அறப்பளீஸ்வர சதகம்: பூலோக சொர்க்கம்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

நன்னகர்

வாவிபல கூபமுடன் ஆறருகு சேர்வதாய்,
மலைகாத வழியில் உளதாய்
வாழைகமு கொடுதெங்கு பயிராவ தாய்ச், செந்நெல்
வயல்கள் வாய்க் கால்க ளுளதாய்,
காவிகம லம்குவளை சேரேரி யுள்ள தாய்க்,
கனவர் த்த கர்கள்ம றைவலோர்
காணரிய பலகுடிகள் நிறைவுள்ள தாய், நல்ல
காவலன் இருக்கை யுளதாய்த்,
தேவரா லயம் ஆடல் பாடல் அணி மாளிகை
சிறக்கவுள தாய்ச்சற் சனர்
சேருமிடம் ஆகுமோர் ஊர்கிடைத் ததில் அதிக
சீவனமு மேகி டைத்தால்
ஆவலொ டிருந்திடுவ தேசொர்க்க வாசமென்
றறையலாம்! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

அருமை தேவனே!, பல பொய்கைகளும் கிணறுகளும் அருகில் ஆறும்
இருப்பதாய், காதவழித் தொலைவில் மலையை உடையதாய், வாழையும் கமுகும் தென்னையும் பயிராகும் வளமுடையதாய், நல்ல நெல்விளையும் வயல்களும் வாய்க்கால்களும் உடையதாய்; நீலமும் தாமரையும் குவளையும் மலர்ந்த ஏரியை உடையதாய்,
பெரிய வணிகரும் மறையவரும் மற்றும் காண்பதற்கு இனிய பலவகைக்
குடிகளும் நிறைந்ததாய், நல்ல அரசன் அரண்மனை உடையதாய்
(தலைநகரமாய்), வானவர் கோயிலும் ஆடலாலும் பாடலாலும் அழகுறும்
மாளிகைகள் சிறந்துள்ளதாய், நல்லோர் உறையும் இடமுடைய ஒரு நகரம் வாய்த்து, அதில் அங்கு நன்றாக வாழ்க்கைக்கு வழியும் பொருந்திவிட்டால் விருப்பத்துடன் இருப்பதே சுவர்க்க வாழ்வு என்று இயம்பலாம்.

வேளாண்மையும் வணிகமும் வளத்திற்கும், ஆடல் பாடலும்
ஆறும் கூபமும் வயல் வாய்க்கால்களும் ஏரியும், பொழிலும் பொய்கையும்
இன்பப் பொழுதுபோக்கிற்கும், நல்லோருறைவது நன்னெறிக்கும், வானவர்
கோயில் வழிபாட்டிற்கும், காவலன் உறைதல் சிறப்பிற்கும் ஆகும்.

ஐம்புலனுக்கும் விருந்தளிப்பதே நகரமாக இருத்தல் வேண்டும்

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply