அண்ணாமலையார் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு!

செய்திகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று மார்கழி ‌29 வியாழக்கிழமை வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாயில் திறப்பு அதிகாலை வைகுந்த வாயில் தீபாராதனைக்கு பின் நடந்தது. முன்னதாக அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத வேணுகோபால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.

அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வேணுகோபால் சமேத பாமா ருக்குமணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது

அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு வேணுகோபால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வைகுந்த வாயில் திறக்கப்பட்டது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்று வழிபட்டனர்.

சிவன் ஸ்தலங்களில் வேணுகோபால் சுவாமி திருக்கோயில் இருப்பது திருவண்ணாமலை அண்ணாமலையார்கோயில் என்பது குறிப்பிடப்பட்டது, தொடர்ந்து சொர்க்க வாசல் எனப்படும் வைகுந்த வாயில் திறக்கப்பட்டது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வைகுந்த வாயில் வழியாக சென்று சுவாமியை வழிபட்டனர்.

செய்தி: எஸ்.ஆர்.வீ. பாலாஜி, திருவண்ணாமலை

Leave a Reply