சோழவந்தானில் ஜெனக புஷ்ப கண்ணன் நூதனப் பிரதிஷ்டை விழா

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்


682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

சோழவந்தானில் ஜெனக புஷ்ப கண்ணன் நூதனப் பிரதிஷ்டை விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனக நாராயண பெருமாள் திருக்கோவிலில் உள்ள நந்தவனத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஜெனக புஷ்ப கண்ணன் சிலைக்கு நூதன பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கோ பூஜை உடன் யாக வேள்வி தொடங்கி நடைபெற்றது. பால் தயிர் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட 21 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பொதுமக்களுக்கு குங்குமப் பிரசாதம் தீர்த்தம் சடாரி வழங்கப்பட்டது.

இதில் கோவில் செயல் அலுவலர் திருக்கோவில் பணியாளர்கள் பணியாளர்கள் மற்றும் மதுரை பாகவதர் கோஷ்டிகள் சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் நந்தவனத்தில் பூச்செடிகள் வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாலாயிர திவ்ய பிரபந்தம் மதுரை பாகவதர் கோஷ்டிகளால் சேவிக்கப்பட்டது.

சோழவந்தான் உச்சிமாகாளி அம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம்!

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

பூமேட்டு தெரு கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி வைத்து கும்மி பாட்டு பாடினர். அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்தார் உச்சமாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.

முளைப்பாரி ஊர்வலத்துடன் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை எம் வி குழும தலைவர் மணி முத்தையா கலைவாணி பள்ளி தாளாளர் டாக்டர் மருது பாண்டியன் பள்ளி நிர்வாகி வள்ளி மயில் மணிமுத்தையா குடும்பத்தினர் செய்திருந்தனர்.

முத்தாலம்மன் சுவாமி பங்குனி உற்சவம்!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், 66 பாறைப் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்தாலம்மன் சுவாமி பங்குனி உற்சவ விழாவில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேற்றும் வகையில் பெண்கள் – ஆண்கள் அக்கினிசட்டி எடுத்து ஊர்வழம்மாக வந்து கோவிலை சுற்றி வந்து நிறைவேற்றினர்.

மேலும், பக்தர்கள் உடல் முழுக்க யார் என்று தெரியாத அளவிற்கு வேடம் அணிந்து தாங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர். இதற்கான ஏற்பாடுகளை, 66 பாறைப் பட்டி கிராமத்தின் சார்பாக கிராம பூசாரி அழகப்பன் நாட்டாமை பிரவத் தேவர் கிராமக் காவல்காரர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் தலமையில் நடைபெற்றது.



Leave a Reply