சிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரி மகிமை

[caption id="attachment_566" align="alignleft" width=""]சிவபெருமான்பார்வதீ சமேதராய் சிவபெருமான்[/caption]மாசி மாத அமாவாசைக்கு முன்னாள், “சதுர்த்தசி திதி’ அன்று மலரும் நன்னாளே “மகா சிவராத்திரி’ திருநாளாகும். சிவராத்திரி என்றால் சிவபெருமான் வழிபாட்டுக்குரிய “சிறப்பு இரவு’ என்பது பொருள். அன்றிரவு சிவாலயத்திலிருந்து, சிவபெருமானை மனம், மொழி, மெய்யால் வழிபட வேண்டும். இதை “உபவாசம்’ என்பார்கள்.

அதே சமயம் அவரை ஒருமை மனதுடன் உறுதியாக நினைக்க வேண்டும். அதை “விரதம்’ என்பார்கள். விரதம் என்பதற்கு “சுவாமியை உறுதியுடன் நினைத்தல்’ என்பது பொருள். பட்டினி கிடந்து நோன்பு நோற்பது என்பது அடுத்தபடியான பொருள். “”நான் கொண்ட விரதம் நின் அடி அலால் பிறர் தம்மை நாடாமை ஆகும்” என்பது திருஅருட்பா. இங்கு “விரதம்’ என்பது மனவுறுதி என்ற அர்த்தத்தில் வருகிறது.

மேலும் படிக்க... சிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரி மகிமை

மகாதேவியின் விசுவரூபம்!

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவராலும் போற்றித் துதிக்கப்படும் அன்னை ஸ்ரீமகாதேவியை, முற்பிறவியில் புண்ணியம் செய்திருந்தாலே அன்றி, வணங்கவோ வாழ்த்தவோ முடியாது என்பது தெள்ளத் தெளிவு. ஆதிபராசக்தியாகிய அன்னை, “ஒலி’ வடிவாகவும் விளங்குவதால், அவளை மகிழ்விப்பது தோத்திரங்களே ஆகும்.

மேலும் படிக்க... மகாதேவியின் விசுவரூபம்!
error: Content is protected !!