அறப்பளீஸ்வர சதகம்: பெண் பூப்படைந்த வார பலன்..!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

பூப்பு வாரம்

அருக்கனுக் கதிரோகி யாவள்;நற் சோமனுக்
கானகற் புடைய ளாவாள்;
அங்கார கற்குவெகு துக்கியா வாள்;புந்தி
அளவில்பைங் குழவி பெறுவாள்;
திருத்தகு வியாழத்தின் மிக்கசம் பத்தினொடு
சிறுவரைப் பெற்றெ டுப்பாள்;
சீருடைய பார்க்கவற் கதிபோக வதியுமாம்;
திருவுமுண் டாயி ருப்பாள்;
கருத்தழிந்து எழில்குன்றி வறுமைகொண்டு அலைகுவாள்
காரிவா ரத்தி லாகில்;
களபமுலை மடமாதர் புட்பவதி யாம்வார
காலபலன் என்று ரைசெய்வார்;
அருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட சோதியே!
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

அன்புடன் எளிய என்னை அடிமையாக ஏற்ற பேரொளியே!; ஞாயிற்றுக் கிழமையில் மிகுநோயுடையவள் ஆவள்,
நல்ல திங்களில் மிகுதியான கற்புடையவள் ஆவாள், செவ்வாயில் மிகுந்த வருத்தமுடையவள் ஆவாள், புதனில் மிகுதியான குழந்தைகளைப் பெறுவாள், சிறப்புற்ற வியாழனில் அளவற்ற செல்வத்துடன் மக்கட்பேறும் உடையவளாயிருப்பாள், புகழ்மிக்க வெள்ளியில் மிகவும் இன்பமுடையவளும் செல்வமுடையவளும் ஆவாள், சனிக்கிழமையில் ஆனால் மனங்கெட்டு, அழகிழந்து, வறுமையுடன் திரிவாள், கலவைச் சந்தனம் பூசிய கொங்கையையுடைய பெண்கள் பூப்படைகிற வாரகால பலன் (இவை) எனக் (கற்றவர்) கூறுவர்.

பெண்கள் ஞாயிறு, செவ்வாய், சனிக்கிழமைகளில் பூப்படைதல் தீமை; மற்றக் கிழமைகள் நலம்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply