அறிந்து கொள்வோம்.. சனாதன தர்மத்தின் காலக்கணக்கு!

செய்திகள் ஜோதிடம்
sanathana dharma
sanathana dharma

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய
சில முக்கிய விஷயங்கள்:

சனாதன தர்மத்தின் காலகணக்கு..!

1 நாள் = 60 நாழிகை (24 மணி)
1 மணி = 2.5 நாழிகை = 60 நிமிடங்கள்
1 நாழிகை = 24 நிமிடங்கள்
1 நாழிகை = 60 விநாழிகை 24 நிமிடங்கள்
1 நிமிடம் = 2.5 விநாழிகை = 60 விநாடிகள்
1 விநாழிகை = 24 விநாடிகள்
1 விநாழிகை = 60 லிப்தம்‌ 24 விநாடிகள்
1 விநாடி = 2.5 லிப்தம் = 100 செண்டி விநாடிகள்
1 லிப்தம் = 40 செண்டி விநாடிகள்
1 லிப்தம் = 60 விலிப்தம் 40 செண்டி விநாடிகள்*
1 செண்டி விநாடி = 1.5 விலிப்தம் = 10 மில்லி விநாடிகள்
1 விலிப்தம் = 6.6666 அல்லது 6.7 மில்லி விநாடிகள்

1 விலிப்தம் = 60 பரா 6.7 மில்லி விநாடிகள்
1 மில்லி விநாடி = 8.95 அல்லது 9 பரா = 1000 மைக்ரோ விநாடிகள்
1 பரா = 111 மைக்ரோ விநாடிகள்
1 பரா = 60 தத்பர
111 மைக்ரோ விநாடிகள்
1 மைக்ரோ விநாடி = .5 தத்பரா = 1000 நானோ விநாடிகள்
1 தத்பரா = 2000 நானோ விநாடிகள்

30 நாள் = 1 மாதம்
12 மாதங்கள் = 1வருடம்
60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை)
3000 சுழற்சிகள் = 1 யுகம்
4 யுகங்கள் = 1 சதுர்யுகம்
71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்தரம்
14 மன்வந்த்ரங்கள் = 1 கல்பம்

ஒரு கல்பம் என்பது நானூற்று முப்பத்து இரண்டு கோடி மனுட வருடங்கள் (கணக்கதிகாரம்). இதில் பாதி முடிந்து விட்டது.
இப்பொழுது நடந்துகொண்டிருப்பது, த்விதீய பரார்த்தம் – இரண்டாவது பரார்த்தம்.

ஸ்வேதவராஹ கல்பம் – இரண்டாவது பரார்த்தத்தின் பிரம்மாவின் முதல் நாள் ஸ்வேத வராஹ கல்பம் எனப்படும். வாயு புராணத்தின் கணக்குப்படி மொத்தம் 36 கல்பங்கள் உள்ளன. இந்த உலகத்தை விஷ்ணு வெள்ளைப் பன்றி உருவம் (ஸ்வேத வராஹம்) கொண்டு வெளிக்கொணர்ந்த காலவெள்ளத்தில் உட்பட்டது என்பதால் இது ஸ்வேத வராஹ கல்பம் எனப்பட்டது.

வைவஸ்வத மன்வந்தரம் – நடந்து கொண்டிருக்கும் ஸ்வேத வராஹ கல்பம் 14 மன்வந்திரங்களை உள்ளடக்கியது. ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர் யுகங்கள் கொண்டது.

14 மன்வந்திரங் களாவன

1.ஸ்வாயம்புவ மன்வந்திரம், 2.ஸ்வரோசிஷ மன்வந்திரம், 3.உத்தம மன்வந்திரம், 4.தாமச மன்வந்திரம், 5.ரைவத மன்வந்திரம், 6.சாக்ஷ¤ஷ மன்வந்திரம், 7.வைவஸ்வத மன்வந்திரம், 8.சாவர்ணிக மன்வந்திரம், 9.தக்ஷ சாவர்ணிக மன்வந்திரம், 10.ப்ரமஹா சாவர்ணிக மன்வந்திரம், 11.தர்ம சாவர்ணிக மன்வந்திரம், 12.ருத்ர சாவர்ணிக மன்வந்திரம், 13.தேவ சாவர்ணிக மன்வந்திரம், 14.சந்திர சாவர்ணிக மன்வந்திரம்.
ஏழாவது மன்வந்திரமாகிய வைவஸ்வத மன்வந்திரத்தில் இருக்கின்றோம்.

அஷ்டாவிம்சதி (28) தமே கலியுகே – 71 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்திரம் என்று கண்டோம். வைவஸ்வத மன்வந்திரத்தினுடைய 71 சதுர்யுகங்கள் கொண்ட பாதையில் 28வது சதுர்யுகத்திலிருக்கும் நான்கு யுகங்களான கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்பதில் வரும் கடைசி யுகமான கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தக் கலியுகம் முடிந்து அடுத்த சதுர்யுகம் தொடங்கும். அது 29 வது சதுர்யுகத்தின் கிருத யுகத்தில் தொடங்கும்.

இதுவரை வந்தது கால அளவைகள் அடுத்தது நாம் இருக்கும் இடத்தின் அளவைகள். இவற்றைச் சற்றே சுருக்கமாகக் காண்போம்.

ஜம்பூத்வீபே – பரந்த பால்வெளியின் பல அண்டங்களில் ஒரு அண்டத்தின் சின்னஞ்சிறு பாகத்தின் ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். த்வீபம் என்பது தீவு என்று அர்த்தம். பரந்த பால்வெளிக் கடலில் உள்ள ஒவ்வொரு அண்டமும் ஒரு தீவு போலத்தான். ஏழு தீவுகள் உள்ளன.

(1. ஜம்பூ த்வீபம் (நாம் வசிப்பது – நீரால் சூழப்பட்டுள்ளது), 2. பிலக்ஷ த்வீபம், 3. சான்மலி த்வீபம், 4. குச த்வீபம், 5. க்ரௌஞ்ச த்வீபம், 6. சாக த்வீபம், 7. புஷ்கர த்வீபம்)

பாரத வர்ஷே – த்வீபங்கள் எனும் தீவுகளுள் ஒன்றான ஜம்புத்வீபம் ஒன்பது வர்ஷங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பாரத வர்ஷத்தில் தான் நாம் வசிக்கின்றோம்.

(1. பாரத வர்ஷம், 2.ஹேமகூட வர்ஷம், 3. நைஷத வர்ஷத்ம், 4.இளாவ்ருத வர்ஷம், 5. ரம்ய வர்ஷம், 6. ச்வேத வர்ஷம், 7. குரு வர்ஷம், 8. பத்ராச்வ வர்ஷம், 9.கந்தமாதன வர்ஷம்)

நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”

  1. வருடங்கள்(60) 2.அயணங்கள்(2)

3.ருதுக்கள்(6)

4.மாஸங்கள்(12)

5.பக்ஷங்கள்(2)

6.திதிகள்(15)

7.வாஸரங்கள்(நாள்)(7)

8.நட்சத்திரங்கள்(27)

9.கிரகங்கள்(9)

10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)

11.நவரத்தினங்கள்(9)

12.பூதங்கள்(5)

13.மஹா பாதகங்கள்(5)

14.பேறுகள்(16)

15.புராணங்கள்(18)

16.இதிகாஸங்கள்(2)

இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக
பார்ப்போம் முதலில் . . .

வருடங்கள்:-

வருடங்கள் மொத்தம் அறுபது அவை . . .

1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத
5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ
9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர
12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம
15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண
19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித்
22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர
26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத
30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி
33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது
37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு
40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய
44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி
47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள
51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி
54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி
57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன
60.அக்ஷய.

2.அயணங்கள்:-

அயணங்கள் இரண்டு வகைகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளது.

1.உத்தராயணம்(தை மாதம் முதல் ஆனி மாதம்
வரை உள்ள ஆறு மாத காலம்).

2.தக்ஷிணாயணம்(ஆடி மாதம் முதல் மார்கழி
மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ்
வருடமாகும்.

.ருதுக்கள்:-

ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்

1.வஸந்தருது(சித்திரை,வைகாசி)

2.க்ரீஷ்மருது(ஆனி,ஆடி)

3.வர்ஷ ருது(ஆவணி,புரட்டாசி)

4.ஸரத்ருது(ஐப்பசி,கார்த்திகை)

5.ஹேமந்தருது(மார்கழி,தை)

6.சிசிரருது(மாசி,பங்குனி)

இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது‌ ஆகும்.

.மாஸங்கள்:-

தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும்

1.சித்திரை(மேஷம்)
2.வைகாசி(ரிஷபம்)
3.ஆனி(மிதுனம்)
4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)
6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)
8.கார்த்திகை(விருச்சிகம்)
9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)
11.மாசி(கும்பம்)
12.பங்குனி(மீனம்).

பக்ஷங்கள்:-

பக்ஷங்கள் இரண்டு வகைப்படும்

1.ஸுக்ல பக்ஷம்(அமாவசை திதி முதல்
சதுர்த்தசி திதி வரை)

2.க்ருஷ்ணபக்ஷம்(பெளர்ணமி திதி முதல்
சதுர்த்தசி திதி வரை)

சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும்
வளர்பிறை என்றும் கூறுவர்.

க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும்
தேய்பிறை என்றும் கூறுவர்.

இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு மாதம்
ஆகும்.

திதிக்கள்:-

திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும்

1.பிரதமை
2.துதியை
3.திருதியை
4.சதுர்த்தி
5.பஞ்சமி
6.ஷஷ்டி
7.சப்தமி
8.அஷ்டமி
9.நவமி
10.தசமி
11.ஏகாதசி
12.துவாதசி
13.திரையோதசி
14.சதுர்த்தசி
15பெளர்ணமி(அ)அமாவாசை.

வாஸரங்கள்:- (வாரம்)

வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும்

1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்

.நட்சத்திரங்கள்:-

நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்.

1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி
5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம்
8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம்
12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை
15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம்
18.கேட்டை 19.மூலம் 20.பூராடம்
21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம்
24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி
27.ரேவதி.

கிரகங்கள்:-

கிரகங்கள் ஒன்பது ஆகும்
1.சூரியன்(SUN)
2.சந்திரன்(MOON)
3.அங்காரகன்(MARS)
4.புதன்(MERCURY)
5.குரு(JUPITER)
6.சுக்ரன்(VENUS)
7.சனி(SATURN)
8.இராகு(ASCENDING NODE)
9.கேது(DESCENDING NODE)

.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்:-

இராசிகள் பண்ணிரெண்டு ஆகும்
ஒவ்வொருT நட்சத்திரமும் நான்கு பகுதியாக
(பாகங்கள்) பிரிக்கப்படும், .. .

நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்)
சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.

நட்சத்திரங்கள்
இராசி
இராசிஅதிபதி
அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼
மேஷம்
செவ்வாய்

கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம்
முன்1/2
ரிஷபம்
சுக்கிரன்

மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புன
ர்பூசம்முன்3/4
மிதுனம்
புதன்

புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்
கடகம்
சந்திரன்

மகம்,பூரம்,உத்திரம் முன் ¼
சிம்மம்
சூரியன்

உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2
கன்னி
புதன்

சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4
துலாம்
சுக்கிரன்

விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை
விருச்சிகம்
செவ்வாய்

மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4
தனுசு
குரு

உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம்
முன்1/2
மகரம்
சனி

அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4
கும்பம்
சனி

பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி
மீனம்
குரு

.நவரத்தினங்கள்:-

1.கோமேதகம்
2.நீலம்
3.பவளம்
4.புஷ்பராகம்
5.மரகதம்
6.மாணிக்கம்
7.முத்து
8.வைடூரியம்
9.வைரம்.

பூதங்கள்:-

பூதங்கள் ஐந்து வகைப்படும்
பூதங்கள்
தன்மாத்திரைகள்
நுண்மூலங்கள்

1.ஆகாயம்-வானம்
சப்தம்
ஓசை

2.வாயு-காற்று
ஸ்பர்ஷம்
தொடு உணர்வு

3.அக்னி-நெருப்பு(தீ)
ரூபம்
ஒளி(பார்த்தல்)

4.ஜலம்-நீர்
ரஸம்
சுவை

5.பிருத்வி-நிலம்
கந்தம்
நாற்றம்(மணம்)

மஹா பாதகங்கள்:-

மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும்

1.கொலை
2.பொய்
3.களவு
4.கள் அருந்துதல்
5.குரு நிந்தை.

.பேறுகள்

பேறுகள் பதினாறு வகைப்படும்

1.புகழ்
2.கல்வி
3.வலிமை
4.வெற்றி
5.நன்மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்ஊழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துனிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்.
புராணங்கள்:-

புராணங்கள் பதினெட்டு வகப்படும்,இவைகள
ை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.

1.பிரம்ம புராணம்
2.பத்ம புராணம்
3.பிரம்மவைவர்த்த புராணம்
4.லிங்க புராணம்
5.விஷ்ணு புராணம்
6.கருட புராணம்
7.அக்னி புராணம்
8.மத்ஸ்ய புராணம்
9.நாரத புராணம்
10.வராக புராணம்
11.வாமன புராணம்
12.கூர்ம புராணம்
13.பாகவத புராணம்
14.ஸ்கந்த புராணம்
15.சிவ புராணம்
16.மார்க்கண்டேய புராணம்
17.பிரம்மாண்ட புராணம்
18.பவிஷ்யபுராணம்.

.இதிகாஸங்கள்:-
இதிகாஸங்கள் இரண்டு வகைப்படும்.
1 இராமாயணம் 2 மஹாபாரதம்.

திதி என்றால் என்ன ?

பஞ்சாங்கத்தின் முதல் உறுப்பு திதி. ஒளிக் கிரகங்கள் எனப்படும் சூரியனுக்கும், சந்திரனுக்கும் சுற்றுப்பாதையில் உள்ள இடைவெளியின் அடிப்படையில் அமைவது தான் திதி என்பது.
[நீத்தார் நினைவு நாட்கள், அவர்கள் மரணித்த திதியின் அடிப்படையில் அனுஷ்டிக்கப் படுவதால், திதி என்றாலே கெடுதல் ஒரு அச்சானியமானசொல் எனப் பலர் நினைக்கின்றனர்.
உண்மையில், திதி என்பதற்குக் கழித்தல் (சந்திர ஸ்புடத்திலிருந்து, சூரிய ஸ்புடத்தைக் கழித்து வரும் பாகைகளை 12-ஆல் வகுத்துக் கணக்கிடும் முறை) என்று தான் பொருள். அது ஒன்றும் ஒதுக்கப்பட வேண்டிய சொல் அல்ல.
சந்திரன் சூரியனிலிருந்து விலகிச்செல்வதுவளர்பிறை; சூரியனைநோக்கிச்செல்வதுதேய்பிறை என்பது ஓர் எளிய விளக்கம்.
தான் பிறந்த திதியில் மேற்கொள்ளப்படும் காரியங்கள் வெற்றிபெறுவதுடன், செல்வவிருத்தியையும் தரும் என்பதால்,
திதேஸ்ச்சஸ்ரியம் ஆப்னோதி என்ற வசனம் ஏற்பட்டது.

எந்தெந்த திதிகளில் எந்தெந்த சுப காரியங்கள் செய்யலாம் ?

திதி- சந்திரனின் நாளாகும். மொத்தம் முப்பது திதிகள் உண்டு. அமாவாசையை அடுத்து சதுர்த்தசி வரையிலான 15 திதிகள் வளர் பிறை (சுக்லபட்சம்) காலமாகும். பௌர்ணமியை அடுத்து சதுர்த்தசி வரையிலான 15 திதிகள் தேய்பிறை காலமாகும் (கிருஷ்ண பட்சம்).

வளர்பிறை காலத்தில் குறிப்பிட்ட திதியின் அதிதேவதையை வணங்கிவிட்டு சுப காரியங்களைச் செய்வது விசேஷமாகும். தேய் பிறை காலத்தில் சுபகாரியங்கள் செய்வதானால் பஞ்சமிக்குள் செய்வது உத்தமமாகும். தேய்பிறை பஞ்சமி வரையிலும் வளர்பிறை காலம் போல் பலன் உண்டு என்று பெரியோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். பௌர்ணமி: ஹோம, சிற்ப, மங்கல காரியங்களில் ஈடுபடலாம். விரதம் மேற்கொள்ளலாம். இந்த நாளுக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள்.

அமாவாசை: பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம். தான- தர்ம காரியங்களுக்கு உகந்த நாள். ஈடுபடலாம். இயந்திரப்பணிகள் மேற்கொள்ளலாம். சிவன், சக்தி அதிதேவதை ஆவார்கள்.

திதிகளில் வளர்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவை விசேஷமானவை. தேய்பிறையில் துவிதியை, திருதியை, பஞ்சமி மூன்றும் சிறப்பான சுப திதிகள் ஆகும். சுப காரியங்களில் ஈடுபடலாம்.

*பிரதமை :—

வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் வாஸ்து காரியங்கள் செய்வதற்கும், திருமணம் செய்வதற்கும் உகந்ததாகும்.
அக்னி சம்பந்தமான காரியங்களிலும் ஈடுபடலாம்.
மதச் சடங்குகளை மேற்கொள்ளலாம்.

இந்த திதிக்கு அதிதேவதை அக்னி.

துவிதியை :—

அரசு காரியங்கள் ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம். ஆடை, அணிமணிகள் அணியலாம். விரதம் இருக்கலாம். தேவதை பிரதிஷ்டை செய்யலாம். கட்டட அடிக்கல் நாட்டலாம். ஸ்திரமான காரியங்களில் ஈடுபடலாம்.

இந்த திதிக்கு அதிதேவதை ப்ரம்மதேவர்.

*திருதியை :—

குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டலாம்.
சங்கீதம் கற்க ஆரம்பிக்கலாம்.
சீமந்தம் செய்யலாம்.
சிற்ப காரியங்களில் ஈடுபடலாம்.
சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது.
அழகுக் கலையில் ஈடுபடலாம்.

இதன் அதிதேவதை கௌரி (பராசக்தி).

சதுர்த்தி :—

முற்கால மன்னர்கள் படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுப்பார்கள்.
எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், அக்னிப் பயன்பாடு (நெருப்பு சம்பந்தமான காரியங்களை) செய்ய உகந்த திதி இது.

எமதர்மனும் விநாயகரும் இந்தத் திதிக்கு அதிதேவதை ஆவார்கள்.
ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், இந்தத் திதி நாளில் (சங்கடஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் விலகும்.

பஞ்சமி :—

எல்லா சுப காரியங்களையும் செய்யலாம்.
விசேஷமான திதி ஆகும் இது.
குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
மருந்து உட்கொள்ளலாம்.
அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். விஷ பயம் நீங்கும்.

இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதை ஆவார்கள்.
எனவே நாகர் வழிபாட்டுக்கு உகந்த திதி இது.
நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி வழிபட, நாக தோஷம் விலகும். நாக பஞ்சமி விசேஷமானது.

சஷ்டி :—

சிற்ப, வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம் ஆபரணம் தயாரிக்கலாம். வாகனம் வாங்கலாம்.
புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம்.
கேளிக்கைகளில் ஈடுபடலாம்.
புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம்.

இந்த திதிக்கு அதிதேவதை முருகன் ஆவார்.
முருகனை சஷ்டி விரதம் இருந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு சகல நலன்களும் உண்டாகும்.
சத்புத்திர பாக்கியம் கிட்டும்.
சஷ்டி என்றால் ஆறு.
ஆறுமுகம் கொண்ட முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும்.

ஸப்தமி :—

பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. வாகனம் வாங்கலாம்.
வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ளலாம்.
திருமணம் செய்து கொள்ளலாம்.
சங்கீத வாத்தியங்கள் வாங்கலாம். ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம்.

இதன் அதிதேவதை சூர்யன்.
இந்த தினத்தில், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூர்யனை வழிபடுவது சிறப்பாகும்

அஷ்டமி :—

பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தளவாடம் வாங்கலாம். நடனம் பயிலலாம்.
ஸ்ரீ கிருஷ்ணர் பைரவர் மற்றும் ஐந்து முகம் கொண்ட சிவன் (ருத்ரன்) இதற்கு அதிதேவதை ஆவார்.

நவமி :—

சத்ரு பயம் நீக்கும் திதி இது. கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் துவக்கலாம். இந்த திதிக்கு ஸ்ரீ ராமர் மற்றும் அம்பிகை அதிதேவதை.

தசமி :—

எல்லா சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிகப்பணிகளுக்கு உகந்த நாளிது. பயணம் மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம்.
வாகனம் பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம்.
இந்தத் திதிக்கு எமதர்மனே அதிதேவதை.

ஏகாதசி :—

விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம்.
சிகிச்சை செய்து கொள்ளலாம்.
சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். இதற்கு, ஸ்ரீ மஹா விஷ்ணுவே அதிதேவதை ஆவார்.

துவாதசி :—

அற்புதமான திதி எல்லா விதமான சுப காரியங்கள் செய்யலாம்
மதச்சடங்குகளில் ஈடுபடலாம். அதிதேவதை மஹாவிஷ்ணு ஆவார்.

த்ரயோதசி :—

சிவபெருமான் வழிபாடு செய்வது விசேஷம். பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம். எதிர்ப்புக்கள் விலகும். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம்.

சதுர்த்தசி :—

ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் உகந்த நாள் இது.
காளி இந்த திதிக்கு அதிதேவதை ஆவாள்.

பௌர்ணமி :—

ஹோம, சிற்ப, மங்கள காரியங்களில் ஈடுபடலாம். விரதம் மேற்கொள்ளலாம். இந்த நாளுக்கு விஷ்ணு சிவன் பராசக்தி அதிதேவதை ஆவாள்.

pantchankam
pantchankam

அமாவாசை ;—

பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம். தான- தர்ம காரியங்களுக்கு உகந்த நாள். இயந்திரப்பணிகள் மேற்கொள்ளலாம்.
பெருமாள் லஷ்மி சிவன், சக்தி அதிதேவதை ஆவார்கள்.

ராசியை போல கரணமும் முக்கியம். அதில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா ?

ஒருவரது ஜாதகத்தில் ராசி, நட்சத்திரம், லக்கினம் எவ்வளவு முக்கியமோ அதே போல கரணமும் முக்கியம். அந்த வகையில் கரணம் என்றால் என்ன. எந்த வகையான கர்ணத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

சந்திரனின் 16 நாட்கள் வளர்பிறை நிலை, 16 நாட்கள் தேய்பிறை நிலைக் கால சுழற்சியே ஒரு மாதம் என்று கணக்கிடப்படுகிறது. அப்படியான சந்திரனின் வளர்பிறை, தேய்பிறைக் காலங்களிலில் வருவது தான் கரணங்கள். இக்கரணங்கள் என்பது ஒரு மாதத்தில் வரும் திதிகளில், அத்திதியின் அரைப் பகுதியாகும்.

மொத்தம் 11 வகையான கரணங்கள் இருக்கின்றன

. இதில் 7 கரணங்கள் “ஸ்திர” கரணங்கள் அதாவது நிலையான கரணங்கள், இது ஒரு மாதத்தில் 8 முறை வரும்.

மீதமுள்ள 4 கரணங்கள் “சர” கரணங்கள். அதாவது நகரும் கரணங்கள் இது மாதத்தில் ஒரு முறை மட்டுமே வரும்.

அக்கரணங்களுக்குக்கான உருவமாக சில விலங்குகள், பறவைகள் உருவங்களும் ஜோதிட சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

நீங்கள் பிறந்த நேரத்தை வைத்து உங்களுக்கான கரணத்தை அறியலாம். அதோடு ஒவ்வொரு கரணத்தில் பிறந்தவருக்கும் சில குணாதிசியங்கள் இருக்கும் அது பற்றி பார்ப்போம்.

சகுனக் கரணம்:

இக்கரணத்தில் பிறந்தவர்கள் மிகவும் அமைதியானவர்களாக இருப்பார்கள். புத்திசாலித்தனமும், சிறந்த அறிவாற்றலும் கொண்டவர்களாக இருப்பார்கள் மேலும் இவர்களுக்கு உள்ளுணர்வு அதிகமிருப்பதால் இவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும். இவர்கள் தங்களை மிகவும் பக்குவப்பட்ட மனிதர்களாக மாற்றிக்கொள்வார்கள். போர்புரியவும்,நோய்த் தீர மருந்து உட்கொள்ளும் செயல்களை இக்கரணத்தில் செய்தால் சிறந்தப் பலன்களைக் கொடுக்கும். இக்கரணத்திற்கான உருவம் காக்கை.

சதுஷ்பதக் கரணம் :

இக்கரணங்களிலில் பிறந்தவர்கள் சுதந்திரத் தன்மை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே பிறருக்கு கீழ் அவர்கள் உத்தரவுகளுக்கு பணிந்து வேலை செய்யாமல், தானே முதலாளியாக இருக்கக் கூடிய வியாபாரத் தொழிலில்களையே இவர்கள் செய்வார்கள். பிறரிடம் அனைத்திலும் உண்மையாக நடந்துகொள்வார்கள். மிகவும் கடினமாக உழைக்கக் கூடிய தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இக்கரணத்தில் சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் கொடுப்பது சிறந்த பலன்களைக் கொடுக்கும். மேலும் இவர்கள் தத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபடுவர். இவர்களுக்கான விலங்கு உருவம் நாய்.

நாக கர்ணம் :

நாக காரணத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் பூமி சம்பந்தப்பட்ட சுரங்கம், தாதுக்களை வெட்டி எடுப்பது போன்ற தொழில்களையோ, வியாபாரங்களையோ செய்வர். நல்ல குணாதியசங்கள் இவர்களிடம் காணப்படும். நாக கரணத்தில் பிறந்த காரணத்தால் இவர்களிலில் சிலருக்கு விஷப் பாம்புகளை மயக்கி பிடிக்கும் ஆற்றல் இருக்கும். இவர்கள் ஆன்மிக வழியில் சென்றால், சிறந்த ஞானியாகக் கூடிய அமைப்பு உள்ளது. இக்கரணத்தில் பிறந்த ஒரு சிலர் பிறருக்கு தீமை விளைவிக்கும் காரியங்களைச் செய்வர். இக்கரணத்தின் உருவம் நாகப்பாம்பு.

கௌஸ்துவ கரணம் :

கௌஸ்துவ காரணத்தில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் இக்கரணத்தில் பிறந்த ஒரு சில தங்களின் சுயநலம் காரணமாக இரக்கமற்றவர்களாகவும், பிறருக்கு துன்பம் விளைவிப்பவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களிடம் அவப்பெயரைச் சம்பாதிப்பார்கள் இதன் காரணமாக இவர்கள் தங்கள் வாழ்வில் மிகவும் கஷ்டப்படுவார்கள். எந்த ஒரு நல்ல காரியத்தையும் இக்கரணத்தில் துணிந்து செய்யலாம்

பவக் கரணம் :

இக்கரணத்தவர்கள் சற்று ஏழ்மையானச் சூழ்நிலையில் பிறந்தாலும், மிகவும் பெருந்தன்மையான குணங்களை பெற்றிருப்பர். பேராசைப்படாமல் தங்களுக்கு கிடைத்ததைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை இனிதாக்கிக் கொள்வார்கள். இக்கரணத்திற்கான விலங்காக சிங்கம் இருப்பதால், வீர தீர சாகசம் புரியும் ராணுவம், காவல்துறைப் போன்றப் பணிகளில் இவர்கள் சிறப்பாகச் செயல்புரிவர்.

பாலவக் கரணம் :

இக்கரணத்தில் பிறந்தவர்கள் அழகானத் தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். மிகுந்த தைரியசாலிகளான இவர்கள் எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி அதில் வெற்றியும் பெறுவார்கள். அதே நேரத்தில் பிறருக்காக எத்தகையத் தியாகத்தையும் செய்யத் தயங்க மாட்டார்கள். விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர்கள் அது சம்பந்தமானது துறைகளில் சாதனைகள் புரிவார்கள். இக்கரணத்தவர்களுக்கான விலங்கு புலி.

கிம்ஸ்துக்னம் கரணம்:

இக்கரணத்தில் பிறந்தவர்கள் பிறருக்கு அதிகம் தீங்கு செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். அனால் சிறந்த அறிவாற்றலைக் கொண்டிருப்பார். தீயவர்களுன் சகவாசம் கொள்ளாதவரை இவர்கள் தவறான வழியில் செல்வதில்லை. இவர்களுக்கு சரியான ஆன்மிக வழிகாட்டி அமைந்து, அவர்கள் சொற்படி நடந்தால் சித்தி நிலை அடையக்கூடிய யோகம் இவர்களுக்கு உண்டு. இவர்களுக்கான விலங்கின் உருவம் புழு.

தைதுலைக் கரணம்:

இவர்கள் எப்போதுமே இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு பிரச்சனையில் தங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும், அதை அதிகாரத் தன்மையுடன் தீர்க்காமல் அமைதியான முறையில் தீர்ப்பார்கள்.
இயற்கையிலேயே இவர்கள் மனவுறுதி கொண்டவர்களாக இருப்பதால், எப்படிப்பட்ட சவால்களையும் ஏற்றுக் கொண்டு அதில் வெற்றி அடைவர். பொதுவாக எதிர்காலத்திற்கான பாதுகாப்பைக் கொடுக்கும் உத்தியோகங்களில் சேர்ந்து பணிபுரிவர். இக்கரணத்திற்கான விலங்கின் உருவம் கழுதை.

கரஜைக் கரணம்:

இந்நபர்கள் எந்த ஒரு விஷயத்தையும் மிகவும் திட்டமிட்டு செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். சிறந்தப் பேச்சுத் திறனும் அதிகம் பேசக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். கற்பனைத்திறன் அதிகம் கொண்டவர்கள் என்பதால் ஓவியம், சிற்பம், கவிதை, நாடகம், நடனம் போன்ற காலை சம்பந்தமான துறைகளில் சாதிப்பர். இவர்களுக்கு சற்று சலன புத்தி இருப்பதால், பெண்கள் விஷயத்தில் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இகரணத்திற்கான உருவம் யானை.

வனிஜை கரணம்:

இவர்களிடம் சிறந்த நிர்வாகத்திறன் இருக்கும். மேலும் வியாபாரதில் சாதிக்கக் கூடிய மிகச் சிறப்பான புத்திசாலித்தனம் இருப்பதால் இவர்கள் எவ்வகையான தொழில்களிலும் முன்னிலைக்கு வந்து விடுவர். மற்றவர்களிடம் இனிமையாகப் பேசி தங்களுக்கு வேண்டிய காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். காரியங்களைத் திட்டமிட்டு செய்து வெற்றிகளைப் பெறுவார்கள்.இக்கரணத்திற்கான விலங்கு உருவம் எருது.

பத்ரைக் கரணம்:

இவர்களும் இங்கு கூறப்பட்ட சில கரணத்தவர்களைப் போல் தீயச் செயல்களைப் புரிவர்களாக இருப்பர். இவர்களுக்கு சற்று மந்தக் குணம் இருக்கும் காரணத்தினால் எக்காரியத்தையும் சற்றுத் தாமதமாகவே செய்து முடிப்பர். ஆனால் ஏவ்வொரு விஷயத்தையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பர். மனிதாபிமான குணம் இருக்கும். இவர்களை யாரவது தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தால் இவர்களும் வெற்றியாளர்களாகலாம். இக்கரணத்திற்கான பறவையின் உருவம் கோழி.

அமாவாஸ்யையை கணிக்கும் முறை.
ஶ்ராத்த திதிக்கும் இதேதான் கணக்கு

பஞ்சாங்கத்தில் பகற்பொழுதை “அஹஸ்”என்ற சொல்லால் குறிப்பிட்டு இருப்பார்கள்.அஹஸ்ஸானது முப்பது நாழிகைக்கு வெயில் காலங்களில் கூடுதலாகவும் பனி காலங்களில் குறைவாகவும் இருக்கும். ஆந்த அஹஸ்ஸை ஐந்தாக பிரித்துக்கொள்ளவேண்டும்.
அவை
1)ப்ராத:காலம்
2)ஸங்கவகாலம்
3)மாத்யாஹ்னகாலம்
4)அபராஹ்ன காலம்
5)சாயாஹ்ண காலம்
என்பனவாகும்.

இவற்றில் ஜன்மநக்ஷத்ரம், ஷஷ்ட்ப்த பூர்த்தி, வ்ரதங்கள் ஆகியவை ப்ராத:காலத்தை வைத்து கணிக்கப்படும்.

காயத்ரி ஜபம்,தீட்டின் நிவ்ருத்தி ஆகியவை ப்ராயஶ்சித்தங்களை ஸங்கவ காலத்தை வைத்து.

நாந்தி முதலியவை மத்யாஹ்ன காலத்தை வைத்து

அமாவாசை ,சிராத்ததிதி நிர்ணயத்திற்கு அபராஹ்ன எனப்படும் பிற்பகல் 01:12 மணிமுதல் 03:36 வரையில் திதி இருப்பதை கொண்டு நிர்ணயிக்கவேண்டும்.இரண்டு நாளும் அபராஹ்ன வ்யாப்தி இருந்தால் அதிகவ்யாப்தி என்றைக்கு அன்றைக்குதான் அமாவாஸ்யை பித்ருதர்ப்பணதினம்,சிராத்ததிதி.

நாம் ஏன் சித்திரை 1 ஐ தமிழ் புத்தாண்டாய் கொண்டாடுகிறோம். மீண்டும் நம் முன்னோர்கள் மெய்ஞானிகள் என்பது நிரூபனமாகிறது:

சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ்மாதத்தில், அம்மாதத்தின் பெளர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரையே மாதத்தின் பெயராக வைத்துள்ளனர்.

சித்திரை = சித்திரை [சித்திரா பெளர்ணமி]விசாகம் = வைசாகம் = வைகாசி [வைகாசி விசாகம்]அனுசம் = ஆனி
பூராடம் – பூராடி = ஆடி
சிரவணம் – ச்ராவணி = ஆவணி [திருவோணம் வடமொழியில் ஸ்ராவண நட்சத்திரம்]பூரட்டாதி = புரட்டாசி [புரட்டாசி பெளர்ணமி பூரட்டாதி நட்சத்திரத்தில் வரும்]அஸ்வினி = ஐப்பசி [வடமொழியில் ஆஸ்வீஜம்]கார்த்திகை =கார்த்திகை [கார்த்திகை பெளர்ணமி]மிருகஷீர்சம்= மார்கஷீர்சம் =மார்கழி
பூசம் வடமொழியில் புஷ்யம் என்பது. இதற்கு தைஷ்யம் என்று மற்றொரு பெயருண்டு. இது தை ஆனது. [தை பூசம்]மகம் – வடமொழியில் மாக = மாசி [மாசி மகம்]உத்திரம் -வடமொழியில் உத்திரப் பல்குனி = பங்குனி [பங்குனி உத்திரம்].

எனவே தமிழ் மாதப்பெயர்கள் வானசாஸ்த்திரத்தை அடிப்படையாக கொண்டவை.

ஒரு ஆண்டு என்பது பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர ஆகும் காலம். ஒரு வட்டத்தின் முதற்புள்ளியை எப்படி கணிப்பது? சுற்றும்போது பூமியின் சாய்வினால் சூரியன் வடக்கு தெற்க்காக நகர்கிறது. சூரியன் பூமத்திய ரேகையில் நேராக பிரகாசிக்கும் மாததை முதற்புள்ளியாய் ஆண்டின் தொடக்கமாக கொண்டுள்ளனர் நமது பெரியோர்.

பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள நமது நாட்டிக்கும் இதுதான் சரி (சித்திரை கத்திரி வெயில்). பனிரெண்டு ராசியினால் பனிரெண்டாக பகுக்கப்பட்ட ஆண்டில் நம்மீது நேராக பிராகசிக்கும்போது சூரியன் மேஷ ராசியில் இருப்பான். எனவேதான் மேஷம் முதல் ராசியானது. இப்படி நேராக பிரகாசிக்கும் மாதம் சித்திரை. எனவேதான் சித்திரை முதல் மாதமானது. தைமாதத்தில் சூரியன் கீழே ஆஸ்திரேலியா மீது நேராக பிரகாசித்துக்கொண்டிருப்பான்.

எனவே முதல் மாதமாக சித்திரை தவிர வேறு எந்தமாதமும் நமக்கு பொருத்ததமாகாது. ஆதலின் சித்திரை முதலான மாதப்பெயர்களை உடைய ஆண்டின் முதல் மாதம் சித்திரையாக மட்டுமே இருக்கமுடியும்.

பஞ்சபூதங்களின் ஆளுமை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காலமாக நமக்கு வரும். அதனை தெரிந்துக்கொண்டு நாம் பல்வேறு விசயங்களுக்கு பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு நாளும் பஞ்சபூத ஆளுமை பகல் நேரத்தில்

காலை 6 – 8:24 ஆகாயம்

காலை 8:25 – 10.48 வாயு

காலை 10:49 – 1:12 நெருப்பு

பிற்பகல் 1:13 – 3:36 நீர்

பிற்பகல் 3:37 – 6:00 நிலம்

Leave a Reply