வேம்புலி அம்மனுக்கு தீ மிதி!

தீயை மனிதன் கண்டுபிடித்தது உலக வரலாற்றில் முக்கியமான நிகழ்ச்சி. நெருப்பைக் கண்டுபிடித்து வியந்த மனிதன் பிறகு அதனை வழிபட ஆரம்பித்தான். அக்னியை எங்கும் நிறைந்த இறைவனின் சின்னமாகக் கருதினான். அவ்வகையில் தீ மிதி அல்லது பூ மிதி எனப்படும் பிரார்த்தனை பெரும்பாலும் அம்மன் திருக்கோயில்களில் ஆடி மாதத்தில் நடக்கும் திருவிழா.

குறிப்பிட்ட நீள – அகலத்தில் நெருப்பைக் கனலாக்கி அந்தத் தீத்துண்டுகள் மீது பரவசமாக ஆண்-பெண் பேதமின்றி நடந்து செல்வர். இது நேர்த்திக் கடன் என்கிற பெயரில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மனித எண்ணத்தின் உறுதி மிகப்பெரியது என்பதை எடுத்துக்காட்டும் பிரார்த்தனை இது. நெறியான முறையில் விரதம் இருந்து, நாம் வணங்கும் தெய்வம் நம்மைக் காப்பாற்றும் என்ற உறுதியான நம்பிக்கையில் தீயில் இறங்க வேண்டும். நம்பிக்கை தீயின் வெப்பத்தைவிட வலிமையானது. மனதைக் கட்டுப்படுத்தி வழிபாடு செய்ய வேண்டும் என்ற முறையில் தீ மிதிப் பிரார்த்தனையை ஏற்படுத்தினர் நம் முன்னோர். மேலும் அம்மை போன்ற வெப்ப நோய்கள் அணுகாமல் இருக்க, பஞ்ச பூதங்களில் வலிமையான அக்னியை உடலை வருத்தி வழிபடுவது வழக்கமாக உள்ளது.

மேலும் படிக்க... வேம்புலி அம்மனுக்கு தீ மிதி!

“ஆடி’யில் தேடி …

தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு. ஆடி மாதம் தெய்வீகப் பண்டிகைகள் தொடங்கும் காலம். தை மாதம் வரை இவை தொடரும். “ஆடி மாதம் பண்டிகைகளை அழைக்கும் காலம்’ என்பர். மழைக்காலம் தொடங்குவதும் இப்பொழுதுதான். அதேபோல் தை மாதத்திற்குப் பிறகு பண்டிகைகள் அதிகம் இல்லை. மழையும் இருக்காது.

மேலும் படிக்க... “ஆடி’யில் தேடி …

கோயிலில் குடி கொண்ட கோட்டை காளி

[caption id="attachment_695" align="alignright" width=""]கோட்டை காளிகோட்டை காளி[/caption]நாகை மாவட்டத்தில் உள்ளது சங்கமங்கலம்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இறையன்பர் ஒருவர், வியாபார நிமித்தமாக சங்கமங்கலத்திலிருந்து சில கிராமங்கள் வழியாக நாகப்பட்டினம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படியொருநாள் செல்லும்போது களைப்பு மேலிட, “சடைச்சி’ என்னும் கிராமத்தில் இளைப்பாறுவதற்காக அமர்ந்தார். களைப்பால் உறக்கம் தழுவ, துயிலத் தொடங்கினார்.

அப்போது அவருடைய கனவில் தோன்றிய காளியம்மன், “”உனக்கு அருகே உள்ள திரிசூலத்தில் நான் எழுந்தருளியுள்ளேன். அந்தத் திரிசூலத்தை நீ வாழும் சங்கமங்கலம் கிராமத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடுக” என்று அருளினாளாம்.

கனவு கலைந்து எழுந்த அந்த இறையன்பர், அம்மனின் உத்தரவை எண்ணி மனம் உருகினார். அருகில் அந்தத் திரிசூலத்தைக் கண்டு சிலிர்த்தவர், சங்கமங்கலத்தில் அதை முறைப்படி பிரதிஷ்டை செய்துள்ளார். கூடவே அவ்வூரில் இருந்த புராதன காளியம்மனையும் அங்கு குடியமர்த்தி, அழகானதொரு கோயிலும் எழுப்பியுள்ளார்.

“சடைச்சி’ என்னும் ஊரில் திரிசூலத்தைக் கண்டதால் சங்கமங்கலத்தில் எழுந்தருளியுள்ள காளியம்மன் “”ஸ்ரீ சடைச்சி முத்து காளியம்மன்” என்றே அழைக்கப்படுகிறாள்.

மேலும் படிக்க... கோயிலில் குடி கொண்ட கோட்டை காளி

கிடாத்தலைமேடு – ஸ்ரீகாமுகாம்பாள் திருக்கோவில்

[caption id="attachment_693" align="alignleft" width=""]கிடாத்தலைமேடு ஸ்ரீகாமுகாம்பாள்கிடாத்தலைமேடு ஸ்ரீகாமுகாம்பாள்[/caption]மயிலாடுதுறை வட்டத்தில் உள்ளது அந்தத்தலம்! மயிலாடுதுறைக்கு வடமேற்கிலும், திருமணஞ்சேரிக்கு வடக்கிலும் சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அத்தலத்துக்கு “கிடாத்தலை மேடு’ என்று பெயர். இங்கு ஸ்ரீ காமுகாம்பாள் உடனுறை ஸ்ரீ துர்க்காபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

முற்காலத்தில் மகிஷாசுரன் என்னும் குரூர மனம் படைத்த பொல்லாதவன், அனைவரையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை சம்ஹாரம் செய்தாள் துர்க்கை. அந்த எருமைத் தலை அசுரனின் தலை விழுந்த இடமே “கிடாத்தலை மேடு’ என்று சொல்லப்படுகிறது.

இங்குள்ள சிவாலயத்தில் துர்க்கா தேவிக்கு மகத்துவம் அதிகம். கிடாத் தலையின் மேல் நின்ற வண்ணம் காட்சி தரும் இந்த அன்னை, சிவபெருமானை வணங்கி, அவரருளால் இங்கே தனி சந்நிதி கொண்டாள். அதனால் இவ்வூர் ஆதியில், “துர்க்காபுரி’ என்றழைக்கப்பட்டதாகவும், துர்க்கா தேவிக்கு அருளியதால் சிவபெருமான், “துர்க்கா புரீஸ்வரர்’ என்ற திருநாமம் தாங்கியதாகவும் ஊர் மக்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க... கிடாத்தலைமேடு – ஸ்ரீகாமுகாம்பாள் திருக்கோவில்

சமயபுரம் மாரியம்மன் கோயில்

அநீதியையும், தீமைகளையும் அழித்து மக்களுக்குத் தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் அன்னை மாரியம்மன் சமயபுரத்தில் அற்புத அம்மனாக காட்சித் தந்து அருள்பாலித்து கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க... சமயபுரம் மாரியம்மன் கோயில்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

மதுரை மாநகரம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது உலகச் சிறப்பு வாய்ந்த அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்தான். சுமார் 17 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து, பார்வையாளர்கள் அதிசயிக்கும் வகையிலும், கோயிலோடு ஐக்கியப்பட வைக்கும் சக்தியுடன் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

மேலும் படிக்க... மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

கன்னியரை காப்பவர்கள் – சப்த மாதர்கள்!

[caption id="attachment_564" align="alignleft" width=""]சப்தகன்னியர்சப்தகன்னியர்[/caption] பிராம்மி, மகேஸ்வரி, நாராயணி, வராகி, ருத்திராணி, கெüமாரி, சாமுண்டா என்ற ஏழு தேவியரே, “சப்த மாதர்கள்’ என அழைக்கப்படுகின்றனர். பிராம்மி, சருமத்தின் தலைவி. இவளுக்கு அபராதம் செய்தால் தோல் சம்பந்தமான நோய்கள் வரும். இவள் பிரம்மனின் படைப்புத் தொழிலுக்குத் துணை நிற்பவள். இவள் தனது கரங்களில் அபய, ஹஸ்த முத்திரைகளுடன் தண்டம், கமண்டலம், அக்கமாலை மற்றும் எழுத்தாணியுடன் காட்சி தருகின்றாள். புட்டும், சர்க்கரைப்பாகும் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு விநியோகம் செய்தால் பிராம்மி அன்னை சாந்தம் அடைவாள்.

மேலும் படிக்க... கன்னியரை காப்பவர்கள் – சப்த மாதர்கள்!

சித்தம் கவரும் ‘சித்தாடி’ காத்தாயி!

 

கிராமங்களில் சக்தி வழிபாடு மிகவும் பிரசித்தமானது. மக்களுக்கு சக்தி வழிபாட்டில் அழுத்தமான நம்பிக்கையும் வேரூன்றியுள்ளது. காளி, மாரி, பிடாரி, பச்சை, காத்தாயி, பேச்சியாயி, ரேணுகா போன்ற பல்வேறு பெயர்களில்-பல்வேறு நிலைகளில் சக்தி வழிபாடு, மக்கள் வாழ்க்கையோடு ஒன்றியுள்ளது. கொடிய தொற்று நோய்கள்-அம்மை முதலான வெப்பு நோய்கள் அணுகாமலும், நீர்வளம் குன்றாது அவ்வப்போது மழை பொழியவும், பயிர்கள் சேதமடையாமல் இருக்கவும், ஊர் மக்கள் நிம்மதியாக வாழவும் கிராம தேவதைக் கோயில்களில் பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தி மக்கள் நம்பிக்கையோடு வாழ்ந்து வருவதை இன்றும் காண்கிறோம்.

மேலும் படிக்க... சித்தம் கவரும் ‘சித்தாடி’ காத்தாயி!

கொல்கத்தா- தட்சிணேஸ்வர் காளி கோவில்!

உலகம் சுற்றி வலம் வந்த சுவாமி விவேகானந்தர், தன் குருநாதர் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருளால் அமெரிக்காவில் இந்து தர்மத்தை பிரசாரம் செய்தார். அவர் அமெரிக்கா செல்வதற்கு உந்துதலாகவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது இந்தத் தமிழ் மண்தான்! நம் தமிழ் மண்ணின் சேதுபதி மன்னர் சிந்தையில் உதித்த எண்ணத்தால் அமெரிக்க மண்ணில் இந்து தர்மத்தின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இப்படி, வங்க மண்ணுக்கும் தமிழ் மண்ணுக்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பு நீட்டித்து வந்துள்ளது. எனவே, குருநாதர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் உதித்த பாரத நாட்டின் தென்பகுதியில் இருக்கும் நாம், குருதேவரின் புகழ் பரவக் காரணமாக இருந்த அன்னை காளியின் கோவிலுக்குச் சென்று வந்தால் என்ன..? இந்த எண்ணம் உந்த, கொல்கத்தா பயணமானோம்.

மேலும் படிக்க... கொல்கத்தா- தட்சிணேஸ்வர் காளி கோவில்!
error: Content is protected !!