சிதிலமடைந்த திருவெண்காடர் ஆலயம்!

பொதிகை மலையில் தவமியற்றிய அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து ஒரு துளி நீர் சிந்திச் சிதறியது. அவரின் திருவருளால் அது ராம நதியாக உருவாகி, கடையம் வழியாகப் பாய்ந்து கடனாநதியோடு கலந்தது. இரு நதிகளும் சங்கமிக்கும் அந்த இடத்தில் ஒரு பாறை. இதில் ராமபிரான் அமர்ந்து சந்தியாவந்தனம் செய்தாராம். அதனால் இந்தப் பாறைக்கு “சந்தியாபாறை’ என்று பெயர் ஏற்பட்டது என்பர். இங்கே சங்கு சக்கர வடிவம் உள்ளதால் சக்கரப்பாறை என்றும் அழைப்பர். இந்த மகிமை பொருந்திய இடம்தான் பாப்பான்குளம்.

மேலும் படிக்க... சிதிலமடைந்த திருவெண்காடர் ஆலயம்!

திருவையாற்றில் திருக்கயிலை!

தெய்வ மணம் கமழும் திருநாடாக விளங்குவது சோழ நாடு. “சோழ நாடு சோறுடைத்து’ என்பார்கள். வெறும் வயிற்றுக்கு மட்டும் சோறன்று; உயிருக்கு சோறாகிய திருவருள் இன்பமும் தரும் என்றும் பொருள் கொள்ளலாம். சோழ நாட்டில் அன்னை காவிரியால் எழில் பெறும் கரைகள் வெறும் மண்ணகமல்ல,

விண்ணகம். அதனால்தான் திருநாவுக்கரசர் சோழநாட்டையே சுற்றிச் சுற்றி வலம் வந்தார். இறுதியில் அவருக்குக் கயிலையின் மீது நாட்டம் ஏற்பட்டது. எனவே கயிலை நோக்கிச் சென்றார்.

ஆனால் இறைவனோ அவரை கயிலைக்கு அழைக்காமல் தன் குடியிருப்பை தற்காலிகமாக ஐயாற்றுக்கு மாற்றினார். ஆம், திருவையாறு, அப்பருக்கு திருக்கயிலாயம் ஆனது. நம்பினோருக்கு உய்வு தரும் திருத்தலமானது. இந்நிகழ்வு நடந்தேறியது ஒரு ஆடி அமாவாசை நன்னாளில்தான்.

மேலும் படிக்க... திருவையாற்றில் திருக்கயிலை!

பாலையில் உதித்த பாலீஸ்வரர்!

பாலீஸ்வரர்

சென்னையிலிருந்து பழவேற்காடு செல்லும் சாலையில் பொன்னேரிக்கு அருகே 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பாலைவனம். “எங்கும் நிறைந்தவன் இறைவன்’ என்பதற்கு இத்தலத்தில் எழுந்தருள் இருக்கும் திருப்பாலீஸ்வரரே சான்றாக விளங்குகிறார்.

சுயம்புவாகத் தோன்றினார்!: முதலாம் ராஜேந்திர சோழன் தனது படையுடன் வடபுலம் சென்று வெற்றிக்கொடி நாட்டினான். அவன் வெற்றிக் களிப்பில் திரும்பிக்கொண்டிருந்தபோது அயர்ச்சியின் மிகுதியால் ஓய்வெடுக்க எண்ணினான். வழியில் இருந்த பாலைமரக் காட்டில் தங்கினான்.

அப்போது ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்த அவனது யானை திடீரென மூர்ச்சையானது. அரசனோ அதிர்ந்தான். யானை கட்டப்பட்டிருந்த மரம் பாலை மரம் என்பதை அறிந்தான். அந்த மரத்தில் ஏதோ மர்மம் இருப்பதாகக் கருதி மரத்தை வெட்ட ஆணையிட்டான். அவனுடைய வீரர்கள் கோடரியால் மரத்தை வெட்ட, வெட்டுப்பட்ட இடத்திலிருந்து ரத்தம் வெளிவந்தது. திகைத்த ராஜேந்திர சோழன், வெட்டுவதை நிறுத்தச் சொல்லிவிட்டு மரத்தின் அடிபாகத்தை ஆழ்ந்து நோக்கினான். அங்கே ஒரு லிங்கம் காட்சியளித்தது. அந்த சுயம்பு லிங்கத்தைக் கண்டு மன்னன் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தான். அங்கே ஒரு கோயிலையும் எழுப்பினான். அடர்ந்த பாலைமரக் காட்டில் தோன்றியதால் இறைவன் திருப்பாலீஸ்வரர் என்று அழைக்கப் படுகிறார்.

மேலும் படிக்க... பாலையில் உதித்த பாலீஸ்வரர்!

கொங்கணசித்தர் வழிபட்ட கொங்கணேஸ்வரர்!

தஞ்சாவூரில் உள்ள மேல ராஜவீதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஞானாம்பிகை சமேத கொங்கணேஸ்வரர் திருக்கோயில். அரண்மனை தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 88 திருக்கோயில்களில் இதுவும் ஒன்று.

மேலும் படிக்க... கொங்கணசித்தர் வழிபட்ட கொங்கணேஸ்வரர்!

பூவனூர் பூவனநாதர் ஆலயம்: சங்கரன் ஆடிய சதுரங்க ஆட்டம்!

[caption id="attachment_854" align="alignleft" width=""]பூவனநாதர்பூவனநாதர்[/caption]ஒரு மகா பிரளய காலம் நிறைவு பெற்றது. அப்போது பூமியில் மனித இனம் தோன்றவில்லை. தாவரங்கள் மட்டுமே முளைத்திருந்தன. வான் வழியே உமாதேவியோடு பவனி வந்து பூலோகத்தைப் பார்வையிட்டார் பரமன்.

அங்கே ஓரிடத்தில் பூக்களின் நறுமணம் அவரைச் சூழ்ந்தது. அந்த வாசனையினால் கவரப்பட்ட பரமன் தரையிறங்கி உமாதேவியோடு அங்கே தங்கினார். அதன்பின் உயிரினங்கள் தோன்றி பரமேஸ்வரனை வழிபட்டன. அந்தத் தலமே “திருப்பூவனூர்’ ஆகும். இறைவன் பூவனநாதர் எனவும், இறைவி கற்பகவல்லி எனவும் அழைக்கப்படுகின்றனர்.

தாமரையில் பூத்தாள்!

திருநெல்வேலியை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தார் வசுசேனர். எல்லாப் பேறும் பெற்றிருந்த மன்னருக்கு குழந்தைப் பேறு மட்டும் கிடைக்கவில்லை. எனவே மழலைச் செல்வம் வேண்டி திருநெல்வேலியில் கோயில் கொண்டுள்ள நெல்லையப்பரையும், காந்திமதி அம்மையையும் நோக்கிக் கடுந்தவம் புரிந்தார்.

அவர் தவத்துக்கு இரங்கிய ஈசன், பார்வதி தேவியை அவருக்கு மகளாகப் பிறக்க வைக்கத் திருவுளம் கொண்டார்.

மேலும் படிக்க... பூவனூர் பூவனநாதர் ஆலயம்: சங்கரன் ஆடிய சதுரங்க ஆட்டம்!

எசாலத்தில் கும்பாபிஷேகம்!

சோழ மன்னர்களின் வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற எசாலம் திரிபுரசுந்தரி சமேத இராமநாத ஈசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் வருகிற 10ஆம் தேதி நடக்கிறது.

விழுப்புரம் வட்டத்தில், விழுப்புரம் – செஞ்சி செல்லும் சாலையில் நேமூர் என்ற ஊரிலிருந்து கிழக்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது எசாலம். இவ்வூருக்கு அருகே பிரம்மதேசம், எண்ணாயிரம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்கள் அழகிய திருக்கோயில்களுடன் விளங்குகின்றன. மேலும் இவ்வூருக்கு அருகில் பல்லவர் கால குடைவரைக் கோயில்கள் மண்டகப்பட்டு, தளவானூர் ஆகிய ஊர்களில் உள்ளன. பல்லவர் கால ஓவியங்கள் உள்ள பனைமலை தாளகிரீசுவரர் கோயிலும் அருகே அமைந்து இப்பகுதி முழுவதும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாய் விளங்குகிறது.

எசாலம் ஊரின் நடுவே திருக்கோயில் அழகிய கற்கோயிலாக விளங்குகிறது. முதலாம் ராஜேந்திர சோழனின் அரச குருவாக விளங்கிய சர்வ சிவ பண்டிதர் என்பவர் இக்கோயிலை எடுப்பித்தார் என்பதை இக்கோயிலில் காணும் கல்வெட்டால் அறிகிறோம். எசாலம் என்று அழைக்கப்படும் இவ்வூரின் பழைய பெயர் “எய்தார்’ என்பதாகும். கல்வெட்டுகளிலும் இவ்வாறே குறிப்பிடப்படுகிறது.

மேலும் படிக்க... எசாலத்தில் கும்பாபிஷேகம்!

வேலங்குடியில் ஐந்து கோயில்கள்!

[caption id="attachment_849" align="alignnone" width=""]வேலங்குடிவேலங்குடி சிவபெருமான்[/caption]

வழிபாடு இல்லாமல் பாழடைந்துள்ள கோயில்கள் தமிழகத்தில் ஏராளம். அங்கு குடிகொண்டுள்ள இறைவனை தரிசிக்க முட்புதர்களையும், சிதிலமடைந்த கற்களையும் தாண்டிப் பயணிக்க வேண்டிய நிலையும் உள்ளது. அந்த வகையில் மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது மங்கைநல்லூர். இதன் அருகில் உள்ள வேலங்குடியில் அருகருகே அமைந்துள்ளன சிவன்கோயிலும், பெருமாள் கோயிலும். இவைதான் பாழடைந்து காணப்படுகின்றன.

மேலும் படிக்க... வேலங்குடியில் ஐந்து கோயில்கள்!

காக்கும் கால பைரவர்!

இன்றைய சமுதாயச் சீர்கேட்டிற்குக் காரணம், தனி மனித ஒழுக்கம் எல்லா வகையிலும் சீரழிந்துவிட்டதுதான். உலகச் சூழலில் ஏற்படும் பூகம்பம், சுனாமி எனப்படும் ஆழிப் பேரலைகள், வன்முறைகள், அரசாங்கத்தில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சிகள், பண வீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், எல்லா வகையான வாகனப் போக்குவரத்து விபத்துக்களுக்கும் இதுவே காரணம். மாயையில் அகப்பட்டு, பஞ்சமா பாதகங்களைச் செய்து பெரும் பாவத்திற்கு எல்லோரும் ஆளாகிறார்கள்.

ஒரு தனி மனிதனின் ஒழுக்கம், குணம், தீய செயல்களைச் செய்தல் போன்றவைகளை நிர்ணயம் செய்வது அவன் உடலில் ஓடிக் கொண்டிருக்கும் ரத்தமேயாகும். இது செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தில் உள்ள ஒன்று. ஆகவே ரத்த உற்பத்தியைக் கொடுக்கும் வகையில் நாம் உண்ணும் உணவை மிக மிக முக்கியமானதாகக் கூறிவந்தார்கள்.

இந்த ஜென்மத்தில் நாம் அடையும் பல கஷ்டங்களுக்கும், நஷ்டங்களுக்கும், துன்பங்களுக்கும் காரணம் நான், எனது என்னும் கர்வம், ஆணவம் மற்றும் பூர்வ ஜென்ம பாவங்களின் கர்ம வினைகள்தாம். இந்த கர்வத்தை, ஆணவத்தை அடக்கி அவை மீண்டும் குடிகொள்ளாமல் இருக்க சிவபெருமான் எடுத்த அவதாரமே “ஸ்ரீ காலபைரவர்’. ஞானத்தையும், நன்னெறியும் காட்டுபவர் பைரவர் என்று “விஞ்ஞான பைரவம்’ என்ற நூல் கூறுகிறது. பொதுவாக பைரவர் அஷ்டமா சித்திகளைக் கொடுப்பவர்.

மேலும் படிக்க... காக்கும் கால பைரவர்!

ஸ்ரீ செளபாக்ய பைரவர்!

[caption id="attachment_827" align="alignleft" width=""]sri bhairavarஸ்ரீபைரவர்[/caption]உயிர்கள் எல்லாவற்றிற்கும் சகல செல்வங்களைத் தந்து அவற்றின் மூலம் இன்பத்தையும் அனுபவிக்கச் செய்யும் தெய்வமாகத் திகழ்பவர் சௌபாக்ய பைரவர். இவர் கொலு வீற்றிருக்குமிடம் கற்பகச் சோலைகளுக்கு இடையே அமைந்துள்ள பொங்கு பூம்புனல் ஊற்றுக்கு நடுவில் உள்ளதான மகராலயமாகும்.

மகரங்களால் தாங்கப்படும் பொன் மயமான கோட்டையில் சகல பரிவாரங்களுடன் பைரவர் எழுந்தருளியிருக்கிறார். தூய வெண்ணிறமான குதிரையை வாகனமாகவும், இரட்டை மீன் பொறித்த கொடிகளை உடையவராகவும், மச்சமுத்திரை தாங்கியவராகவும் அவர் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

பொன் வண்ணத்துடன், பளபளப்பாக அழகிய அகன்ற கண்களைக் கொண்ட மீன், கடலின் உள்ளே மறைந்திருக்கும் பெருஞ் செல்வத்தின் அடையாளமாகும்.

கடலின் அடியாழத்தில் மகரம் எனப்படும் ஆற்றல் பொருந்திய மீன்கள் வாழ்கின்றன. செல்வத்திற்கு அவை காவல் தெய்வங்களாக உள்ளன.

மேலும் படிக்க... ஸ்ரீ செளபாக்ய பைரவர்!

ஓமாம்புலியூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில்

[caption id="attachment_697" align="alignright" width=""]ஓமாம்புலியூர் சொர்ணபுரீஸ்வரர்ஓமாம்புலியூர் சொர்ணபுரீஸ்வரர்[/caption]கடலூர் மாவட்டத்தின் தென்கோடியில் உள்ளது எய்யலூர். இவ்வூருக்கு கிழக்கில் பிரணவ மந்திரத்தை பார்வதி தேவிக்கு பரமேஸ்வரன் உபதேசித்த ஊரான ஓமாம்புலியூர் அமைந்துள்ளது. காட்டுமன்னார் கோயிலிலிருந்து 5 கி.மீ. தொலைவில் எய்யலூர் இருக்கின்றது.

வனவாசத்தின்போது சீதையை பிரிந்த ராமபிரான், தேவியை தேடிக் கொண்டு பல்வேறிடங்களில் அலைந்ததை ராமாயணம் உருக்கமாக விவரிக்கின்றது. அச்சந்தர்பத்தில் எய்யலூருக்கும் சக்கரவர்த்தி திருமகன் வருகை தந்திருக்கிறார். அங்கு ஆற்றின் கரையோரத்தில், ஒரு மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம் இருந்துள்ளது.

மேலும் படிக்க... ஓமாம்புலியூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில்
error: Content is protected !!