திருமாலிருஞ்சோலை – அழகர்மலைக்கு கள்ளழகர் எழுந்தருளல்

செய்திகள்

அங்கு திருமஞ்சனமாகி ராஜாங்க திருக்கோலத்துடன் அனந்தராயர் பல்லக்கில் புறப்பட்ட பெருமாள், மதிச்சியம், ஆழ்வார்புரம் உள்ளிட்ட பகுதி மண்டகப்படிகளில் எழுந்தருளினார். கோரிப்பாளையம் திருக்கண் மண்டபங்களின் வழியாக வந்த பெருமாள், இரவில் தல்லாகுளம் ராமநாதபுரம் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

வியாழக்கிழமை அதிகாலையில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்துடன் புறப்படும் பெருமாள், அம்பலகாரர் மண்டபம், ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயில், புதூர் மாரியம்மன் கோவில் ஆகியவற்றில் எழுந்தருள்கிறார்.

பின்னர் பகலில் மூன்றுமாவடியில் எழுந்தருளும் கள்ளழகரை, பக்தர்கள் வழியனுப்பும் நிகழ்ச்சி வாண வேடிக்கையுடன் கோலாகலமாக நடைபெறுகிறது. இதையடுத்து அவர் அழகர்மலைக்கு எழுந்தருள்கிறார்.

Leave a Reply