திருமலையில் நாளை மலையப்ப சுவாமி வேட்டை உற்சவம்

செய்திகள்

திருப்பதி, ஜன. 14: திருமலையில் வரும் 16-ம் தேதி மலையப்ப சுவாமி பார்வேட்டை உற்சவம் நடைபெற உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் காணும் பொங்கலன்று மலையப்ப சுவாமிகள் வேட்டைக்கு செல்வது ஐதீகம். அதனடிப்படையில் ஸ்ரீகிருஷ்ணரோடு மலையப்ப சுவாமிகள், சர்வ பூபால வாகனத்தில், வேல், அம்பு, சங்கு, சக்கரம் உள்ளிட்ட பஞ்ச ஆயுதங்களோடு திருமலையிலுள்ள வனத்துக்குச் சென்று வேட்டையாடி பின் பார்வேட்டை மண்டபத்துக்கு ஞாயிற்றுக்கிழமை செல்வார். அதனையடுத்து கோயிலுக்குச் சென்று சேருவார். அன்றைய தினம் மாலையில் கோதா தேவி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

Leave a Reply