2ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

 

2ஆம் பத்து 4ஆம் திருமொழி

1078

அன்றாயர்கு லக்கொடி யோடணிமா

மலர்மங்கையொ டன்பளவி,அவுணர்க்

கென்றானு மிரக்கமி லாதவனுக்குக்

குறையுமிட மாவது,இரும்பொழில்சூழ்

நன்றாயபு னல்நறை யூர்த்திருவா

லிகுடந்தை தடந்திகழ் கோவல்நகர்,

நின்றானிருந் தான்கிடந் தான்நடந்தாற்

கிடம்மாமலை யாவது நீர்மலையே. (2) 2.4.1

 

1079

காண்டாவன மென்பதொர் காடமரர்க்

கரையனது கண்டவன் நிற்க,முனே

மூண்டாரழ லுண்ணமு னிந்ததுவும்

அதுவன்றியும் முன்னுல கம்பொறைதீர்த்

தாண்டான்,அவுணனவன் மார்வகலம்

உகிரால்வகி ராகமு னிந்து, அரியாய்

நீண்டான்குற ளாகிநி மிர்ந்தவனுக்

கிடம்மாமலை யாவது நீர்மலையே. 2.4.2

 

1080

அலமன்னு மடல்சுரி சங்கமெடுத்

தடலாழியி னாலணி யாருருவில்f,

புலமன்னு வடம்புனை கொங்கையினாள்

பொறைதீரமு னாளடு வாளமரில்,

பலமன்னர் படச்சுட ராழியினைப்

பகலோன்மறை யப்பணி கொண்டு,அணிசேர்

நிலமன்னனு மாயுல காண்டவனுக்

கிடம்மாமலை யாவது நீர்மலையே. 2.4.3

 

1081

தாங்காததோ ராளரி யாயவுணன் –

றனைவீட முனிந்தவ னாலமரும்,

பூங்கோதையர் பொங்கெரி மூழ்கவிளைத்

ததுவன்றியும் வென்றிகொள் வாளமரில்,

பாங்காகமுன் ஐவரொ டன்பளவிப்

பதிற்றைந்திரட் டிப்படை வேந்தர்பட,

நீங்காச்செரு வில்நிறை காத்தவனுக்

கிடம்மாமலை யாவது நீர்மலையே. 2.4.4

 

1082

மாலுங்கட லாரம லைக்குவடிட்

டணைகட்டி வரம்புருவமதிசேர்

கோலமதி ளாயவி லங்கைகெடப்

படைதொட்டொரு காலம ரிலதிர,

காலமிது வென்றயன் வாளியினால்

கதிர்நீண்முடிபத்து மறுத்தமரும்,

நீலமுகில் வண்ணனெ மக்கிறைவற்

கிடம்மாமலை யாவது நீர்மலையே. 2.4.5

 

1083

பாராருல கும்பனி மால்வரையும்

கடலும்சுட ருமிவை யுண்டும், எனக்

காரா தென நின்றவ னெம்பெருமான்

அலைநீருல குக்கரசாகிய,அப்-

பேரானைமுனிந்தமுனிக்கரையன்

பிறரில்லை நுனக்கெனு மெல்லையினான்,

நீரார்ப்பே ரான்நெடு மாலவனுக்

கிடம்மாமலை யாவது நீர்மலையே. 2.4.6

 

1084

புகராருரு வாகிமுனிந்தவனைப்

புகழ்வீட முனிந்துயி ருண்டு,அசுரன்

நகராயின பாழ்பட நாமமெறிந்-

ததுவன்றியும் வென்றிகொள் வாளவுணன்,

பகராதவ னாயிர நாமமடிப்

பணியாதவ னைப்பணி யாமலரில்,

நிகராயவன் நெஞ்சிடந் தானவனுக்

கிடம்மாமலை யாவது நீர்மலையே. 2.4.7

 

1085

பிச்சச்சிறு பீலிபி டித்துலகில்

பிணந்தின்மடவாரவர் போல்,அங்ஙனே

அச்சமிலர் நாணில ராதன்மையால்

அவர்செய்கை வெறுத்தணி மாமலர்த்தூய்,

நச்சிநம னாரடை யாமைநமக்

கருள்செய் எனவுள்குழைந் தார்வமொடு,

நிச்சம்நினைவார்க்கருள் செய்யுமவற்

கிடம்மாமலை யாவது நீர்மலையே. 2.4.8

 

1086

பேசுமள வன்றிது வம்மின்நமர்.

பிறர்க்கேட்பதன் முன்பணி வார்வினைகள்,

நாசமது செய்திடும் ஆதன்மையால்

அதுவேநம துய்விடம் நாண்மலர்மேல்

வாசமணி வண்டறை பைம்புறவில்

மனமைந்தொடு நைந்துழல் வார்,மதியில்

நீசரவர் சென்றடை யாதவனுக்

கிடம்மாமலை யாவது நீர்மலையே. 2.4.9

 

1087

நெடுமாலவன் மேவிய நீர்மலைமேல்

நிலவும்புகழ் மங்கையர் கோன்,அமரில்

கடமாகளி யானைவல்லான் கலியன்

ஒலிசெய்தமிழ் மாலைவல் லார்க்கு,உடனே

விடுமால்வினை வேண்டிடில் மேலுலகும்

எளிதாயிடு மன்றியி லங்கொலிசேர்,

கொடுமாகடல் வையக மாண்டுமதிக்

குடைமன்னவ ராயடி கூடுவரே. (2) 2.4.10

Leave a Reply