அறப்பளீஸ்வர சதகம்: இதற்கு இது சான்று!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil
  1. உண்மையுணர் குறி

சோதிடம் பொய்யாது மெய்யென்ப தறிவரிய
சூழ்கிரக ணம்சாட்சி ஆம்!
சொற்பெரிய வாகடம் நிசமென்கை பேதிதரு
தூயமாத் திரைசாட்சி ஆம்!
ஆதியிற் செய்ததவம் உண்டில்லை என்பதற்
காளடிமை யேசாட்சி ஆம்!
அரிதேவ தேவனென் பதையறிய முதல்நூல்
அரிச்சுவடி யேசாட்சி ஆம்!
நாதனே மாதேவன் என்பதற் கோருத்ர
நமகசம கம்சாட்சி ஆம்!
நாயேனை ரட்சிப்ப துன்பாரம்! அரியயன்
நாளும் அர்ச் சனைசெய் சரணத்
தாதிநா யகமிக்க வேதநா யகனான
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

திருமாலும் பிரமனும் எப்போதும் மலரிட்டு வழிபடும் திருவடிகளையுடைய
முதன்மையான தலைவனே!,
சிறந்த மறைமுதல்வனான பெரியோனே!, அருமை தேவனே!, கணித
நூல் பொய்படாது. உண்மையே என்பதற்கு அறிஞரேயல்லாமல்
பொதுமக்களால் அறியமுடியாத சூழும் கிரகணமே சான்று ஆகும்,
புகழ்பெற்ற பெருமைமிக்க மருத்துவநூல் உண்மையென்பதற்குப் பேதிக்குத்
தரும் நல்ல மாத்திரைகளே சான்று தரும், முன்னே செய்த நல்வினை உண்டா இல்லையா என்பதற்கு ஆளும் அடிமையுமே சான்று ஆகும். திருமால் வானவர் தலைவன் என அறிவதற்குச் சிறுவர்கள்
கற்கும் முதல் நூல் அரிச்சுவடியாக இருப்பதே சான்று ஆகும், சிவபெருமானே
தலைவன் என்பதை அறிவதற்கோ என்னில் உருத்திர நமகசமகம் என்னும்
மறைப்பனுவலே சான்று ஆகும்,
போன்று இழிவுற்ற என்னைக் காப்பது உன் பொறுப்பு.

எதனையும் ஆராயாது ஒரு முடிவுக்கு வருதல் ஒவ்வாது

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply