பெரியானை கணபதி!

கிராமக் கோயில்

தினமும் விநாயகரை பல நறுமண மலர்களால் போற்றித் துதித்து வழிபட்டு வந்தார் ஒüவையார். இந்நிலையில் பெரியபுராணக் கதையின் நாயகன் சுந்தரமூர்த்தி சுவாமிகள், இறைவனை வணங்குவதற்காகக் கைலாயம் செல்ல முடிவு செய்தார். அவரோடு சேரமான் பெருமாள் நாயனாரும் உடன் சென்றார். இவர்களோடு தானும் கைலாயம் சென்று இறைவனை தரிசிக்க விரும்பினார் ஒüவையார். எனவே திருக்கோயிலுக்குச் சென்று ஆனை முகப்பெருமானுக்கு அவசர அவசரமாக பூஜை செய்தார். அதைக் கண்ட விநாயகர், “”அம்மா என்ன அவசரம்” என்றார். ஒüவையாரும் அதற்கான காரணத்தைக் கூறினார். அதைக் கேட்டு சிரித்த விநாயகர், “”அவசரப்படாமல் வழக்கம்போல் பூஜை செய். அவர்களுக்கு முன் நீ கைலாயக் காட்சியைக் காணலாம்” என்றார். இதனால் மகிழ்ந்த ஒüவையார், “”சீதக்களபச் செந்தாமரை” எனத் தொடங்கும் அகவலை இயற்றினார். சந்தோஷமடைந்த வேழமுகத்தான், பெரிய உருவம் கொண்டு தனது துதிக்கையில் ஒüவையாரை ஏந்தி கைலாய வாயிலில் கொண்டு சேர்த்தார். அவருக்குப் பின் வெள்ளை யானையில் சுந்தரரும், குதிரையில் சேரமான் பெருமாள் நாயனாரும் வந்தனர்.

தங்களுக்கு முன்னால் ஒüவை வந்து சேர்ந்தது குறித்து இருவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. அதுபற்றி ஒüவையிடமே கேட்க,

“”மதுரமொழி நல்லுமையாள் புதல்வன் மலர்ப்பதத்தை

முதிர நினைய வல்லார்க்கரிதோ! முகில் போல் முழங்கி

அதிர நடந்திடும் யானையுந் தேருமதன் பின்வருங்

குதிரையுங் காதங் கிழவியுங் காதங் குலமன்னரே” என்றார் ஒüவை. அதாவது, “”கணபதியின் பூஜை கைமேல் பலன் தரும். விநாயகர் திருப்பாதத்தை நினைப்பவருக்கு யானை, குதிரை, தேர் எல்லாம் காத தூரம் பின்னால்தான் வரும். எனவேதான் நான் உங்களுக்கு முன்னால் கயிலையை அடைந்தேன்” என்பது இதன் பொருள்.

ஒüவையாரை கைலாயத்தில் சேர்ப்பதற்காக பெரிய உருவெடுத்ததால் இந்தத் தல விநாயகருக்கு “”பெரியானை கணபதி” என்ற பெயர் ஏற்பட்டது.

ஒவ்வொரு சதுர்த்தியன்றும் பெரியானை கணபதிக்கு அலங்கார அபிஷேகம், சந்தனக் காப்பு, மாலையில் சிறப்பு புறப்பாடு ஆகிய விசேஷங்கள் நடக்கின்றன. அவ்வகையில் இந்த வருடமும் நடக்கும் விசேஷங்களில் பங்கேற்று ஆனை முகத்தானின் அருள் பெறுவோம்.

தகவல்: வெள்ளிமணி

Leave a Reply