்திரை தொடங்க உள்ள நிலையில், ஏப்ரல் 27ம் தேதி பத்ரிநாத் கோவில் யாத்திரை தொடங்குகிறது.