சிவராத்திரியில் சிவன்! விரதத்தால் நாம் பெறும் பயன்!

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

முழுமுதற்கடவுள் அருள் வடிவானவர் மோட்சத்தை கொடுக்க வல்லவர் அருளைத் தருகின்ற அருளாளர் ஆனந்தமூர்த்தி சிவபெருமானை. அல்லும் பகலும் துதித்து வழிபடும் ஆனந்தம் பேரானந்தம் இத்தகைய பேரானந்தத்தை அவர்களுக்குரிய அனுஷ்டானங்களை கடைபிடித்து வழிபடுவது சாலச் சிறந்தது. தொன்றுதொட்டு சிறப்புடன் விளங்கும் பண்டிகைகளில் நவராத்திரியும் சிவராத்திரியும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ராத்திரி என்று அழைக்கப்படுவதால் ராக்கால பூஜை விரதம் என்று விளங்குகிறது நவராத்திரி .

சிவராத்திரி சிவனுக்கு உரியது இரவு கால பூஜை சிறப்பு அளிக்கவல்லது இவ்விரு விசேஷங்களில் சிவராத்திரி 21/02/ 2020 நான்கு வகை சிவராத்திரி

யோக சிவராத்திரி:
சோமவார நாளான அமாவாசை அன்று வரும் ராத்திரி சிறப்பினைக் கொண்டது

நித்திய சிவராத்திரி: நாள்தோறும் தவறாது இறைவனை வழிபடுவதை நித்திய சிவராத்திரி

பட்ச சிவராத்திரி அல்லது மாத சிவராத்திரி: சிவனே சிவனே என்று சிவநேசச் செல்வர்கள் மாதந்தோறும் வரக்கூடிய சிவராத்திரியை கொண்டாடுகின்றனர்

மகா சிவராத்திரி ஆண்டிற்கு ஒருமுறை மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில் வரக்கூடியவை நான்குகால பூஜை வழிபாடாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இதை அனுஷ்டிப்பதால் சகல நலன்களும் பெற்று பிடிக்காது வீடுபேறு அடைவர் சிவராத்திரி எனப் பெருமைப்பட அழைக்கப்படும் சிவராத்திரி ஆனது சிவபெருமானை துதித்து பெறுவதற்காக அனுஷ்டிக்கப்படும் ராத்திரியாகும்

ஒவ்வொரு ஆண்டும் தவறாது மகாசிவராத்திரி வழிபாட்டில் விரதம் அனுஷ்டிப்பது நற்பயனை அளிப்பது சிறப்பான வழி வகுக்கும் வல்லமை படைத்தது. அன்றைய தினத்தில் உபவாசம் செய்து நான்கு ஜாமம் (ஒரு ஜாமம் ஏழரை நாழிகை) நித்திரையின்றி சிவபூஜை செய்தல் வேண்டும்.

சிவபூஜையில் இல்லாதோர் நித்திரையின்றி ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை கூறலாம் சிவபுராணம் சிரவணம் செய்யலாம் சிவாலய தரிசனம் செய்தல் வேண்டும் அந்த சிவராத்திரி விரத நாளில் இறைவனுக்கு விதவிதமான அபிஷேகங்கள் நடைபெறுவதை கண்குளிரக் காணலாம் அபிஷேகப் பிரியனான சிவனை அபிஷேகம் செய்ய செய்ய நமது துன்பம் அகலும் மனம் தெளியும் உடல் ஆரோக்கியமும் உலக சுகமுமுண்டு அவனது கருணைக்குப் பாத்திரமாகி முடிவு காலத்தில் முக்ச்தியைப் பெறலாம் இத்தகைய கிடைத்தற்கரிய நாளை அனைவரும் தவறாமல் அனுஷ்டித்து அவனது அருளைப் பெற வகை செய்து கொள்ள வேண்டும்.

வைஷ்ணவர்கள் இவ்விரதத்தை கடை பிடிக்கலாம் என கருட புராணம் கூறுகிறது.

சிவராத்திரி தோன்றிய கதை

வேலையெல்லாம் முடிஞ்சு புலன்கள் அடங்கி மனம் ஆத்மாவிடம் ஈடுவதுதான் ராத்திரி அப்பொழுது யாதொரு ஆதாரமும் கிடையாது அது போலவே உடலில் உள்ள அனைத்து பொருட்களும் மாயை. மாயை இறைவனிடம் ஒன்றுமே இல்லாமல் இருள் நிறைந்திருக்கும் காலம் அதுவே ஒரு கர்ப்பத்தின் முடிவு காலம் அப்போது சிவபெருமான் பிரளயத்தை ஏற்படுத்தினார் அதனால் உலகம் சிதைந்து இதன் நிமித்தம் பிரம்மா முதல் அனைத்து உயிர் தொகுதிகளின் உயிர்கள் ஒடுங்கியிருந்தது இதனால் எங்கும் ஒரே இருள் மயமாகவே இருந்தது இதுவே மகா பிரளயம் எனப்படும்

பகல் எவ்வளவு நேரமோ சற்றேறக்குறைய இரவும் அவ்வளவு நேரம் உண்டு அதே போல் உலகம் இவ்வளவு காலமும் அவ்வளவு காலம் பிரளகாலமும் உண்டு இதில் மிஞ்சியது சிவபெருமானும் உமாதேவியும் மட்டுமே

இத்தகைய சூழ்நிலையில் மக்கள் யாவரும் உயிர் வாழும் பொருட்டு அம்பிகையானவள் நான்கு ஜாமங்களில் பரமேஸ்வரனை முறைப்படி பூஜித்தாள் மீண்டும் உலகப்படைப்பு ஏற்பட்டது அப் பொழுது புலரும் விடியல் காலை நேரம் அது சமயம் பரமேஸ்வரனே தேவியிடம் உனக்கு யாது வரம் என கேட்டு நான் தங்களை பூசித்த நாள் சிவராத்திரி எனப் பெயர் கொண்டு அந்த நாளை யாவரும் சதா போற்றி வழிபட்டு வரவேண்டும் அதே நாளில் தங்களை நினைத்து விரதம் அனுஷ்டித்தோர் உமது அருளால் பாவம் நீங்கப் பெற்று சகல பாக்கியங்களையும் பெற்று முக்தி அடைய அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள் அம்பிகை இக்காரணத்தால் சிவராத்திரி சிவ பூஜைக்கு உகந்த காலம் ஆயிற்று

மற்ற நாட்களைவிட சிவராத்திரி பன்மடங்கு சிறப்பு வாய்ந்து விளங்குவதாக புராணங்கள் கூறுகின்றன இவ்விரதத்தை அனுஷ்டித்து பலர் தீர்வு பெற்று சிறப்புடன் வாழ்ந்தாக புராணக்கதைகள் கூறுகின்றன

பார்வதிதேவி சில சமயங்களில் சிவபெருமானுடன் விளையாடி பொழுதை கழிப்பது வழக்கம் இவ்வாறாக ஒரு நாள் தேவியானவள் விளையாட்டாக சிவபெருமானின் கண்களை தனது இரு கரங்களை கொண்டு மூடினாள் அதுசமயம் உலகமே இருளில் மூழ்கியது ஒளி நிறைந்த இந்த இரவில் தேவர்கள் தவித்தார்கள் அறிந்த இறைவன் அவருக்காக மனம் இரங்கி தனது நெற்றிக்கண்ணைத் திறந்து வெளிச்சம் தருவோம் என்று முடிவை மேற்கொண்டார். சிறிது நெற்றிக்கண்ணை திறந்தார் இந்த செய்கையால் தேவியானவள் தன்னையும் அறியாது கைகளை எடுத்து பயம் கொண்டாள்

அவளுடைய பயத்தைப் போக்க எண்ணிய சிவபெருமான் அந்த நெருப்புப் பொறியை குளிரச் செய்து நிலவின் ஒளியாக மாற்றி விட்டார் திருநாவுக்கரசு சுவாமிகள் இதை ஒரு கதையாகவே குறிப்பிடுகிறார்

மரங்களை அடியோடு நகரம் உலகின் ஏழு முற்றும் இருள் மூடி ஒரு கணவர் தன் கையை விட்டு மடவாள் இறங்க மதிபோல் தரு ஜோதி போல அலர் வித்தகன் அவனா நமக்கோர் சரணே அப்பர் பாடல் புராணம் நான்காம் திருமுறை எட்டாம் பாடல்

உலகை காக்க வந்த விஷத்தை சிவபெருமான் உண்ட காரணத்தால் அந்த நஞ்சானது இறைவனுக்கு கேடு விளைவிக்கும் என அஞ்சிய தேவர்கள் இரவு முழுதும் தூங்காது கண் விழித்த சிவபூஜை செய்தார்கலாம்

தேவர்கள் சிவபெருமான் உட்கொண்ட நஞ்சு அவருக்கு கேடு விளையாது இருக்க எங்களுக்கு வரம் கொடுத்து அருள வேண்டு மெனச் சிவபெருமானை தேவர்கள் வழிபட்டனர் அந்த இரவே சிவராத்திரி என்று கூறப்படுகிறது.

புராணங்கள் பல கதைகள் பல வகைகளில் சிவராத்திரியும் எடுத்துரைக்கப்படுகிறது கந்த புராணத்தில் ஒரு கதை வேடன் அவன் ஏமாற்றுக்காரன் பலரிடம் பணம் பெற்று திரும்ப தராத எத்தன் அவனால் ஏமாற்றப்பட்டவர்கள் பலர் அவன் பிடித்து சிறையில் அடைப்பது போன்று ஒரு சிவன் கோவிலில் வெளிவராத படி பகலில் அடைத்து வைத்தனர் அன்றைய நாள் மகாசிவராத்திரி

படவிளக்கம் அறந்தாங்கி அருகே தீயத்தூர் சகஸ்ர லட்சுமீஸ்வரர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விபூதி ருத்ராட்சம் அணிந்து ஒருவர் சிவன் சன்னதியில் சிவசிவ என சொல்லிய வண்ணம் சிவபூஜையில் ஈடுபட்டிருந்தனர் தனது பொழுதை கழிக்க இடவலமாக ஆலயத்தை சுற்றிவந்ததால் அங்குள்ள பக்தர்கள் சொல்லும் சிவ நாமங்களை கேட்டு தானும் விளையாட்டாக அந்த நாமாவை திரும்பத் திரும்ப சிவசிவ என அவனும் சொல்லி வந்தான் இவ்வாறு சொல்லி வந்த அவன் தன்னையும் அறியாது தான் செய்த தவறை உணர்ந்தான்

பின்தான் கானகம் சென்று பணம் பெற்றவர்களிடம் வெகுவிரைவில் பெற்ற கடனை திருப்பித் தந்து விடுவதாக கோயிலினுள் இருந்தபடியே உறுதி கூறியவாறு அவர்களிடம் பணிவன்புடன் வேண்டிக் கொண்டான்

சிவபக்தர்கள் ஆனதால் அவர்கள் மனம் இரங்கி வேடனை விடுவித்தனர் யாவரையும் பணிவன்புடன் வணங்கி இரவில் வேட்டையாட ஒரு நதியைத் தாண்டி அக்கரையை அடைந்தான் மிருகங்களை பிடிக்க வலை விரித்து வைத்து அருகில் உள்ள ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்தான்

அது வில்வ மரம் என்று அறியாது அவன் மரத்தின் தழையைப் பறித்து பறித்து கீழே எரிந்த வண்ணமாக இருந்தான்
அது சமயம் நான்கு மான்கள் அந்த பக்கம் வருவதை பார்த்தவுடன் கீழே இறங்கி வில்லை எடுத்து அம்பைத் பூட்டினான் மான்களை கொல்ல ஆயத்தமானான்

இந்த மான்கள் வேடனைப் பார்த்து அப்பாவிகளை கொன்று விடாதே என கத்தியவாறு அவனருகே சென்று நாங்கள் இல்லை என்றால் எங்களது குழந்தைகள் ஏங்கி கதறி அழ ஆரம்பிக்கும் எனவே தயவு செய்து எங்களை எதுவும் செய்து விடாதே என்றன

நான் பலரிடம் கடன் பெற்றுள்ளேன் பெற்ற கடனை திருப்பித் தர வேண்டிய கடமை பட்டவன் ஆகவே உங்களை கொன்று அந்த இறைச்சியை வைத்து தான் நான் எனது கடன்களை அடைக்க முடியும் நான் நல்வாழ்வு வாழவேண்டும் என்றால் உங்களை கொல்லாமல் கண்டிப்பாக வாழ முடியாது மேலும் உங்களது இறைச்சியால் தான் பசியால் வாடும் எனது குடும்பத்திற்கு உணவு கிடைக்கும் இத்தகைய சூழ்நிலையில் என்னால் வேறு என்ன செய்ய முடியும் என வேடன் கேட்டான்

இதனைக் கேட்ட மான்கள் மகிழ்ந்து ஐயா எங்கள் இறைச்சியால் பணக் கஷ்டமும் நீங்கி குடும்பத்தாரின் பசியும் தீரும் என்பதை கேட்க நாங்கள் மிக மகிழ்கின்றோம் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் எங்களால் காப்பாற்றப்படுவார்கள் எனில் அது நாங்கள் பூர்வஜென்மத்தில் செய்த புண்ணிய பலனே

உங்களது துன்பம் நீங்க குடும்பம் வாழ எங்களது முழு ஒத்துழைப்பை தங்களுக்கு என்றும் பரிபூரணமாக இருக்கும் ஆனால் ஒன்று எங்களுக்கு என்று பல குட்டிகள் இருக்கின்றன தனிமையாக இரைதேடும் அளவிற்கு அவர்கள் இன்னும் வளர்ச்சியடையவில்லை அதை பற்றி நினைக்கும் போது தான் எங்களுக்கு சற்று வருத்தமாக இருக்கின்றது

எனவே தயவு செய்து கருணை கூர்ந்து எங்களுக்கு சிறிது அவகாசம் கொடுத்து உதவி புரியவேண்டும் எங்களது குட்டிகளை வேறொரு பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு சத்தியம் தவறாத நாங்கள் கண்டிப்பாக திரும்பி வந்து விடுவோம் அதன்பின் எங்களைக் கொன்று உன் இஷ்டப்படி எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் எங்களை நம்பலாம் என்று கூறினார்

மான்களே நான் உங்களை நம்புவதற்கு சாமர்த்தியமான அலங்காரப் பூச்சுகள் இவை தற்போதுள்ள ஆபத்திலிருந்து நீங்கள் மீள்வதற்காக எத்தகைய அழகான ஏமாற்றத் திட்டம் தீட்டுகிறார்கள் உங்களை எவ்வாறு நான் நம்புவது? எனக் கேட்டான்

உன்னை ஏமாற்றி நாங்கள் தப்பி செல்வதால் எங்களுக்கு எவ்வித பயனுமில்லை பொய்யை கூறுவதால் நாங்கள் பாவத்தை தான் சுமப்போம் நாங்கள் வார்த்தை மாறாதவர்கள் இந்த உலகம் சத்தியத்திற்கு கட்டுப்பட்டது அதில் நாங்களும் அடக்கம்

நான் சத்தியம் தவறுவதால் நரக வேதனையை அனுபவிப்போம் எனவே எங்களையும் எங்களது வார்த்தைகளையும் கண்டிப்பாக நம்புங்கள் நாங்கள் கூறுபவை அனைத்தும் சத்தியம்
வேடன் பின் மனமிரங்கிய தன் வாக்குகளை மதிப்பளிப்பதாகக்கூறி விடை கொடுத்து அனுப்பினான்

மான்களும் அவ்விடத்தைவிட்டு சொல்லியவாறு விரைந்து ஓடினார் மான்கள் நான்கும் தங்கள் இருப்பிடம் சென்று தங்கள் குட்டிகளை வேறொரு மானிடம் ஒப்படைத்துவிட்டு வேடன் பால் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள புறப்பட்டன இது வரை காத்திருந்த வேடன் மான்கள் காணாது போகவே ஏமாற்றம் அடைந்து விட்டதாக எண்ணி மிகவும் வருந்தி வேதனை அடைந்தான்

இந்நிலையில் அந்த நான்கு மான்களும் தன்னை நாடி வருவதைக் கண்ட வேடன் மனம் மகிழ்ச்சியால் துள்ளிற்று சத்தியம் தவறாது தன்னிடம் வந்து தங்களது வார்த்தைகளை காப்பாற்றும் எண்ணம் படைத்த அவைகளை கண்டு ஆச்சரியமும் ஆனந்தமும் கொண்டான்

அவைகளின் மீது இரக்கம் ஏற்பட்டு தன்னையும் அறியாது ஒரு மனமாற்றம் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தான் அவர்களின் பரிபூரண ஒத்துழைப்பு கண்டு மகிழ்ந்தான் அதோடு நடந்து இப்படி நடந்து கொண்டதற்காக அவைகளுக்கு விடுதலை அளித்து அனுப்பினான் அதனால் மிகவும் சந்தோஷம் அடைந்த மான்கள் அதன் குட்டிகளை காணச் சென்றன

அன்றுமுதல் வேடன் எந்த மிருகத்தையும் வேட்டையாடுவதில்லை என்ற முடிவை மேற்கொண்டு சத்தியத்தை கடைபிடித்து முறையாக வாழ வழி வகுத்துக் கொண்டான் அது சமயம் தான் செய்த தவற்றை நன்கு உணர்ந்து வருந்தி அவன் நற்குணம் படைத்த வல்லவனான்

இதனை அறிந்த சிவகணங்கள் அவன் முன் தோன்றி நீ சிவராத்திரி நாளான இப்புனித தினத்தில் உன்னையும் அறியாது கானகத்தில் உபவாசம் இருந்து கண் விழித்து இரவில் மரத்திலிருந்த படியாக இலைகளைப் பறித்து கீழே இருந்த லிங்கத்தின் மீது போட்டாய் நீ செய்ததற்கான பலனை இப்போது நீ பெறப் போகிறாய்

அவனை கைலாயத்திற்கு அழைத்துச் சென்றனர் சிவதொண்டுகள் செய்து சிவன் அருள் பெற்றான் பூலோகத்தில் மான்கள் மிருகசீரிஷம் நட்சத்திர பெருமை பெற்றன அறியாமலேயே செய்து சிவராத்திரி விரதத்திற்கு இத்தகைய மகிமை என்றால் அறிந்து செய்யும் விரதத்திற்கு மகிமையை கூற வேண்டுமா?

Leave a Reply