நாமக்கல் நரசிம்மசுவாமி கோயிலில் நவராத்திரி விழா

செய்திகள்

நாமக்கல்லில் பிரசித்தி பெற்று விளங்குவதும்,​​ வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான குடவரைக் கோயிலான அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் நவராத்தி விழா கொண்டாடப்படுகிறது.

 

வரும் 8-ம் தேதி விழா துவங்குகிறது.​ வரும் 17-ம் தேதி வரை விழா நடைபெறும் நாட்களில் நாமகிரித் தாயார்,​​ நரசிம்ம சுவாமி,​​ அரங்கநாயகி தாயார்,​​ அரங்கநாதர் உற்சவ மூர்த்திகளாக ஊஞ்சலில் கொலுவீற்றிருப்பர்.

விழாவின் முடிவு நாளன்று நரசிம்மர்,​​ அரங்கநாதர் சுவாமிகள் குதிரை வாகனத்தில் விஜயதசமி அம்புபோடுதலும்,​​திருவீதி உலாவும் நடைபெறும்

Leave a Reply