பொற்றாமரைக் குளத்தில் கார்த்திகை லட்ச தீபம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

karthigai deepam in madurai potramarai kulam

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு; பொற்றாமரை குளத்தில் லட்ச தீபம்

உலகபுகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயிலில் லட்சதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கோயில் வளாகம் முழுவதும் அகல் விளக்குகளால் ஜொலித்தது. 
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை உற்சவ விழா 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி  நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து தினமும் காலை , மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர், பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தனர்.

திருக்கார்த்திகையை முன்னிட்டு இன்று மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைகுளம், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, உள்பிரகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இந்த பணியில் கோயில் பணியாளர்கள், பக்த சபையினர் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்று ,  லட்ச தீபங்களை ஏற்றினர். இதனால் கோயில் வளாகம் முழுவதும் விளக்கொளியில் ஜொலித்தது.  

மீனாட்சி-சுந்தரேசுவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி கிழக்கு சித்திரை வீதியில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி முன்பு எழுந்தருளுவார்கள். அங்கு  சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.

இதே போன்று மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயில்களான தெப்பக்குளம் மாரியம்மன், முக்தீஸ்வரர் கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில், சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் கார்த்திகை தீப ஏற்றி திராளான பக்தர்கள் வழிபட்டனர்.

Leave a Reply