மாசிலா ஸ்ரீ சங்கரர்!

ஆன்மிக கட்டுரைகள்

adhi sankarar
adhi sankarar

(மீ. விசுவநாதன்)

ஆலடி அமர்ந்தவர் அகிலம் காக்க – ஒரு
அரையடிப் பிள்ளையாய்ப் பிறப்பைப் பெற்றார்
காலடி தோன்றிய காலம் தொட்டு – வேத
காரண மாகவே பயணம் செய்தார்

ஏழையின் வீட்டிலே செல்வம் பொழிந்தார் – தான்
ஏற்றதோர் துறவினால் பற்றைத் துறந்தார்
ஆழமாய் உள்ளொளி தன்னை அறிந்தார் – தன்
அகத்தொளிக் கட்டளைப் படியே நடந்தார்


காசியில் சாதியை ஒழித்தே னென்றே – சிவ

காட்சியில் கரைந்துடன் கவிதை பொழிந்தார்
ஊசியில் நூலினைக் கோர்க்கும் எளிதாய் – அவர்
உயர்பல நூலினை உலகிற் களித்தார் !

குழந்தையின் மனத்திலே பதியும் வண்ணம் – தெய்வ
குணத்தினை மெச்சிடும் பாடல் செய்தார்
அழுந்திடும் ஆசையில் தவிப்போர் தமக்கு -அவர்
ஆழ்நிலை தத்துவப் பாடம் தந்தார்

திக்கிலே நான்கெனப் பீடம் அமைத்து – எட்டுத்
திக்கிலும் அத்வைதம் பரப்பச் செய்த
வித்தகர் சங்கரர் என்றே உலகு – இன்றும்
வியப்பிலே புகழ்ந்திடக் கேட்டல் மகிழ்வு.

ஆன்மிக பூமியின் அணையா விளக்கு – அவர்
ஆதியாம் ஈசனே என்றும் நமக்கு
மானிட சாதியின் அறிவுப் பிழம்பு – அவர்
மாசிலா சங்கரர் என்றே முழங்கு.

(இன்று (17.05.2021) ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி தினம்)

மாசிலா ஸ்ரீ சங்கரர்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply