ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு சிறப்பு!

ஆலய தரிசனம்

 

எல்லா கோயில்களிலும் ஒவ்வொரு சிறப்பு காணப்படும் அந்த வகையில் இன்று சில ஆலயங்களில் காணப்படும் சிறப்புகளைப் பற்றி காண்போம்

மைசூர்

மைசூர் நூக்கிஹல்லியில்  கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் மகாலட்சுமி எட்டு திருக்கரங்களுடன் நடனம் ஆடும் திருக்கோலத்திலும், சரஸ்வதிதேவி சித்திவிநாயகர் கூட நடனமாடும் உருவங்களாக பக்தர்களுக்கு திவ்ய தரிசனம் அளிப்பது எங்குமே காண முடியாத காட்சி

சென்னிமலை முருகன்

 

சிங்கத்துடன் நிற்கும் நிலையில் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார் திருப்போரூர் முருகன் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் பக்தர்களுக்கு அனுக்கிரகம் தருகிறார் சரவணபவ ஒரு திருமுகம் 6 திருக்கரங்களில் முறையே வில் அம்பு கேடயம் நரம்பு வச்சிரம் கோழிக் கொடி மற்றும் நகைகளை அணிந்தவராக விபூதி அணிந்த அழகிய திருமேனியுடன் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் இருக்கும் தோனி அன்னையின் சிற்பத்தின் மீது தண்ணீரை ஊற்றினால் விருப்பம் வாயை திறந்து சிரிப்பது போல் காணப்படுகிறது

திருவிடைமருதூர் பிரம்மஹத்தி பிடித்தவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மண்டலம் இவ்வூர்க் கோயிலில் இருந்து ஈஸ்வரனை வழிபட்டு வணங்கி வந்தால் நோய் நீங்கப் படுகிறார்கள் இக்கோயில் பிரகாரத்தில் ஒரு தடவை சுற்றி வந்தாலே பாரத புண்ணிய பூமியின் அனைத்து கோயில்களிலும் தரிசனம் செய்ததற்கு சமமாகக் கருதப்படுகிறது.

காரைக்கால் திருமலைராயன் பட்டினத்தில் ஆயிரம் காளியம்மன் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கிறார் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை தான் மூன்று நாட்கள் ஆயிரம் காளி அம்மனை பெட்டியிலிருந்து எடுத்து மாம்பழங்கள் ஆயிரம் மாதுளைப் பழங்கள் ஆயிரம் ஆப்பிள் பழங்கள் ஆயிரம். ஆயிரம் கொய்யா பழங்கள் ஆரஞ்சு ஆயிரம் வாழைப்பழங்கள் ஆயிரம் சீடை முறுக்கு அதிரசம் போன்ற பட்சணங்கள் 1000 என படைத்து நிவேதனம் செய்கிறார்கள்.

திருவனந்தபுரம்

இங்குள்ள அனந்த பத்மநாப பெருமாள் கோவிலில் எழுந்திருக்கும் அனுமார் மேல் சாத்தப்படும் வெண்ணெய் கோடையில் கூட எத்தனை நாட்களானாலும் உருகுவதும் இல்லை கெட்டதும் இல்லை

சிங்கிரி கோயில் மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் நரசிம்ம சுவாமிகள் மட்டும் இந்த விஷ்ணு கோவிலில் யோக நிலையில் யோக நரசிம்மராக பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார் அனைத்து பெருமாள் கோயிலிலும் லட்சுமி நரசிம்மரை மட்டும் கர்ப்பகிரகத்தில் மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது ஆனால் பாண்டி விழுப்புரம் பாதையில் உள்ள சிங்கிரி கோயில் என்ற திருத்தலத்தில் மூலவர் உக்கிர நரசிம்மராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்

உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் முன்புற கோபுர வாசல் கதவுகள் இல்லை ஜன்னல் போல ஒரு வழி மட்டும் தான் இருக்கிறது வருடம் முழுவதும் அந்த ஜன்னல் வழியாக மட்டுமே பக்தர்கள் கிருஷ்ணரை தரிசனம் செய்ய வேண்டும் என்பது நியதி

கர்நாடகம் கோலாரில் மூலுபாகுல்  என்ற இடத்தில் கோயில் கொண்டுள்ள அனுமாருக்கு பக்தர்கள் துளசிக்கு பதிலாக தாழம்பூ மாலை அணிவிக்கிறார்கள்

காஞ்சிபுரம் அருகிலுள்ள உத்திரமேரூரில் சுந்தரவன பெருமாள் கோயில் உள்ளது இங்கு திருமாலின் ஒன்பது வடிவங்கள் மூலவர்களாக காட்சியளிக்கின்றனர் கடலூரில் மேற்கே ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருத்தலம் திருமாணிகுழி இங்கு சிவன் கோயில் பாடல் பெற்ற தலம் மூலவர் மாணிக்கவாசகருக்கும் தீபாரதனை காட்டுவதற்கும் சுவாமியின் எதிரே உள்ள திரைக்கும் தீபாராதனை காட்டிவிட்டு பிறகு சுவாமிக்கு காட்டப்படுகிறது திரையில் ஏகாதச ருத்ரர்களில் பீமருத்ரர் உருவம் இருக்கின்றது

சென்னைக்கு அருகில் உள்ளது திரிசூலம். இங்கு தட்சிணாமூர்த்தி வலது கால் மீது மற்றொரு காலை மடித்து போடாமல் குத்திட்டு வீரபத்ர நிலையில் காட்சி தருகிறார் இதுபோல எங்கும் காணமுடியாது

காஞ்சிபுரத்திற்கு தெற்கு 10 மைல் தூரத்தில் உள்ளது திருமாகறல் இங்கு புற்றின் மீது எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது உடும்பு தழுவிக் கொண்டிருக்கும் கோலம் அற்புதமானது ராஜேந்திர சோழனுக்கு சுவாமி பொன் நிற உடல் தோன்றி அவன் துரத்தும்போது ஓடி புற்றின் ஒளிந்து வெளிப்பட்டு அருளினார் என்பது வரலாறு இங்கு சோமவார தரிசனம் விசேஷம்

கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு அருகே ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த பகுதியில் ஒரு விநாயகர் கோயில் அமைந்திருக்கிறது இந்த விநாயகருக்கு மரகத விநாயகர் என்று பெயர் விநாயகரின் உருவம் பச்சை நிறத்தில் அற்புதமாக காட்சி தருவதை மக்கள் மனம் குளிர  கண்டு வணங்கி வருகிறார்கள்

காஞ்சியில் இருக்கும் முக்தீஸ்வரர் கோயிலில் அதிசயம் சிவன் கோயில்களில் நந்தி சன்னதி இருக்கும் ஆனால் இங்கு கருடாழ்வார் இருக்கிறார் இவருக்கு தனி சன்னதி உள்ளது

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள ஊர் திருப்பெரும்புலியூர் இங்கு உள்ள பாடல் பெற்ற வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் சுவாமி இருக்கும் இடத்தில் உள்ள கற்கள் தாமரைபோல் வட்டமாய் போடப்பட்டிருக்கிறது சுவாமி தாமரை மலர் மீது எழுந்தருளி உள்ளது போல் அற்புதமாக இருக்கிறது

நன்னலம் தாலுகாவைச் சேர்ந்த பேரளம் என்ற ஊரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது திருமீயச்சூர் லலிதா பரமேஸ்வரி கோவில் கொண்டுள்ளாள். இங்கு  நவகிரகங்கள் கிடையாது நாகர்கள் உள்ளனர். இந்த 12 நாகர்கள் எந்த தோஷங்கள் இருந்தாலும் 12 தீபங்கள் ஏற்றி பாலபிஷேகம் செய்து நைவேத்தியம் வைத்து வணங்கினால் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகும்.

மற்ற சிவாலயங்களில் இல்லாத சிறப்பு திருவாரூர் தியாகராஜர் ஆலயத்திற்கு உண்டு. எல்லா ஆலயங்களிலிலும் சுவாமிக்கு எதிரே நந்தி படுத்திருக்கும் ஆனால் திருவாரூர் தியாகராஜருக்கு எதிரே படுக்க கூடாது என்ற மரியாதையின் நிமித்தம் நந்திதேவர் நின்றுகொண்டு இருக்கிறார்.

விருதாச்சலத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி திருக்கோயில் மூலவருக்கு நாள்தோறும் திருமஞ்சனம் செய்த பிறகு முஸ்தாபா சூரணம் எனும் மகா பிரசாதம் வழங்கப்படுகிறது கோரைக் கிழங்கு சர்க்கரை பசுநெய் பச்சை கற்பூரம் ஏலப்பொடி ஆகிய பொருட்களால் செய்யப்பட்ட பிரசாதம் பல நோய்களை தீர்க்க வல்லது.

திருப்புனவாயில் இங்குள்ள பழம்பதி நாதர் திருக்கோயில் நந்தியம் மூல லிங்கம் ஆவுடையார் மிகப் பெரியது சுவாமிக்கு வஸ்திரம் மூன்று முழம் வேண்டும் ஆவுடையாருக்கு 30 முழம் வேண்டும் மூன்று முழமும் ஒரு சுற்று முப்பது முழமும் ஒரு சுற்று என்று சொல்வது இந்த தளத்தில் சுவாமியை பற்றித்தான்.

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் என்று ஊருக்கு வடக்கே உள்ள ஊர் புறவார் பனங்காட்டூர் பனையபுரம் என்றும் அழைக்கப்படுகிறது இங்குள்ள பாடல் பெற்ற ஸ்தலம் பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில் சித்திரை மாதம் முதல் தேதி  முதல் ஏழாம் தேதி வரை ஒவ்வொரு நாள் காலையிலும் சூரியன் உதயமாகும் பொழுது சூரியக் கதிர்கள் சுவாமி மேலும் பின்பு தேவியார் மேலும் விழுகின்ற தரிசனம் அற்புதமானது

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உற்சவ நந்தி அனுமார் போன்ற தோற்றத்தை அளிக்கிறார் இரு கரங்கள் கூப்பி இரு கரங்களில் மான் மழுவுடன் காட்சி தருகிறார் மறைத்து விட்டுப் பார்த்தால் அனுமான் போன்றே காணப்படுகிறார் குரங்கு வால் போன்று தனியாகவும் பின் பக்க இடத்தில் கொஞ்சம் தோற்றம் அளிப்பது அழகாக இருக்கின்றது

Leave a Reply