14 வகை சிராத்தங்கள்

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்

– Advertisement –

– Advertisement –

1. பித்ரு ஸ்ராத்தம்:

            நாம் பெரிதும் அறிந்த மற்றும் பின்பற்றுகின்ற வருட ச்ரார்த்தம் நம் முன்னோர்கள் இறந்த திதியில் செய்யப்படும் பித்ரு ஸ்ரார்த்தம் ஆகும். இவையல்லாத மற்ற ச்ரார்த்தங்கள் பின்வருமாறு

2. பீமாஷ்டமி ஸ்ராத்தம்:

            தை(மகர) மாதத்தில் வரும் அஷ்டமி திதியில் செய்யப்படும் அந்த ஸ்ரார்த்தம் குழந்தை பெறுவதில் இடையூறுகள் ஏற்படும் பொழுதும், அடிக்கடி கருச் சிதைவுகள் ஏற்படும் பொழுதும் பீஷ்மருக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்துச் செய்யப்படும் ச்ரார்த்தமாகும்.

3. நாந்தி ஸ்ராத்தம்:

            நமக்கு நன்கு தெரிந்த இந்த ச்ரார்த்த முறைகள் யாத்திரை மற்றும் உபநயணம், திருமணம் குழந்தைப் பிறப்பு போன்ற வைபவங்களை ஒட்டிச் செய்யப்படுவது ஆகும்.

4. பார்வன ஸ்ராத்தம்:

            இறந்தவர்கள் தேவலோகம் சென்று “பார்வன” எனப்படும் முன்னோர்கள் அந்தஸ்தை அடையும்பொழுது செய்யப்படும் ச்ரார்த்தமாகும் இது. ஏக் பார்வன், த்விபார்வன், த்ரி பார்வன் என்ற ஒன்று, இரண்டு, மூன்று பார்வன வகைகள் இந்த ச்ரார்த்தத்தில் உண்டு.

5. மாளய ஸ்ராத்தம்:

            மாலயபட்சஷம் என்ற பெயரில் நாமெல்லாம் நன்கு அறிந்த இந்த பார்வன ச்ரார்த்தம் புரட்டாசி மாதத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது. தமிழக பிராமணர்களால் பெரிதும் பின்பற்றப்படும் இந்த ச்ரார்த்தம் மற்ற மாநில பிராமணர்களால் அனுஷ்டிக்கப்படுவதில்லை.

6. தீர்த்த ஸ்ராத்தம்:

            எல்லோரும் அறிந்த இந்த ஸ்ரார்த்தம் பிரயாகை, ராமேஸ்வரம், கயா, காசி போன்ற புனித நதி தீரங்களில் நம் பித்ருக்களுக்குச் செய்யும் ஸ்ரார்த்தம் ஆகும். இந்த ச்ரார்த்தத்தின் சிறப்பு முன்னோர்கள் இறந்த திதி என்று இல்லாமல் எந்த நாளிலும் இதைச் செய்யலாம் என்பதே ஆகும்.

7. கோஷ்டி ஸ்ராத்தம்:

            பிராமணர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து ஒரு புனித இடத்தில் ஒட்டுமொத்தமாகச் செய்யும் இந்த ச்ரார்த்தம் ஸ்ரார்த்த சிந்தனைகள் ஏற்படும் எல்லா சமயங்களிலும் செய்ய தகுந்த ச்ரார்த்தம் ஆகும்.

8. க்ருத்த (அ) யாத்ரா ஸ்ராத்தம்

            நெய்விட்டு நெருப்பு வளர்த்துச் செய்யப்படும் இந்த ஸ்ரார்த்தம் புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை புறப்படும்பொழுது நன்றாக அவை பூர்த்தி அடைய வேண்டும் என்று வணங்கிச் செய்யப்படும் ச்ரார்த்தம் ஆகும்.

9. ததி ஸ்ராத்தம் (தயிர்):

            வேண்டிக்கொண்டு சென்ற யாத்திரை வில்லங்கம் இல்லாமல் நிறைவுப் பெற்று வீடு திரும்பிய பின் செய்யப்படும் ஸ்ரார்த்தம்.

10. அஷ்டக ஸ்ராத்தம்:

            பௌர்ணமிக்குப் பின்வரும் 8ஆம் நாள் செய்யப்படும் இந்த ஸ்ரார்த்தம் எந்த மாத பௌர்ணமிக்கு பிறகும் செய்யப்படலாம் என்றாலும் வேத காலத்தில் மிருகசிருஷம், பௌஷம், மகம் மற்றும் பால்குண மாதங்களில் மட்டும் செய்யப்பட்டன. அக்னி, சூரியன், பிரஜாபதி, ராத்திரி, நட்சத்திரம் மற்றும் ருது ஆகியவற்றை ஸ்ரார்த்த தேவதைகளாக ஆவாகனம் செய்யப்பட்டு இந்த ஸ்ரார்த்தம் செய்யப்படும்.

11. தைய்விக ஸ்ராத்தம்:

            தெய்வ அனுக்ரஹகம் வேண்டிச் செய்யப்படுவதே இந்த ச்ரார்த்தம்.

12. இரண்ய ஸ்ராத்தம்:

            பிராமண போஜனம் இல்லாமல் அதற்குப் பதில் பணத்தையே தட்க்ஷணையாகக் கொடுத்துச் செய்யும் இந்த ச்ரார்த்தம் தற்காலத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.

13. அஸ்த ஸ்ராத்தம்:

            தகுந்த பிராமணர்களை அழைத்து அவர்களுக்கு போஜனம் அளித்துச் செய்யப்படும் இந்த ப்த்ரு ஸ்ரார்த்தம் பல்வேறு இன்னல்களுக்கிடையே பல காலம் பின்பற்றப்பட்டு வந்த ஸ்ரார்த்தம் ஆகும்.

14. ஆத்ம ஸ்ராத்தம்:

            பலர் இன்னும் அறிந்துகொள்ளாத இந்த அனுமதிக்கப்பட்ட ஸ்ரார்த்த முறை தனக்குத்தாமே உயிருடன் இருக்கும்பொழுதே செய்துகொள்ளும் ஸ்ரார்த்தம் ஆகும். குழந்தை இல்லாதவர்களும் ஸ்ரார்த்தம் செய்ய விருப்பம் இல்லாத குழந்தைகள் உள்ளவர்களும் முறைப்படி செய்துகொள்ளும் இந்த ஸ்ரார்த்த முறைகள் ஸ்ரார்த்த சாஸ்திரங்களில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

– Advertisement –

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply