திருப்புகழ் கதைகள்: மதுரகவி, சித்திரக்கவி!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் – பகுதி 357
– முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியம்

இருப்பவல் திருப்புகழ் – திருத்தணிகை
மதுரகவி, சித்திரக்கவி

மதுரகவி என்பது கவிதை புனையும் புலமையை வெளிப்படுத்தும் ஒரு பாங்கு. பொருள்வளமும், சொல்வளமும் உடையதாய், பல்வேறு வகையான தொடைநலன்கள் அமையப்பெற்று, உருவகம் முதலான அணி நயங்கள் பொலிந்து வர, ஓசைநயம் கொண்டதாய், கற்போருக்கு அமிழ்தம் போல அமைந்திருப்பது மதுரகவி. சொல்லப்பட்ட பலவகையான இன்பங்கள் தந்து மயங்கவைக்கும் மது இது. எடுத்துக்காட்டாக மகாகவி பாரதியாரின் பாடலொன்றைச் சொல்லலாம்.

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன் (நின்னையே)

பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்( பொன்னையே)
பின்னையே நித்ய கன்னியே (2) கண்ணம்மா

மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீச -நீ (2)
கண் பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா
யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா (நின்னையே)

     தேர், சக்கரம், மயில், கலசம், மிருதங்கம், ஏகநாகம், இரட்டை நாகம், சதுர நாகம், அஷ்டநாகம், சிவலிங்கம், வேல், மலர், கூடை, கடகம், திருக்கை, திருவடி, மாணிக்கமாலை, சுழிக்குளம், சதுரங்கம், மலை ஆகிய சித்திரங்களில் சித்திரத்துக்குள் கட்டங்கள் வரைந்து, எத்தனை கட்டங்கள் வருகின்றனவோ, அதை எண்ணி, அந்த கட்டத்துக்கு எவ்வளவு எழுத்துகள் தேவைப்படும் என்று கணக்கிட்டு,

‘விதை விதை செவ்வமி கப்பாருள்ளே மேல்வான்
மழைநாட ஏர்முனை சூழ் கவிபாட கார் மேவ வாழ்’ – என்ற கவிதையை வஞ்சித்துறையில் படைக்கப்பட்டுள்ளது. ஒரு மயிலை வரைந்து அதன் தோகைகளை எண்ணி கணக்கிட்டு,

‘விற்சந்தம் வாங்குமகள் குண்டலினி யாட்டுங்கால்
முற்பிணி நீக்கிபொரு தும்தாயாம்-நற்கீர்த்தி
அம்மணி யேநீ யருள்புரி பண்ணினம்மே
கும்பநீர் பொங்குவாச வி’ –

என்று கவிதை இன்னிசை வெண்பாவால் எழுத்தப்பட்டுள்ளது. நேரிசை வெண்பாவைக் கொண்டு கலச சித்திரத்தை வைத்து,

‘வாழுளமே பூவிருந்து வாழ்வதற்கும் கல்விதந்தென்
பாழுமவா வாழுண்மைப் பண்புக்கே-கூழு
முணவக்கும் வித்தகமும் நாமணக்கும் காலம்
இலக்கண மைந்தருள வா’

என்ற கவிதை படைக்கப்பட்டுள்ளது. ஏழாம் வகுப்பு வரை படித்துள்ள கோவையைச் சேர்ந்த கோ.செல்வமணி தற்போதும் இத்தகைய சித்தரக்கவிகளைப் படைப்பதில் வல்லவராக இருக்கிறார்.

     வித்தார கவி என்பது கவிதையால் நூல் செய்யும் புலமை. வித்தாரம் பேசுதல் என்னும்போது வித்தாரம் என்னும் சொல் வக்கணையாகப் பேசுதல் எனப் பொருள்படுகிறது. அதுபோல வக்கணையாகப் பாடும் தொடர்நிலைச் செய்யுள் வித்தார கவியாகும். இது பற்றி விளக்கும் வகையில் திவாகர நிகண்டுவில் ஒரு பாடல் காணப்படுகிறது. அப்பாடல்,

மும்மணிக் கோவையும் பன்மணி மாலையும்

மறமும் கலிவெண் பாட்டும் மடல் ஊர்ச்சியும்
கிரீடையும் கூத்தும் பாசண்டத் துறையும்
விருத்தக் கவிதையும் இயல் இசை நாடகத்தொடு
விரித்துப் பாடுவது வித்தார கவியே.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply