அறப்பளீஸ்வர சதகம்: அரிதிலும் அரியவர்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

அரியர்

பதின்மரில் ஒருத்தர்சபை மெச்சிடப் பேசுவோர்!
பாடுவோர் நூற்றில் ஒருவர்!
பார்மீதில் ஆயிரத் தொருவர்விதி தப்பாது
பாடிப்ர சங்க மிடுவோர்!
இதனருமை அறிகுவோர் பதினா யிரத்தொருவர்!
இதையறிந் திதயம் மகிழ்வாய்
ஈகின்ற பேர்புவியி லேஅருமை யாகவே
இலக்கத்தி லேயொ ருவராம்!
துதிபெருக வரும்மூன்று காலமும் அறிந்தமெய்த்
தூயர்கோ டியில்ஒ ருவர் ஆம்.
தொல்லுலகு புகழ்காசி யேகாம் பரம்கைலை
சூழும்அவி நாசி பேரூர்
அதிகமுள வெண்காடு செங்காடு காளத்தி
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

பழைமையான உலகம் போற்றுகிற,
காசி ஏகாம்பரம் காசியும் காஞ்சியும் கயிலையும் (அடியர்) சூழும் அவிநாசியும் திருப்பேரூரும் பெருமையுடைய திருவெண்காடும் திருச்செங்கோடும் திருக்காளத்தியும் இடமாகக் கொண்ட முதல்வனே!, அவை புகழும்படி பேசுவோர்
பத்துக்கு ஒருவர், (இனிமையாகப்) பாடுவோர் நூற்றுக்கு ஒருவர், முறை தவறாமற் பாடிச் சொற்பொழிவு செய்வோர்
உலகில் ஆயிரத்தில் ஒருவர், இந்தச் சொற்பொழிவின் சிறப்பைத் தெரிந்தவர் பதினாயிரவரில் ஒருவர், இதன்
பெருமையை உணர்ந்து மனமகிழ்வுடன் பொருளளிப்போர், உலகில் அருமையாக
இலட்சத்துக்கு ஒருவர் ஆவர், புகழ் மிக வரும் முக்காலமும் உணர்ந்த உண்மையான் நல்லோர் கோடி மக்களில் ஒருவர் ஆவர்.

ஒற்றை மாமரம். (காஞ்சிபுரம் ஒற்றை மாமரத்தைத்தல விருட்சமாக வுடையது.)

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply