செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

Dhinasari Home page

செங்கோட்டை ஆரியநல்லுார் தெரு யாதவா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமுப்புடாதி அம்மன் கோவில் வளாகத்தில் வைத்து ஸ்ரீகிருஷ்ணஜெயந்தி விழா ஆண்டுதோறும் சமுதாய மக்களால் வெகு சீரும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம்  இந்தாண்டு விழாவில் முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாரதனை நடந்தது.

இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஸ்ரீகிருஷ்ணபகவான் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வாணவேடிக்கை மேளதாளங்களுடன் வீதி உலா நடந்தது. செப்-09ஆம் தேதி மாலை 4 மணிக்கு யாதவ சமுதாய கொடியேற்றப்பட்டது.
5மணிக்கு சிவகாசி நாராணபுரம் ஸ்ரீசக்கரத்தாழ்வார் கோவில் பஜனை குழுவினரின் சிறப்பு பஜனை நடந்தது. அதனைதொடா்ந்து சிறுவா் சிறுமிகள் ராதை கிருஷ்ணன் வேடமணிந்து ஊர்வலமாக வந்து கோவில் முன்பு நடனமாடினா். பின்னா் அவர்களுக்கு பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து பெண்களுக்கு பல்வேறு போட்டிகள் கும்மிபாடல், கோலாட்டம் பஜனை பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழாவில் முக்கிய நிகழ்வாக இளைஞர்களுக்கான உறியடித்தல், பானை உடைத்தல், வழுக்குமரம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் உற்சாகமாக கலந்து கொண்டனா். விழா  ஏற்பாடுகளை ஆரியநல்லுார் தெரு செங்கோட்டை கரையாளா்(யாதவர்) சமுதாய நலச்சங்க  நிர்வாகிகள் விழாக்கமிட்டியினா் செய்திருந்தனா்.

Leave a Reply