பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்ற வலியுறுத்தி ஆர்பாட்டம்; இந்து முன்னணியினர் கைது!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

thiruparankundram murugan pallakku

மதுரை அருகே பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை, திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சார்பில் மலை மேல் கார்த்திகை தீபம்யேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றறது. மதுரை தெற்கு காவல் துணை ஆணையர் பிரதிப் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்ற இந்து முன்னணி இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா போன்ற அமைப்புகள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள விநாயகர் கோவில் அருகே உள்ள மோட்ச தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.

இந்து அமைப்புகளோ மலைமேலுள்ள கார்த்திகை தீபத் தூணில் நீண்ட காலமாக கார்த்திகை தீபம் ஏற்ற கோரி இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் 16 கால் மண்டபத்திலிருந்து
கார்த்திகை தீபம் ஏற்ற ஊர்வலமாக புறப்பட்டனர்.

திருப்பரங்குன்றம் பகுதியில் கார்த்திகை தீபம் தொடர்பாக ஊர்வலம் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் தலைமையில்
மாநில செயலாளர் சேவகன் அரசு பாண்டி கோட்டச் செயலாளர் கலாநிதி மாறன் மாவட்டச் செயலாளர் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட இந்து முன்னணியினர், போலீசார் தடையை மீறி ஊர்வலம் சென்றனர். இதனை அடுத்து, போலீசார் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட அனைவரையும்  கைது செய்தனர்..

Leave a Reply