அறப்பளீஸ்வர சதகம்: கேடு கெட்டவனுக்கு கிடைக்கும் பதவி!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

நற்பண்புக்கு இடமிலார்

வெறிகொண்ட மற்கடம் பேய்கொண்டு, கள்ளுண்டு
வெங்காஞ் சொறிப்பு தலிலே
வீழ்ந்து, தேள்கொட்டி டச்சன்மார்க்கம் எள்ளளவும்
மேவுமோ? மேவா துபோல்,
குறைகின்ற புத்தியாய், அதில் அற்ப சாதியாய்க்,
கூடவே இளமை உண்டாய்க்,
கொஞ்சமாம் அதிகார மும்கிடைத் தால்மிக்க
குவலயந் தனில்அ வர்க்கு,
நிறைகின்ற பத்தியும் சீலமும் மேன்மையும்
நிதானமும் பெரியோர் கள்மேல்
நேசமும் ஈகையும் இவையெலாம் கனவிலும்
நினைவிலும் வராது கண்டாய்;
அறைகின்ற சுருதியின் பொருளான வள்ளலே!
அண்ணலே ! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

புகழப்படுகின்ற மறையின் பொருளான கொடையாளியே!, தலைவனே! அருமை தேவனே!, வெறி
பிடித்த ஒரு குரங்கு, பேயாற் பிடிக்கப்பட்டு, அதன்மேற்) கள்ளையுங் குடித்து, (மேலும்) கொடிய பூனைக்காஞ்சொறிப் புதரில் விழுந்து, (அவற்றுடன்) தேளாலும் கொட்டப்பெற்றால், (அக் குரங்குக்கு) சிறிதளவேனும் நன்னெறியிலே
செல்லும் நிலை உண்டாகுமோ? (அவ்வாறு அக்
குரங்குக்கு நன்னெறி) தோன்றாததுபோல்),
சிற்றறிவுடன், மேலும் இழிசெயலுடைய குலத்தினராய், அவற்றுடன் இளமைப் பருவமும் உடையவராய் (இருந்து)
அவர்கட்கு, சிறிது
தலைமைப்பதவி கிடைத்தாலும், உலகத்தில், நிறைந்த கடவுள் அன்பும், ஒழுக்கமும், பெருந்தன்மையும், அமைதியும், அறிஞரிடம் நட்பும், கொடைப்பண்பும்,
(ஆகிய) இவைகள் யாவும்
நினைவிலேயன்றிக் கனவிலும் உண்டாகா.

பிறருக்குப் பயன்படாமலும், தீமை செய்துகொண்டும், மற்றவரைத்
துன்புறுத்தியும் உயர்ந்த பண்பு பதியப்பெறாத பரம்பரை. இயல்பாகவே
குறும்பு செய்யும் குரங்கு வெறிகொண்டு பேய் பிடித்துக், கள்ளைக்
குடித்துத் தினவெடுத்துத் தேள் கொட்டுதலையும் பெற்றாற் செய்யும்
பிழைகள் போலவே, இயல்பாகவே சிற்றறிவுடைய பரம்பரையிலே
பிறந்தவர்க்கு இளமையும் தலைமைப்பதவியும் கிடைத்தால் தவறுகள்
செய்வார்களேயன்றி, நலம்புரியமாட்டார்கள்.

அற்பருக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியிற் குடைபிடிப்பர். என்பதாம்

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply