“ஸ்ரீநாராயணீயம்” உருவான வரலாறு ..

செய்திகள்
2">

இந்த செய்தியை / கட்டுரையை ஆங்கிலத்தில் அல்லது மற்ற இந்திய மொழிகளில் படிக்க…

images 43 - Dhinasari Tamil

ஸ்ரீமன் நாராயணீயத்தை இயற்றியவர் மேப்பத்தூர் நாராயண பட்டத்திரி.
கேரளாவில் மேப்பத்தூர் என்ற ஊரில் பிறந்தார்.

இவரது மனைவியின் குடும்பத்தில் அச்சுத பிஷாரடி என்ற ஒரு பண்டிதர் இருந்தார். அவரிடம் சம்ஸ்க்ருதம் கற்று இவரும் பண்டிதரானார். அச்சுத பிஷாரடிக்கு முடக்குவாதம் ஏற்பட்டது.

அது கண்டு வருந்திய பட்டத்திரி, தன் குருவுக்குத் தர வேண்டிய குருதட்சிணைக்குப் பதிலாக, அவருடைய நோயைத் தான் ஏற்றுக் கொண்டார். குருவின் நோய் நீங்கியது. பட்டத்திரிக்கு முடக்குவாதம் ஏற்பட்டது.

அதைக் கண்ட துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர், நோய் நீங்க குருவாயூருக்குச் சென்று, “நாவிலே மீன் தொட்டு உண்” என்று பணித்தார். மற்றவர்களாய் இருந்தால், மீனை உண்ணச் சொல்கிறார் என்று நினைத்திருப்பார்கள்.

ஆனால், பட்டத்ரிக்கு மச்சாவதாரம் தொடங்கி பகவானை வர்ணிக்கச் சொல்கிறார் என்று புரிந்தது. உடனேயே, குருவாயூர் சென்று அங்குள்ள புண்யதீர்த்தத்தில் நீராடி, சன்னிதியிலேயே அமர்ந்து, அவன் பெருமையைக் காவியமாக எழுத ஆரம்பித்தார். அந்தக் காவியமே “ஸ்ரீ நாராயணீயம்” என உருவாகி மிகவும் பிரபலமான காவியமாகியது.

Leave a Reply