e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeb5e0af80e0ae9fe0af81-e0aeaa.jpg" alt="arapaliswarar - Dhinasari Tamil" class="wp-image-239389 lazyload ewww_webp_lazy_load" title="அறப்பளீஸ்வர சதகம்: வீடு புக ஆகும் மாதம்! 1 - Dhinasari Tamil" decoding="async" data-sizes="auto" data-src-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeb5e0af80e0ae9fe0af81-e0aeaa.jpg.webp" data-srcset-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeb5e0af80e0ae9fe0af81-e0aeaa.jpg.webp 1024w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeb5e0af80e0ae9fe0af81-e0aeaa-2.jpg.webp 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeb5e0af80e0ae9fe0af81-e0aeaa-3.jpg.webp 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeb5e0af80e0ae9fe0af81-e0aeaa-1.jpg.webp 1200w" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeb5e0af80e0ae9fe0af81-e0aeaa.jpg 1024w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeb5e0af80e0ae9fe0af81-e0aeaa-2.jpg 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeb5e0af80e0ae9fe0af81-e0aeaa-3.jpg 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeb5e0af80e0ae9fe0af81-e0aeaa-1.jpg 1200w">மனை கோலுவதற்கு மாதம்
சித்திரைத் திங்கள்தனில் மனைகோல மனைபுகச் செல்வம்உண் டதினும் நலமே சேரும்வை காசிக்கு; மேனாள் அரன்புரம் தீயிட்ட தானி யாகா; வெற்றிகொள் இராகவன் தேவிசிறை சேர்கடகம் வீறல்ல; ஆவ ணிசுகம்; மேவிடுங் கன்னியிர ணியன் மாண்ட தாகாது; மேன்மையுண் டைப்ப சிக்கே; உத்தமம் கார்த்திகைக் காகாது மார்கழியில் ஓங்குபா ரதம்வந் தநாள்; உயர்வுண்டு மகரத்தில்; மாசிமா தத்தில்விடம் உம்பர்கோன் உண்ட தாகாது; அத்தநீ! மாரனை எரித்தபங் குனிதானும் ஆகுமோ! அருமை மதவேள் அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் அறப்பளீ சுரதே வனே!
தலைவனே!, அருமை தேவனே!, சித்திரைத்திங்களில் வீடுகோலினாலும் வீடு குடி புகுந்தாலும் செல்வம் உண்டாகும், சித்திரையிலும் வைகாசித் திங்களில் நன்மையே உண்டாகும், முற்காலத்தில் ஆனித்திங்களிலேதான் சிவபெருமான் முப்புரத்திற்கு நெருப்பிட்டது ஆகையால் ஆனி ஆகாது, வெற்றியைக்கொண்ட இராமன் மனைவி சிறைசென்ற ஆடித்திங்கள் சிறப்புடையது அன்று, ஆவணித்திங்கள் நலம் பொருந்தும், புரட்டாசித்திங்கள் இரணியன் இறந்தது, ஆகையால், தகாதது, ஐப்பசித் திங்களில் உயர்வு ஆண்டு, கார்த்திகைத்திங்களில் நன்மை, பெரிய பாரதச் சண்டை வந்த காலமான மார்கழித்திங்களில் தகாது, தைத்திங்களில் மேன்மை உண்டாகும், உம்பர்கோன் விடம் உண்டது வானவர் தலைவனான சிவபிரான் நஞ்சுண்டதாகிய மாசித்திங்களில் தகாது, நீ காமனை எரித்த பங்குனித்திங்களும் தகுமோ? (தகாது)
Source: தமிழ் தினசரி | dhinasari.com
Related