சரண்: ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்
abinava vidhyatheertha swamiji - Dhinasari Tamil

ஸத்வகுணத்தை விசேஷமாக கொண்டிருப்பவர் குரு ஆவார். ப்ரஹ்ம நிஷ்டர்களாய் இருக்கப்பட்டவர்கள் எப்பொழுதும் சத்வ குணத்திலேயே இருப்பர்.

சத்வ குணத்திலேயே இருப்பவர் எப்பொழுதும் யதார்த்தமான (ஒரு பொருளின் உண்மையான நிலையின்) அறிவையே கொண்டிருப்பர். ஆகையால் அப்பேற்பட்டவர்களிடம் நாம் சரணமடைந்தோமானால் நமக்கு எப்பொழுதும் தவறான அறிவு இருக்கவே இருக்காது.

அதை விடுத்து ரஜஸ் மற்றும் தமோ குணங்களுக்கு இலக்காக இருப்பவர்களிடம் சேர்ந்தோமானால் நமக்கும் பயம், தவறான அறிவு, மோஹம் ஆகியவைகள் எல்லாம் வந்து சேரும்.

ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Leave a Reply