682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
மதுரை: சித்திரை திருவிழா முன்னிட்டு, கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதற்காக கள்ளழகர் அழகர், மலையிலிருந்து புறப்பட்டார்.
அவர் , மதுரை தல்லாகுளத்தில் திங்கள் இரவு எதிர் சேர்வை நடைபெறும். அதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை மதுரை வைகை ஆற்றில் அலை இறங்குகிறார். இதற்காக, மதுரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்பும், பந்தல்களம் அமைக்கப் பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக, வைகை ஆற்றில் தண்ணீர் திறந்த பட்டுள்ளது.
விழாவினை ஒட்டி, மதுரை நகரம் விழா கோலம் பூண்டுள்ளது. கள்ளழகரை வரவேற்க மதுரை மக்கள் தயாராகிவிட்டனர்.
இதே போல மதுரை மாவட்டம் சோழவந்தானில் வைகை ஆற்றில் ஜனநாராயணப் பெருமாள் கள்ளழகர் திருக்கோவில் இறங்குகிறார். மற்றும் அணைப்பட்டி கிராமத்தில் அழகர் இறங்கி பக்தருக்கு காட்சி அளிக்கிறார். இதை ஒட்டி கிராமங்கள், விழாக்கோலம் பூண்டுள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருத்தோராட்டம்:
முன்னதாக இன்று காலை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய தேரோட்டம் நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதையடுத்து, மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள், மீனாட்சியம்மன் தேராட்டத்தை கண்டு தரிசித்தனர். விழாவையொட்டி, பக்தர்கள் நீர் மோர், பானகம் வழங்கினர்.
அழகர் திருவிழாவுக்கு, துருத்தி விற்பனை:
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றல் இறங்கும் பொழுது சாமி மீது தண்ணீரை பீச்சி அடிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஆட்டு தோலால் செய்யப்பட்ட துருத்தி விற்பனை தொடங்கப்பட்டது.
மதுரை சித்திரை திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி நேற்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது இதனைத் தொடர்ந்து இன்று மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மற்றும் நாளை காலை தேரோட்டமும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது . அதனைத் தொடர்ந்து நாளை இரவு எதிர்சேவை நடைபெற உள்ளது. பின்னர் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை மறுநாள் காலை நடைபெற உள்ளது. அப்போது கள்ளழகர் சுவாமிக்கு விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் கள்ளழகர் வைகை ஆற்றில் தங்கக் குதிரையில் இறங்கும் பொழுது ஆட்டு தோலால் செய்யப்பட்ட துருத்தியை வைத்து தண்ணீரை சுவாமி மீது பீய்ச்சி அடிப்பார்கள்.
துருத்தி என்பது ஆட்டு தோலால் செய்யப்பட்ட தண்ணீர் பை, இந்த துருத்தி தற்போது மதுரை அவனியாபுரம் பகுதியில் ரூபாய் 500 முதல் 600 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. ஏராளமான கள்ளழகர் பக்தர்கள், விரதம் இருப்பவர்கள் ஆவலுடன் இந்த ஆட்டு தோலால் செய்யப்பட்ட துருத்தியை வாங்கி செல்கின்றனர். ஒருபுறம் சித்திரை திருவிழாவையொட்டி மதுரையே களைகட்டி உள்ள நிலையில் மறுபுறம் இந்த துருத்தி வியாபாரம் சூடு பிடித்து வருகிறது.